யாத்திராகமம் 1 – Exodus 1


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் யாத்திராகமம் அதிகாரம் 1 – Read Holy Bible Book Of Exodus Chapter 1 In Tamil With English Reference


1 - எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,

English:- These Are The Names Of The Sons Of Israel Who Went To Egypt With Jacob, Each With His Family:

யாத்திராகமம் 1-1 - Exodus 1-1எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,

2 - இசக்கார், செபுலோன், பென்யமீன்,

English:- Reuben, Simeon, Levi And Judah;


3 - தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.

English:- Issachar, Zebulun And Benjamin;

யாத்திராகமம் 1-3 - Exodus 1-3தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.

4 - இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங்கூடப் போனார்கள்.

English:- Dan And Naphtali; Gad And Asher.

யாத்திராகமம் 1-4 - Exodus 1-4இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங்கூடப் போனார்கள்.

5 - யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.

English:- The Descendants Of Jacob Numbered Seventy In All; Joseph Was Already In Egypt.

யாத்திராகமம் 1-5 - Exodus 1-5யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.

6 - யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணமடைந்தார்கள்.

English:- Now Joseph And All His Brothers And All That Generation Died,

யாத்திராகமம் 1-6 - Exodus 1-6யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணமடைந்தார்கள்.

7 - இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.

English:- But The Israelites Were Fruitful And Multiplied Greatly And Became Exceedingly Numerous, So That The Land Was Filled With Them.

யாத்திராகமம் 1-7 - Exodus 1-7இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.

8 - யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.

English:- Then A New King, Who Did Not Know About Joseph, Came To Power In Egypt.

யாத்திராகமம் 1-8 - Exodus 1-8யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.

9 - அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.

English:- "Look," He Said To His People, "The Israelites Have Become Much Too Numerous For Us.

யாத்திராகமம் 1-9 - Exodus 1-9அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.

10 - அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும், நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான்.

English:- Come, We Must Deal Shrewdly With Them Or They Will Become Even More Numerous And, If War Breaks Out, Will Join Our Enemies, Fight Against Us And Leave The Country."


11 - அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.

English:- So They Put Slave Masters Over Them To Oppress Them With Forced Labor, And They Built Pithom And Rameses As Store Cities For Pharaoh.

யாத்திராகமம் 1-11 - Exodus 1-11அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.

12 - ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

English:- But The More They Were Oppressed, The More They Multiplied And Spread; So The Egyptians Came To Dread The Israelites

யாத்திராகமம் 1-12 - Exodus 1-12ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

13 - எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள்.

English:- And Worked Them Ruthlessly.

யாத்திராகமம் 1-13 - Exodus 1-13எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள்.

14 - சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.

English:- They Made Their Lives Bitter With Hard Labor In Brick And Mortar And With All Kinds Of Work In The Fields; In All Their Hard Labor The Egyptians Used Them Ruthlessly.

யாத்திராகமம் 1-14 - Exodus 1-14சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.

15 - அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி:

English:- The King Of Egypt Said To The Hebrew Midwives, Whose Names Were Shiphrah And Puah,

யாத்திராகமம் 1-15 - Exodus 1-15அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி:

16 - நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.

English:- "When You Help The Hebrew Women In Childbirth And Observe Them On The Delivery Stool, If It Is A Boy, Kill Him; But If It Is A Girl, Let Her Live."

யாத்திராகமம் 1-16 - Exodus 1-16நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.

17 - மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.

English:- The Midwives, However, Feared God And Did Not Do What The King Of Egypt Had Told Them To Do; They Let The Boys Live.

யாத்திராகமம் 1-17 - Exodus 1-17மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.

18 - அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.

English:- Then The King Of Egypt Summoned The Midwives And Asked Them, "Why Have You Done This? Why Have You Let The Boys Live?"

யாத்திராகமம் 1-18 - Exodus 1-18அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.

19 - அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்.

English:- The Midwives Answered Pharaoh, "Hebrew Women Are Not Like Egyptian Women; They Are Vigorous And Give Birth Before The Midwives Arrive."

யாத்திராகமம் 1-19 - Exodus 1-19அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்.

20 - இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள்.

English:- So God Was Kind To The Midwives And The People Increased And Became Even More Numerous.


21 - மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.

English:- And Because The Midwives Feared God, He Gave Them Families Of Their Own.

யாத்திராகமம் 1-21 - Exodus 1-21மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.

22 - அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.

English:- Then Pharaoh Gave This Order To All His People: "Every Boy That Is Born You Must Throw Into The Nile, But Let Every Girl Live."

யாத்திராகமம் 1-22 - Exodus 1-22அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.


Previous Chapter Next Chapter