பரிசுத்த வேதாகமம் 1 கொரிந்தியர் அதிகாரம் 6 – Read Holy Bible Book Of 1 Corinthians Chapter 6 In Tamil With English Reference
1 - உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?
English:- If Any Of You Has A Dispute With Another, Dare He Take It Before The Ungodly For Judgment Instead Of Before The Saints?
2 - பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?
English:- Do You Not Know That The Saints Will Judge The World? And If You Are To Judge The World, Are You Not Competent To Judge Trivial Cases?
3 - தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி?
English:- Do You Not Know That We Will Judge Angels? How Much More The Things Of This Life!
4 - இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள்.
English:- Therefore, If You Have Disputes About Such Matters, Appoint As Judges Even Men Of Little Account In The Church!
5 - உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா?
English:- I Say This To Shame You. Is It Possible That There Is Nobody Among You Wise Enough To Judge A Dispute Between Believers?
6 - சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான்.
English:- But Instead, One Brother Goes To Law Against Another--and This In Front Of Unbelievers!
7 - நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?
English:- The Very Fact That You Have Lawsuits Among You Means You Have Been Completely Defeated Already. Why Not Rather Be Wronged? Why Not Rather Be Cheated?
8 - நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே.
English:- Instead, You Yourselves Cheat And Do Wrong, And You Do This To Your Brothers.
9 - அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
English:- Do You Not Know That The Wicked Will Not Inherit The Kingdom Of God? Do Not Be Deceived: Neither The Sexually Immoral Nor Idolaters Nor Adulterers Nor Male Prostitutes Nor Homosexual Offenders
10 - திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
English:- Nor Thieves Nor The Greedy Nor Drunkards Nor Slanderers Nor Swindlers Will Inherit The Kingdom Of God.
11 - உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
English:- And That Is What Some Of You Were. But You Were Washed, You Were Sanctified, You Were Justified In The Name Of The Lord Jesus Christ And By The Spirit Of Our God.
12 - எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
English:- "Everything Is Permissible For Me"--but Not Everything Is Beneficial. "Everything Is Permissible For Me"--but I Will Not Be Mastered By Anything.
13 - வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.
English:- "Food For The Stomach And The Stomach For Food"--but God Will Destroy Them Both. The Body Is Not Meant For Sexual Immorality, But For The Lord, And The Lord For The Body.
14 - தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்.
English:- By His Power God Raised The Lord From The Dead, And He Will Raise Us Also.
15 - உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.
English:- Do You Not Know That Your Bodies Are Members Of Christ Himself? Shall I Then Take The Members Of Christ And Unite Them With A Prostitute? Never!
16 - வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
English:- Do You Not Know That He Who Unites Himself With A Prostitute Is One With Her In Body? For It Is Said, "The Two Will Become One Flesh."
17 - அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.
English:- But He Who Unites Himself With The Lord Is One With Him In Spirit.
18 - வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
English:- Flee From Sexual Immorality. All Other Sins A Man Commits Are Outside His Body, But He Who Sins Sexually Sins Against His Own Body.
19 - உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
English:- Do You Not Know That Your Body Is A Temple Of The Holy Spirit, Who Is In You, Whom You Have Received From God? You Are Not Your Own;
20 - கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
English:- You Were Bought At A Price. Therefore Honor God With Your Body.