பரிசுத்த வேதாகமம் 2 தெசலோனிக்கேயர் அதிகாரம் 1 – Read Holy Bible Book Of 2 Thessalonians Chapter 1 In Tamil With English Reference
1 - பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:
English:- Paul, Silas And Timothy, To The Church Of The Thessalonians In God Our Father And The Lord Jesus Christ:
2 - நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
English:- Grace And Peace To You From God The Father And The Lord Jesus Christ.
3 - சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.
English:- We Ought Always To Thank God For You, Brothers, And Rightly So, Because Your Faith Is Growing More And More, And The Love Every One Of You Has For Each Other Is Increasing.
4 - நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.
English:- Therefore, Among God's Churches We Boast About Your Perseverance And Faith In All The Persecutions And Trials You Are Enduring.
5 - நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.
English:- All This Is Evidence That God's Judgment Is Right, And As A Result You Will Be Counted Worthy Of The Kingdom Of God, For Which You Are Suffering.
6 - உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
English:- God Is Just: He Will Pay Back Trouble To Those Who Trouble You
7 - தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,
English:- And Give Relief To You Who Are Troubled, And To Us As Well. This Will Happen When The Lord Jesus Is Revealed From Heaven In Blazing Fire With His Powerful Angels.
8 - கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
English:- He Will Punish Those Who Do Not Know God And Do Not Obey The Gospel Of Our Lord Jesus.
9 - அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது,
English:- They Will Be Punished With Everlasting Destruction And Shut Out From The Presence Of The Lord And From The Majesty Of His Power
10 - அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.
English:- On The Day He Comes To Be Glorified In His Holy People And To Be Marveled At Among All Those Who Have Believed. This Includes You, Because You Believed Our Testimony To You.
11 - ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக;
English:- With This In Mind, We Constantly Pray For You, That Our God May Count You Worthy Of His Calling, And That By His Power He May Fulfill Every Good Purpose Of Yours And Every Act Prompted By Your Faith.
12 - நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
English:- We Pray This So That The Name Of Our Lord Jesus May Be Glorified In You, And You In Him, According To The Grace Of Our God And The Lord Jesus Christ.