பரிசுத்த வேதாகமம் 1 தீமோத்தேயு அதிகாரம் 2 – Read Holy Bible Book Of 1 Timothy Chapter 2 In Tamil With English Reference
1 - நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
English:- I Urge, Then, First Of All, That Requests, Prayers, Intercession And Thanksgiving Be Made For Everyone--
2 - நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
English:- For Kings And All Those In Authority, That We May Live Peaceful And Quiet Lives In All Godliness And Holiness.
3 - நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
English:- This Is Good, And Pleases God Our Savior,
4 - எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
English:- Who Wants All Men To Be Saved And To Come To A Knowledge Of The Truth.
5 - தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
English:- For There Is One God And One Mediator Between God And Men, The Man Christ Jesus,
6 - எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
English:- Who Gave Himself As A Ransom For All Men--the Testimony Given In Its Proper Time.
7 - இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
English:- And For This Purpose I Was Appointed A Herald And An Apostle--i Am Telling The Truth, I Am Not Lying--and A Teacher Of The True Faith To The Gentiles.
8 - அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
English:- I Want Men Everywhere To Lift Up Holy Hands In Prayer, Without Anger Or Disputing.
9 - ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,
English:- I Also Want Women To Dress Modestly, With Decency And Propriety, Not With Braided Hair Or Gold Or Pearls Or Expensive Clothes,
10 - தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
English:- But With Good Deeds, Appropriate For Women Who Profess To Worship God.
11 - ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.
English:- A Woman Should Learn In Quietness And Full Submission.
12 - உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
English:- I Do Not Permit A Woman To Teach Or To Have Authority Over A Man; She Must Be Silent.
13 - என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
English:- For Adam Was Formed First, Then Eve.
14 - மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
English:- And Adam Was Not The One Deceived; It Was The Woman Who Was Deceived And Became A Sinner.
15 - அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
English:- But Women Will Be Saved Through Childbearing--if They Continue In Faith, Love And Holiness With Propriety.