மத்தேயு 1 – Matthew 1


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் மத்தேயு அதிகாரம் 1 – Read Holy Bible Book Of Matthew Chapter 1 In Tamil With English Reference


1 - ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்சவரலாறு:

English:- A Record Of The Genealogy Of Jesus Christ The Son Of David, The Son Of Abraham:

மத்தேயு 1-1 - Matthew 1-1ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்சவரலாறு:

2 - ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

English:- Abraham Was The Father Of Isaac, Isaac The Father Of Jacob, Jacob The Father Of Judah And His Brothers,


3 - யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

English:- Judah The Father Of Perez And Zerah, Whose Mother Was Tamar, Perez The Father Of Hezron, Hezron The Father Of Ram,

மத்தேயு 1-3 - Matthew 1-3யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

4 - ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;

English:- Ram The Father Of Amminadab, Amminadab The Father Of Nahshon, Nahshon The Father Of Salmon,

மத்தேயு 1-4 - Matthew 1-4ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;

5 - சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;

English:- Salmon The Father Of Boaz, Whose Mother Was Rahab, Boaz The Father Of Obed, Whose Mother Was Ruth, Obed The Father Of Jesse,

மத்தேயு 1-5 - Matthew 1-5சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;

6 - ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;

English:- And Jesse The Father Of King David. David Was The Father Of Solomon, Whose Mother Had Been Uriah's Wife,

மத்தேயு 1-6 - Matthew 1-6ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;

7 - சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்.

English:- Solomon The Father Of Rehoboam, Rehoboam The Father Of Abijah, Abijah The Father Of Asa,

மத்தேயு 1-7 - Matthew 1-7சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்.

8 - ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;

English:- Asa The Father Of Jehoshaphat, Jehoshaphat The Father Of Jehoram, Jehoram The Father Of Uzziah,

மத்தேயு 1-8 - Matthew 1-8ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;

9 - உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;

English:- Uzziah The Father Of Jotham, Jotham The Father Of Ahaz, Ahaz The Father Of Hezekiah,

மத்தேயு 1-9 - Matthew 1-9உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;

10 - எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;

English:- Hezekiah The Father Of Manasseh, Manasseh The Father Of Amon, Amon The Father Of Josiah,


11 - பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.

English:- And Josiah The Father Of Jeconiah And His Brothers At The Time Of The Exile To Babylon.

மத்தேயு 1-11 - Matthew 1-11பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.

12 - பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;

English:- After The Exile To Babylon: Jeconiah Was The Father Of Shealtiel, Shealtiel The Father Of Zerubbabel,

மத்தேயு 1-12 - Matthew 1-12பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;

13 - சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;

English:- Zerubbabel The Father Of Abiud, Abiud The Father Of Eliakim, Eliakim The Father Of Azor,

மத்தேயு 1-13 - Matthew 1-13சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;

14 - ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;

English:- Azor The Father Of Zadok, Zadok The Father Of Akim, Akim The Father Of Eliud,

மத்தேயு 1-14 - Matthew 1-14ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;

15 - எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

English:- Eliud The Father Of Eleazar, Eleazar The Father Of Matthan, Matthan The Father Of Jacob,

மத்தேயு 1-15 - Matthew 1-15எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

16 - யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

English:- And Jacob The Father Of Joseph, The Husband Of Mary, Of Whom Was Born Jesus, Who Is Called Christ.

மத்தேயு 1-16 - Matthew 1-16யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

17 - இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.

English:- Thus There Were Fourteen Generations In All From Abraham To David, Fourteen From David To The Exile To Babylon, And Fourteen From The Exile To The Christ.

மத்தேயு 1-17 - Matthew 1-17இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.

18 - இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

English:- This Is How The Birth Of Jesus Christ Came About: His Mother Mary Was Pledged To Be Married To Joseph, But Before They Came Together, She Was Found To Be With Child Through The Holy Spirit.

மத்தேயு 1-18 - Matthew 1-18இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

19 - அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

English:- Because Joseph Her Husband Was A Righteous Man And Did Not Want To Expose Her To Public Disgrace, He Had In Mind To Divorce Her Quietly.

மத்தேயு 1-19 - Matthew 1-19அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

20 - அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

English:- But After He Had Considered This, An Angel Of The Lord Appeared To Him In A Dream And Said, "Joseph Son Of David, Do Not Be Afraid To Take Mary Home As Your Wife, Because What Is Conceived In Her Is From The Holy Spirit.


21 - அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

English:- She Will Give Birth To A Son, And You Are To Give Him The Name Jesus, Because He Will Save His People From Their Sins."

மத்தேயு 1-21 - Matthew 1-21அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

22 - தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

English:- All This Took Place To Fulfill What The Lord Had Said Through The Prophet:

மத்தேயு 1-22 - Matthew 1-22தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

23 - அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

English:- "The Virgin Will Be With Child And Will Give Birth To A Son, And They Will Call Him Immanuel" --Which Means, "God With Us."

மத்தேயு 1-23 - Matthew 1-23அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

24 - யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;

English:- When Joseph Woke Up, He Did What The Angel Of The Lord Had Commanded Him And Took Mary Home As His Wife.

மத்தேயு 1-24 - Matthew 1-24யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;

25 - அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

English:- But He Had No Union With Her Until She Gave Birth To A Son. And He Gave Him The Name Jesus.

மத்தேயு 1-25 - Matthew 1-25அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.


Previous Chapter Next Chapter