பரிசுத்த வேதாகமம் 1 கொரிந்தியர் அதிகாரம் 3 – Read Holy Bible Book Of 1 Corinthians Chapter 3 In Tamil With English Reference
1 - மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.
English:- Brothers, I Could Not Address You As Spiritual But As Worldly--mere Infants In Christ.
2 - நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
English:- I Gave You Milk, Not Solid Food, For You Were Not Yet Ready For It. Indeed, You Are Still Not Ready.
3 - பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
English:- You Are Still Worldly. For Since There Is Jealousy And Quarreling Among You, Are You Not Worldly? Are You Not Acting Like Mere Men?
4 - ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?
English:- For When One Says, "I Follow Paul," And Another, "I Follow Apollos," Are You Not Mere Men?
5 - பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.
English:- What, After All, Is Apollos? And What Is Paul? Only Servants, Through Whom You Came To Believe--as The Lord Has Assigned To Each His Task.
6 - நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
English:- I Planted The Seed, Apollos Watered It, But God Made It Grow.
7 - அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
English:- So Neither He Who Plants Nor He Who Waters Is Anything, But Only God, Who Makes Things Grow.
8 - மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.
English:- The Man Who Plants And The Man Who Waters Have One Purpose, And Each Will Be Rewarded According To His Own Labor.
9 - நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
English:- For We Are God's Fellow Workers; You Are God's Field, God's Building.
10 - எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
English:- By The Grace God Has Given Me, I Laid A Foundation As An Expert Builder, And Someone Else Is Building On It. But Each One Should Be Careful How He Builds.
11 - போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
English:- For No One Can Lay Any Foundation Other Than The One Already Laid, Which Is Jesus Christ.
12 - ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,
English:- If Any Man Builds On This Foundation Using Gold, Silver, Costly Stones, Wood, Hay Or Straw,
13 - அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.
English:- His Work Will Be Shown For What It Is, Because The Day Will Bring It To Light. It Will Be Revealed With Fire, And The Fire Will Test The Quality Of Each Man's Work.
14 - அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.
English:- If What He Has Built Survives, He Will Receive His Reward.
15 - ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.
English:- If It Is Burned Up, He Will Suffer Loss; He Himself Will Be Saved, But Only As One Escaping Through The Flames.
16 - நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
English:- Don't You Know That You Yourselves Are God's Temple And That God's Spirit Lives In You?
17 - ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
English:- If Anyone Destroys God's Temple, God Will Destroy Him; For God's Temple Is Sacred, And You Are That Temple.
18 - ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக, இவ்வுலகத்திலே உங்களிலொருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.
English:- Do Not Deceive Yourselves. If Any One Of You Thinks He Is Wise By The Standards Of This Age, He Should Become A "Fool" So That He May Become Wise.
19 - இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
English:- For The Wisdom Of This World Is Foolishness In God's Sight. As It Is Written: "He Catches The Wise In Their Craftiness" ;
20 - ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.
English:- And Again, "The Lord Knows That The Thoughts Of The Wise Are Futile."
21 - இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;
English:- So Then, No More Boasting About Men! All Things Are Yours,
22 - பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;
English:- Whether Paul Or Apollos Or Cephas Or The World Or Life Or Death Or The Present Or The Future--all Are Yours,
23 - நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.
English:- And You Are Of Christ, And Christ Is Of God.