பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 33 – Read Holy Bible Book Of Isaiah Chapter 33 In Tamil With English Reference
1 - கொள்ளையிடப்படாதிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத் துரோகம்பண்ணுகிறவனுமாகிய உனக்கு ஐயோ! நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவார்கள்.
English:- Woe To You, O Destroyer, You Who Have Not Been Destroyed! Woe To You, O Traitor, You Who Have Not Been Betrayed! When You Stop Destroying, You Will Be Destroyed; When You Stop Betraying, You Will Be Betrayed.
2 - கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.
English:- O Lord , Be Gracious To Us; We Long For You. Be Our Strength Every Morning, Our Salvation In Time Of Distress.
3 - அமளியின் சத்தத்தினாலே ஜனங்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது ஜாதிகள் சிதறடிக்கப்படுவார்கள்.
English:- At The Thunder Of Your Voice, The Peoples Flee; When You Rise Up, The Nations Scatter.
4 - வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத்திரிகிறதுபோல மனுஷர் அதின்மேல் குதித்துத் திரிவார்கள்.
English:- Your Plunder, O Nations, Is Harvested As By Young Locusts; Like A Swarm Of Locusts Men Pounce On It.
5 - கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.
English:- The Lord Is Exalted, For He Dwells On High; He Will Fill Zion With Justice And Righteousness.
6 - பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.
English:- He Will Be The Sure Foundation For Your Times, A Rich Store Of Salvation And Wisdom And Knowledge; The Fear Of The Lord Is The Key To This Treasure.
7 - இதோ, அவருடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.
English:- Look, Their Brave Men Cry Aloud In The Streets; The Envoys Of Peace Weep Bitterly.
8 - பாதைகள் பாழாயின; வழிப்போக்கர் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை இகழ்ச்சிபண்ணுகிறான்; மனுஷனை எண்ணாதேபோகிறான்.
English:- The Highways Are Deserted, No Travelers Are On The Roads. The Treaty Is Broken, Its Witnesses Are Despised, No One Is Respected.
9 - தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது, சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது.
English:- The Land Mourns And Wastes Away, Lebanon Is Ashamed And Withers; Sharon Is Like The Arabah, And Bashan And Carmel Drop Their Leaves.
10 - இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- "Now Will I Arise," Says The Lord . "Now Will I Be Exalted; Now Will I Be Lifted Up.
11 - பதரைக் கர்ப்பந்தரித்துத் தாளடியைப் பெறுவீர்கள்; அக்கினியைப்போல் உங்கள் சுவாசமே உங்களைப்பட்சிக்கும்.
English:- You Conceive Chaff, You Give Birth To Straw; Your Breath Is A Fire That Consumes You.
12 - ஜனங்கள் சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.
English:- The Peoples Will Be Burned As If To Lime; Like Cut Thornbushes They Will Be Set Ablaze."
13 - தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.
English:- You Who Are Far Away, Hear What I Have Done; You Who Are Near, Acknowledge My Power!
14 - சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்திய ஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.
English:- The Sinners In Zion Are Terrified; Trembling Grips The Godless: "Who Of Us Can Dwell With The Consuming Fire? Who Of Us Can Dwell With Everlasting Burning?"
15 - நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,
English:- He Who Walks Righteously And Speaks What Is Right, Who Rejects Gain From Extortion And Keeps His Hand From Accepting Bribes, Who Stops His Ears Against Plots Of Murder And Shuts His Eyes Against Contemplating Evil-
16 - அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.
English:- This Is The Man Who Will Dwell On The Heights, Whose Refuge Will Be The Mountain Fortress. His Bread Will Be Supplied, And Water Will Not Fail Him.
17 - உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.
English:- Your Eyes Will See The King In His Beauty And View A Land That Stretches Afar.
18 - உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்கன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே?
English:- In Your Thoughts You Will Ponder The Former Terror: "Where Is That Chief Officer? Where Is The One Who Took The Revenue? Where Is The Officer In Charge Of The Towers?"
19 - உனக்கு விளங்காத பாஷையையும், அறிதற்கரிய ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய்.
English:- You Will See Those Arrogant People No More, Those People Of An Obscure Speech, With Their Strange, Incomprehensible Tongue.
20 - நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை.
English:- Look Upon Zion, The City Of Our Festivals; Your Eyes Will See Jerusalem, A Peaceful Abode, A Tent That Will Not Be Moved; Its Stakes Will Never Be Pulled Up, Nor Any Of Its Ropes Broken.
21 - மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை, பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.
English:- There The Lord Will Be Our Mighty One. It Will Be Like A Place Of Broad Rivers And Streams. No Galley With Oars Will Ride Them, No Mighty Ship Will Sail Them.
22 - கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.
English:- For The Lord Is Our Judge, The Lord Is Our Lawgiver, The Lord Is Our King; It Is He Who Will Save Us.
23 - உன் கயிறுகள் தளர்ந்துபோம்; பாய்மரத்தைக் கெட்டிப்படுத்தவும் பாயை விரிக்கவுங் கூடாமற்போம்; அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள்.
English:- Your Rigging Hangs Loose: The Mast Is Not Held Secure, The Sail Is Not Spread. Then An Abundance Of Spoils Will Be Divided And Even The Lame Will Carry Off Plunder.
24 - வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.
English:- No One Living In Zion Will Say, "I Am Ill"; And The Sins Of Those Who Dwell There Will Be Forgiven.