பரிசுத்த வேதாகமம் 1 சாமுவேல் அதிகாரம் 28 – Read Holy Bible Book Of 1 Samuel Chapter 28 In Tamil With English Reference
1 - அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான்.
English:- In Those Days The Philistines Gathered Their Forces To Fight Against Israel. Achish Said To David, "You Must Understand That You And Your Men Will Accompany Me In The Army."
2 - தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான்.
English:- David Said, "Then You Will See For Yourself What Your Servant Can Do." Achish Replied, "Very Well, I Will Make You My Bodyguard For Life."
3 - சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்தி விட்டான்.
English:- Now Samuel Was Dead, And All Israel Had Mourned For Him And Buried Him In His Own Town Of Ramah. Saul Had Expelled The Mediums And Spiritists From The Land.
4 - பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்.
English:- The Philistines Assembled And Came And Set Up Camp At Shunem, While Saul Gathered All The Israelites And Set Up Camp At Gilboa.
5 - சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.
English:- When Saul Saw The Philistine Army, He Was Afraid; Terror Filled His Heart.
6 - சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும் போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.
English:- He Inquired Of The Lord , But The Lord Did Not Answer Him By Dreams Or Urim Or Prophets.
7 - அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.
English:- Saul Then Said To His Attendants, "Find Me A Woman Who Is A Medium, So I May Go And Inquire Of Her." "There Is One In Endor," They Said.
8 - அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம்பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான்.
English:- So Saul Disguised Himself, Putting On Other Clothes, And At Night He And Two Men Went To The Woman. "Consult A Spirit For Me," He Said, "And Bring Up For Me The One I Name."
9 - அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.
English:- But The Woman Said To Him, "Surely You Know What Saul Has Done. He Has Cut Off The Mediums And Spiritists From The Land. Why Have You Set A Trap For My Life To Bring About My Death?"
10 - அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.
English:- Saul Swore To Her By The Lord , "As Surely As The Lord Lives, You Will Not Be Punished For This."
11 - அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப் பண்ண வேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்.
English:- Then The Woman Asked, "Whom Shall I Bring Up For You?" "Bring Up Samuel," He Said.
12 - அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.
English:- When The Woman Saw Samuel, She Cried Out At The Top Of Her Voice And Said To Saul, "Why Have You Deceived Me? You Are Saul!"
13 - ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.
English:- The King Said To Her, "Don't Be Afraid. What Do You See?" The Woman Said, "I See A Spirit Coming Up Out Of The Ground."
14 - அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.
English:- "What Does He Look Like?" He Asked. "An Old Man Wearing A Robe Is Coming Up," She Said. Then Saul Knew It Was Samuel, And He Bowed Down And Prostrated Himself With His Face To The Ground.
15 - சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.
English:- Samuel Said To Saul, "Why Have You Disturbed Me By Bringing Me Up?" "I Am In Great Distress," Saul Said. "The Philistines Are Fighting Against Me, And God Has Turned Away From Me. He No Longer Answers Me, Either By Prophets Or By Dreams. So I Have Called On You To Tell Me What To Do."
16 - அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்?
English:- Samuel Said, "Why Do You Consult Me, Now That The Lord Has Turned Away From You And Become Your Enemy?
17 - கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.
English:- The Lord Has Done What He Predicted Through Me. The Lord Has Torn The Kingdom Out Of Your Hands And Given It To One Of Your Neighbors-to David.
18 - நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றைய தினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.
English:- Because You Did Not Obey The Lord Or Carry Out His Fierce Wrath Against The Amalekites, The Lord Has Done This To You Today.
19 - கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
English:- The Lord Will Hand Over Both Israel And You To The Philistines, And Tomorrow You And Your Sons Will Be With Me. The Lord Will Also Hand Over The Army Of Israel To The Philistines."
20 - அந்தக்ஷணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.
English:- Immediately Saul Fell Full Length On The Ground, Filled With Fear Because Of Samuel's Words. His Strength Was Gone, For He Had Eaten Nothing All That Day And Night.
21 - அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
English:- When The Woman Came To Saul And Saw That He Was Greatly Shaken, She Said, "Look, Your Maidservant Has Obeyed You. I Took My Life In My Hands And Did What You Told Me To Do.
22 - இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக, அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.
English:- Now Please Listen To Your Servant And Let Me Give You Some Food So You May Eat And Have The Strength To Go On Your Way."
23 - அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.
English:- He Refused And Said, "I Will Not Eat." But His Men Joined The Woman In Urging Him, And He Listened To Them. He Got Up From The Ground And Sat On The Couch.
24 - அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்தகன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு,
English:- The Woman Had A Fattened Calf At The House, Which She Butchered At Once. She Took Some Flour, Kneaded It And Baked Bread Without Yeast.
25 - சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப் போனார்கள்.
English:- Then She Set It Before Saul And His Men, And They Ate. That Same Night They Got Up And Left.