பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 31 – Read Holy Bible Book Of Proverbs Chapter 31 In Tamil With English Reference
1 - ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:
English:- The Sayings Of King Lemuel-an Oracle His Mother Taught Him:
2 - என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,
English:- "O My Son, O Son Of My Womb, O Son Of My Vows,
3 - ஸ்திரீகளுக்கு உன் பெலனையும், ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.
English:- Do Not Spend Your Strength On Women, Your Vigor On Those Who Ruin Kings.
4 - திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
English:- "It Is Not For Kings, O Lemuel- Not For Kings To Drink Wine, Not For Rulers To Crave Beer,
5 - மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
English:- Lest They Drink And Forget What The Law Decrees, And Deprive All The Oppressed Of Their Rights.
6 - மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;
English:- Give Beer To Those Who Are Perishing, Wine To Those Who Are In Anguish;
7 - அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
English:- Let Them Drink And Forget Their Poverty And Remember Their Misery No More.
8 - ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.
English:- "Speak Up For Those Who Cannot Speak For Themselves, For The Rights Of All Who Are Destitute.
9 - உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.
English:- Speak Up And Judge Fairly; Defend The Rights Of The Poor And Needy." Epilogue: The Wife Of Noble Character
10 - குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
English:- A Wife Of Noble Character Who Can Find? She Is Worth Far More Than Rubies.
11 - அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.
English:- Her Husband Has Full Confidence In Her And Lacks Nothing Of Value.
12 - அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.
English:- She Brings Him Good, Not Harm, All The Days Of Her Life.
13 - ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.
English:- She Selects Wool And Flax And Works With Eager Hands.
14 - அவள் வியாபாரக் கப்பல்களைப் போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
English:- She Is Like The Merchant Ships, Bringing Her Food From Afar.
15 - இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
English:- She Gets Up While It Is Still Dark; She Provides Food For Her Family And Portions For Her Servant Girls.
16 - ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
English:- She Considers A Field And Buys It; Out Of Her Earnings She Plants A Vineyard.
17 - தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
English:- She Sets About Her Work Vigorously; Her Arms Are Strong For Her Tasks.
18 - தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
English:- She Sees That Her Trading Is Profitable, And Her Lamp Does Not Go Out At Night.
19 - தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
English:- In Her Hand She Holds The Distaff And Grasps The Spindle With Her Fingers.
20 - சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
English:- She Opens Her Arms To The Poor And Extends Her Hands To The Needy.
21 - தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
English:- When It Snows, She Has No Fear For Her Household; For All Of Them Are Clothed In Scarlet.
22 - இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லியபுடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.
English:- She Makes Coverings For Her Bed; She Is Clothed In Fine Linen And Purple.
23 - அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.
English:- Her Husband Is Respected At The City Gate, Where He Takes His Seat Among The Elders Of The Land.
24 - மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
English:- She Makes Linen Garments And Sells Them, And Supplies The Merchants With Sashes.
25 - அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள்.
English:- She Is Clothed With Strength And Dignity; She Can Laugh At The Days To Come.
26 - தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.
English:- She Speaks With Wisdom, And Faithful Instruction Is On Her Tongue.
27 - அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.
English:- She Watches Over The Affairs Of Her Household And Does Not Eat The Bread Of Idleness.
28 - அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து:
English:- Her Children Arise And Call Her Blessed; Her Husband Also, And He Praises Her:
29 - அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.
English:- "Many Women Do Noble Things, But You Surpass Them All."
30 - சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
English:- Charm Is Deceptive, And Beauty Is Fleeting; But A Woman Who Fears The Lord Is To Be Praised.
31 - அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.
English:- Give Her The Reward She Has Earned, And Let Her Works Bring Her Praise At The City Gate.