பரிசுத்த வேதாகமம் 1 சாமுவேல் அதிகாரம் 16 – Read Holy Bible Book Of 1 Samuel Chapter 16 In Tamil With English Reference
1 - கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
English:- The Lord Said To Samuel, "How Long Will You Mourn For Saul, Since I Have Rejected Him As King Over Israel? Fill Your Horn With Oil And Be On Your Way; I Am Sending You To Jesse Of Bethlehem. I Have Chosen One Of His Sons To Be King."
2 - அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,
English:- But Samuel Said, "How Can I Go? Saul Will Hear About It And Kill Me." The Lord Said, "Take A Heifer With You And Say, 'I Have Come To Sacrifice To The Lord .'
3 - ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்.
English:- Invite Jesse To The Sacrifice, And I Will Show You What To Do. You Are To Anoint For Me The One I Indicate."
4 - கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.
English:- Samuel Did What The Lord Said. When He Arrived At Bethlehem, The Elders Of The Town Trembled When They Met Him. They Asked, "Do You Come In Peace?"
5 - அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம் பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான்.
English:- Samuel Replied, "Yes, In Peace; I Have Come To Sacrifice To The Lord . Consecrate Yourselves And Come To The Sacrifice With Me." Then He Consecrated Jesse And His Sons And Invited Them To The Sacrifice.
6 - அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்றான்.
English:- When They Arrived, Samuel Saw Eliab And Thought, "Surely The Lord 'S Anointed Stands Here Before The Lord ."
7 - கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
English:- But The Lord Said To Samuel, "Do Not Consider His Appearance Or His Height, For I Have Rejected Him. The Lord Does Not Look At The Things Man Looks At. Man Looks At The Outward Appearance, But The Lord Looks At The Heart."
8 - அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை என்றான்.
English:- Then Jesse Called Abinadab And Had Him Pass In Front Of Samuel. But Samuel Said, "The Lord Has Not Chosen This One Either."
9 - ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான்.
English:- Jesse Then Had Shammah Pass By, But Samuel Said, "Nor Has The Lord Chosen This One."
10 - இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;
English:- Jesse Had Seven Of His Sons Pass Before Samuel, But Samuel Said To Him, "The Lord Has Not Chosen These."
11 - உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.
English:- So He Asked Jesse, "Are These All The Sons You Have?" "There Is Still The Youngest," Jesse Answered, "But He Is Tending The Sheep." Samuel Said, "Send For Him; We Will Not Sit Down Until He Arrives."
12 - ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகியகண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன் தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.
English:- So He Sent And Had Him Brought In. He Was Ruddy, With A Fine Appearance And Handsome Features. Then The Lord Said, "Rise And Anoint Him; He Is The One."
13 - அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.
English:- So Samuel Took The Horn Of Oil And Anointed Him In The Presence Of His Brothers, And From That Day On The Spirit Of The Lord Came Upon David In Power. Samuel Then Went To Ramah.
14 - கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.
English:- Now The Spirit Of The Lord Had Departed From Saul, And An Evil Spirit From The Lord Tormented Him.
15 - அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே.
English:- Saul's Attendants Said To Him, "See, An Evil Spirit From God Is Tormenting You.
16 - சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்.
English:- Let Our Lord Command His Servants Here To Search For Someone Who Can Play The Harp. He Will Play When The Evil Spirit From God Comes Upon You, And You Will Feel Better."
17 - சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்.
English:- So Saul Said To His Attendants, "Find Someone Who Plays Well And Bring Him To Me."
18 - அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.
English:- One Of The Servants Answered, "I Have Seen A Son Of Jesse Of Bethlehem Who Knows How To Play The Harp. He Is A Brave Man And A Warrior. He Speaks Well And Is A Fine-looking Man. And The Lord Is With Him."
19 - அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.
English:- Then Saul Sent Messengers To Jesse And Said, "Send Me Your Son David, Who Is With The Sheep."
20 - அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான்.
English:- So Jesse Took A Donkey Loaded With Bread, A Skin Of Wine And A Young Goat And Sent Them With His Son David To Saul.
21 - அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.
English:- David Came To Saul And Entered His Service. Saul Liked Him Very Much, And David Became One Of His Armor-bearers.
22 - சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவுகிடைத்தது என்று சொல்லச்சொன்னான்.
English:- Then Saul Sent Word To Jesse, Saying, "Allow David To Remain In My Service, For I Am Pleased With Him."
23 - அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.
English:- Whenever The Spirit From God Came Upon Saul, David Would Take His Harp And Play. Then Relief Would Come To Saul; He Would Feel Better, And The Evil Spirit Would Leave Him.