பரிசுத்த வேதாகமம் 1 கொரிந்தியர் அதிகாரம் 2 – Read Holy Bible Book Of 1 Corinthians Chapter 2 In Tamil With English Reference
1 - சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.
English:- When I Came To You, Brothers, I Did Not Come With Eloquence Or Superior Wisdom As I Proclaimed To You The Testimony About God.
2 - இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
English:- For I Resolved To Know Nothing While I Was With You Except Jesus Christ And Him Crucified.
3 - அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.
English:- I Came To You In Weakness And Fear, And With Much Trembling.
4 - உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
English:- My Message And My Preaching Were Not With Wise And Persuasive Words, But With A Demonstration Of The Spirit's Power,
5 - என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.
English:- So That Your Faith Might Not Rest On Men's Wisdom, But On God's Power.
6 - அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,
English:- We Do, However, Speak A Message Of Wisdom Among The Mature, But Not The Wisdom Of This Age Or Of The Rulers Of This Age, Who Are Coming To Nothing.
7 - உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
English:- No, We Speak Of God's Secret Wisdom, A Wisdom That Has Been Hidden And That God Destined For Our Glory Before Time Began.
8 - அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.
English:- None Of The Rulers Of This Age Understood It, For If They Had, They Would Not Have Crucified The Lord Of Glory.
9 - எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
English:- However, As It Is Written: "No Eye Has Seen, No Ear Has Heard, No Mind Has Conceived What God Has Prepared For Those Who Love Him" --
10 - நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
English:- But God Has Revealed It To Us By His Spirit.
11 - மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
English:- The Spirit Searches All Things, Even The Deep Things Of God. For Who Among Men Knows The Thoughts Of A Man Except The Man's Spirit Within Him? In The Same Way No One Knows The Thoughts Of God Except The Spirit Of God.
12 - நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
English:- We Have Not Received The Spirit Of The World But The Spirit Who Is From God, That We May Understand What God Has Freely Given Us.
13 - அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
English:- This Is What We Speak, Not In Words Taught Us By Human Wisdom But In Words Taught By The Spirit, Expressing Spiritual Truths In Spiritual Words.
14 - ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
English:- The Man Without The Spirit Does Not Accept The Things That Come From The Spirit Of God, For They Are Foolishness To Him, And He Cannot Understand Them, Because They Are Spiritually Discerned.
15 - ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
English:- The Spiritual Man Makes Judgments About All Things, But He Himself Is Not Subject To Any Man's Judgment:
16 - கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.
English:- "For Who Has Known The Mind Of The Lord That He May Instruct Him?" But We Have The Mind Of Christ.