பரிசுத்த வேதாகமம் 1 தீமோத்தேயு அதிகாரம் 6 – Read Holy Bible Book Of 1 Timothy Chapter 6 In Tamil With English Reference
1 - தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள்.
English:- All Who Are Under The Yoke Of Slavery Should Consider Their Masters Worthy Of Full Respect, So That God's Name And Our Teaching May Not Be Slandered.
2 - விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின் பலனைப் பெற்றுகொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு அதிகமாய் ஊழியஞ்செய்யக்கடவர்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.
English:- Those Who Have Believing Masters Are Not To Show Less Respect For Them Because They Are Brothers. Instead, They Are To Serve Them Even Better, Because Those Who Benefit From Their Service Are Believers, And Dear To Them. These Are The Things You Are To Teach And Urge On Them.
3 - ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
English:- If Anyone Teaches False Doctrines And Does Not Agree To The Sound Instruction Of Our Lord Jesus Christ And To Godly Teaching,
4 - அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,
English:- He Is Conceited And Understands Nothing. He Has An Unhealthy Interest In Controversies And Quarrels About Words That Result In Envy, Strife, Malicious Talk, Evil Suspicions
5 - கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
English:- And Constant Friction Between Men Of Corrupt Mind, Who Have Been Robbed Of The Truth And Who Think That Godliness Is A Means To Financial Gain.
6 - போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
English:- But Godliness With Contentment Is Great Gain.
7 - உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
English:- For We Brought Nothing Into The World, And We Can Take Nothing Out Of It.
8 - உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.
English:- But If We Have Food And Clothing, We Will Be Content With That.
9 - ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
English:- People Who Want To Get Rich Fall Into Temptation And A Trap And Into Many Foolish And Harmful Desires That Plunge Men Into Ruin And Destruction.
10 - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
English:- For The Love Of Money Is A Root Of All Kinds Of Evil. Some People, Eager For Money, Have Wandered From The Faith And Pierced Themselves With Many Griefs.
11 - நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
English:- But You, Man Of God, Flee From All This, And Pursue Righteousness, Godliness, Faith, Love, Endurance And Gentleness.
12 - விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
English:- Fight The Good Fight Of The Faith. Take Hold Of The Eternal Life To Which You Were Called When You Made Your Good Confession In The Presence Of Many Witnesses.
13 - நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு,
English:- In The Sight Of God, Who Gives Life To Everything, And Of Christ Jesus, Who While Testifying Before Pontius Pilate Made The Good Confession, I Charge You
14 - எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
English:- To Keep This Command Without Spot Or Blame Until The Appearing Of Our Lord Jesus Christ,
15 - அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
English:- Which God Will Bring About In His Own Time--god, The Blessed And Only Ruler, The King Of Kings And Lord Of Lords,
16 - ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
English:- Who Alone Is Immortal And Who Lives In Unapproachable Light, Whom No One Has Seen Or Can See. To Him Be Honor And Might Forever. Amen.
17 - இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
English:- Command Those Who Are Rich In This Present World Not To Be Arrogant Nor To Put Their Hope In Wealth, Which Is So Uncertain, But To Put Their Hope In God, Who Richly Provides Us With Everything For Our Enjoyment.
18 - நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,
English:- Command Them To Do Good, To Be Rich In Good Deeds, And To Be Generous And Willing To Share.
19 - நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு,
English:- In This Way They Will Lay Up Treasure For Themselves As A Firm Foundation For The Coming Age, So That They May Take Hold Of The Life That Is Truly Life.
20 - ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
English:- Timothy, Guard What Has Been Entrusted To Your Care. Turn Away From Godless Chatter And The Opposing Ideas Of What Is Falsely Called Knowledge,
21 - சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.
English:- Which Some Have Professed And In So Doing Have Wandered From The Faith. Grace Be With You.