பரிசுத்த வேதாகமம் 2 நாளாகமம் அதிகாரம் 14 – Read Holy Bible Book Of 2 Chronicles Chapter 14 In Tamil With English Reference
1 - அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது.
English:- And Abijah Rested With His Fathers And Was Buried In The City Of David. Asa His Son Succeeded Him As King, And In His Days The Country Was At Peace For Ten Years.
2 - ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.
English:- Asa Did What Was Good And Right In The Eyes Of The Lord His God.
3 - அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,
English:- He Removed The Foreign Altars And The High Places, Smashed The Sacred Stones And Cut Down The Asherah Poles.
4 - தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,
English:- He Commanded Judah To Seek The Lord , The God Of Their Fathers, And To Obey His Laws And Commands.
5 - யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.
English:- He Removed The High Places And Incense Altars In Every Town In Judah, And The Kingdom Was At Peace Under Him.
6 - கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
English:- He Built Up The Fortified Cities Of Judah, Since The Land Was At Peace. No One Was At War With Him During Those Years, For The Lord Gave Him Rest.
7 - அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
English:- "Let Us Build Up These Towns," He Said To Judah, "And Put Walls Around Them, With Towers, Gates And Bars. The Land Is Still Ours, Because We Have Sought The Lord Our God; We Sought Him And He Has Given Us Rest On Every Side." So They Built And Prospered.
8 - யூதாவிலே பரிசையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேருமான சேனை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகள்.
English:- Asa Had An Army Of Three Hundred Thousand Men From Judah, Equipped With Large Shields And With Spears, And Two Hundred And Eighty Thousand From Benjamin, Armed With Small Shields And With Bows. All These Were Brave Fighting Men.
9 - அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான்.
English:- Zerah The Cushite Marched Out Against Them With A Vast Army And Three Hundred Chariots, And Came As Far As Mareshah.
10 - அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
English:- Asa Went Out To Meet Him, And They Took Up Battle Positions In The Valley Of Zephathah Near Mareshah.
11 - ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
English:- Then Asa Called To The Lord His God And Said, "Lord , There Is No One Like You To Help The Powerless Against The Mighty. Help Us, O Lord Our God, For We Rely On You, And In Your Name We Have Come Against This Vast Army. O Lord , You Are Our God; Do Not Let Man Prevail Against You."
12 - அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும்முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.
English:- The Lord Struck Down The Cushites Before Asa And Judah. The Cushites Fled,
13 - அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார்மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளை அடித்து,
English:- And Asa And His Army Pursued Them As Far As Gerar. Such A Great Number Of Cushites Fell That They Could Not Recover; They Were Crushed Before The Lord And His Forces. The Men Of Judah Carried Off A Large Amount Of Plunder.
14 - கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் முறிய அடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாய் அகப்பட்டது.
English:- They Destroyed All The Villages Around Gerar, For The Terror Of The Lord Had Fallen Upon Them. They Plundered All These Villages, Since There Was Much Booty There.
15 - மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
English:- They Also Attacked The Camps Of The Herdsmen And Carried Off Droves Of Sheep And Goats And Camels. Then They Returned To Jerusalem.