பரிசுத்த வேதாகமம் 1 கொரிந்தியர் அதிகாரம் 4 – Read Holy Bible Book Of 1 Corinthians Chapter 4 In Tamil With English Reference
1 - இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.
English:- So Then, Men Ought To Regard Us As Servants Of Christ And As Those Entrusted With The Secret Things Of God.
2 - மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.
English:- Now It Is Required That Those Who Have Been Given A Trust Must Prove Faithful.
3 - ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.
English:- I Care Very Little If I Am Judged By You Or By Any Human Court; Indeed, I Do Not Even Judge Myself.
4 - என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.
English:- My Conscience Is Clear, But That Does Not Make Me Innocent. It Is The Lord Who Judges Me.
5 - ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
English:- Therefore Judge Nothing Before The Appointed Time; Wait Till The Lord Comes. He Will Bring To Light What Is Hidden In Darkness And Will Expose The Motives Of Men's Hearts. At That Time Each Will Receive His Praise From God.
6 - சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.
English:- Now, Brothers, I Have Applied These Things To Myself And Apollos For Your Benefit, So That You May Learn From Us The Meaning Of The Saying, "Do Not Go Beyond What Is Written." Then You Will Not Take Pride In One Man Over Against Another.
7 - அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?
English:- For Who Makes You Different From Anyone Else? What Do You Have That You Did Not Receive? And If You Did Receive It, Why Do You Boast As Though You Did Not?
8 - இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே.
English:- Already You Have All You Want! Already You Have Become Rich! You Have Become Kings--and That Without Us! How I Wish That You Really Had Become Kings So That We Might Be Kings With You!
9 - எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.
English:- For It Seems To Me That God Has Put Us Apostles On Display At The End Of The Procession, Like Men Condemned To Die In The Arena. We Have Been Made A Spectacle To The Whole Universe, To Angels As Well As To Men.
10 - நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.
English:- We Are Fools For Christ, But You Are So Wise In Christ! We Are Weak, But You Are Strong! You Are Honored, We Are Dishonored!
11 - இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.
English:- To This Very Hour We Go Hungry And Thirsty, We Are In Rags, We Are Brutally Treated, We Are Homeless.
12 - எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.
English:- We Work Hard With Our Own Hands. When We Are Cursed, We Bless; When We Are Persecuted, We Endure It;
13 - தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.
English:- When We Are Slandered, We Answer Kindly. Up To This Moment We Have Become The Scum Of The Earth, The Refuse Of The World.
14 - உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
English:- I Am Not Writing This To Shame You, But To Warn You, As My Dear Children.
15 - கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தில் நான் உங்களைப் பெற்றேன்.
English:- Even Though You Have Ten Thousand Guardians In Christ, You Do Not Have Many Fathers, For In Christ Jesus I Became Your Father Through The Gospel.
16 - ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
English:- Therefore I Urge You To Imitate Me.
17 - இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.
English:- For This Reason I Am Sending To You Timothy, My Son Whom I Love, Who Is Faithful In The Lord. He Will Remind You Of My Way Of Life In Christ Jesus, Which Agrees With What I Teach Everywhere In Every Church.
18 - நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.
English:- Some Of You Have Become Arrogant, As If I Were Not Coming To You.
19 - ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
English:- But I Will Come To You Very Soon, If The Lord Is Willing, And Then I Will Find Out Not Only How These Arrogant People Are Talking, But What Power They Have.
20 - தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
English:- For The Kingdom Of God Is Not A Matter Of Talk But Of Power.
21 - உங்களுக்கு என்னவேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?
English:- What Do You Prefer? Shall I Come To You With A Whip, Or In Love And With A Gentle Spirit?