பரிசுத்த வேதாகமம் யோவேல் அதிகாரம் 1 – Read Holy Bible Book Of Joel Chapter 1 In Tamil With English Reference
1 - பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
English:- The Word Of The Lord That Came To Joel Son Of Pethuel.
2 - முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா?
English:- Hear This, You Elders; Listen, All Who Live In The Land. Has Anything Like This Ever Happened In Your Days Or In The Days Of Your Forefathers?
3 - இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.
English:- Tell It To Your Children, And Let Your Children Tell It To Their Children, And Their Children To The Next Generation.
4 - பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.
English:- What The Locust Swarm Has Left The Great Locusts Have Eaten; What The Great Locusts Have Left The Young Locusts Have Eaten; What The Young Locusts Have Left Other Locusts Have Eaten.
5 - வெறியரே, விழித்து எழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது.
English:- Wake Up, You Drunkards, And Weep! Wail, All You Drinkers Of Wine; Wail Because Of The New Wine, For It Has Been Snatched From Your Lips.
6 - எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி உன் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு.
English:- A Nation Has Invaded My Land, Powerful And Without Number; It Has The Teeth Of A Lion, The Fangs Of A Lioness.
7 - என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று.
English:- It Has Laid Waste My Vines And Ruined My Fig Trees. It Has Stripped Off Their Bark And Thrown It Away, Leaving Their Branches White.
8 - தன் பாலியவயதின் புருஷனுக்காக இரட்டுடுத்தியிருக்கிற பெண்ணைப்போலப் புலம்பு.
English:- Mourn Like A Virgin In Sackcloth Grieving For The Husband Of Her Youth.
9 - போஜனபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அற்றுப்போயின; கர்த்தரின் ஊழியக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிறார்கள்.
English:- Grain Offerings And Drink Offerings Are Cut Off From The House Of The Lord . The Priests Are In Mourning, Those Who Minister Before The Lord .
10 - வயல்வெளி பாழாயிற்று, பூமி துக்கங்கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சரசம் வற்றிப்போயிற்று; எண்ணெய் மாண்டுபோயிற்று.
English:- The Fields Are Ruined, The Ground Is Dried Up ; The Grain Is Destroyed, The New Wine Is Dried Up, The Oil Fails.
11 - பயிரிடுங் குடிகளே, வெட்கப்படுங்கள்; கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; திராட்சத்தோட்டக்காரரே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோயிற்று.
English:- Despair, You Farmers, Wail, You Vine Growers; Grieve For The Wheat And The Barley, Because The Harvest Of The Field Is Destroyed.
12 - திராட்சச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின; சந்தோஷம் மனுபுத்திரரைவிட்டு ஒழிந்துபோயிற்று
English:- The Vine Is Dried Up And The Fig Tree Is Withered; The Pomegranate, The Palm And The Apple Tree- All The Trees Of The Field-are Dried Up. Surely The Joy Of Mankind Is Withered Away.
13 - ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள்; என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
English:- Put On Sackcloth, O Priests, And Mourn; Wail, You Who Minister Before The Altar. Come, Spend The Night In Sackcloth, You Who Minister Before My God; For The Grain Offerings And Drink Offerings Are Withheld From The House Of Your God.
14 - பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
English:- Declare A Holy Fast; Call A Sacred Assembly. Summon The Elders And All Who Live In The Land To The House Of The Lord Your God, And Cry Out To The Lord .
15 - அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.
English:- Alas For That Day! For The Day Of The Lord Is Near; It Will Come Like Destruction From The Almighty.
16 - நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ?
English:- Has Not The Food Been Cut Off Before Our Very Eyes- Joy And Gladness From The House Of Our God?
17 - விதையானது மண்கட்டிகளின்கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்துபோகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின.
English:- The Seeds Are Shriveled Beneath The Clods. The Storehouses Are In Ruins, The Granaries Have Been Broken Down, For The Grain Has Dried Up.
18 - மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டு மந்தைகளும் சேதமாய்ப்போயிற்று.
English:- How The Cattle Moan! The Herds Mill About Because They Have No Pasture; Even The Flocks Of Sheep Are Suffering.
19 - கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்து, ஜுவாலை வெளியின் விருட்சங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது.
English:- To You, O Lord , I Call, For Fire Has Devoured The Open Pastures And Flames Have Burned Up All The Trees Of The Field.
20 - வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது.
English:- Even The Wild Animals Pant For You; The Streams Of Water Have Dried Up And Fire Has Devoured The Open Pastures.