பரிசுத்த வேதாகமம் 2 நாளாகமம் அதிகாரம் 19 – Read Holy Bible Book Of 2 Chronicles Chapter 19 In Tamil With English Reference
1 - யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான்.
English:- When Jehoshaphat King Of Judah Returned Safely To His Palace In Jerusalem,
2 - அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.
English:- Jehu The Seer, The Son Of Hanani, Went Out To Meet Him And Said To The King, "Should You Help The Wicked And Love Those Who Hate The Lord ? Because Of This, The Wrath Of The Lord Is Upon You.
3 - ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.
English:- There Is, However, Some Good In You, For You Have Rid The Land Of The Asherah Poles And Have Set Your Heart On Seeking God."
4 - யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான்.
English:- Jehoshaphat Lived In Jerusalem, And He Went Out Again Among The People From Beersheba To The Hill Country Of Ephraim And Turned Them Back To The Lord , The God Of Their Fathers.
5 - அவன் யூதாவின் அரணான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,
English:- He Appointed Judges In The Land, In Each Of The Fortified Cities Of Judah.
6 - அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.
English:- He Told Them, "Consider Carefully What You Do, Because You Are Not Judging For Man But For The Lord , Who Is With You Whenever You Give A Verdict.
7 - ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமுமில்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான்.
English:- Now Let The Fear Of The Lord Be Upon You. Judge Carefully, For With The Lord Our God There Is No Injustice Or Partiality Or Bribery."
8 - அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியரிலும், ஆசாரியரிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக் குறித்தும் விவாதவிஷயங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,
English:- In Jerusalem Also, Jehoshaphat Appointed Some Of The Levites, Priests And Heads Of Israelite Families To Administer The Law Of The Lord And To Settle Disputes. And They Lived In Jerusalem.
9 - அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து செய்யவேண்டியது என்னவென்றால்,
English:- He Gave Them These Orders: "You Must Serve Faithfully And Wholeheartedly In The Fear Of The Lord .
10 - நானாவித இரத்தப்பழிச் சங்கதிகளும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த நானாவித வழக்குச் சங்கதிகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு நேரஸ்தராகாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் நேரஸ்தராகமாட்டீர்கள்.
English:- In Every Case That Comes Before You From Your Fellow Countrymen Who Live In The Cities-whether Bloodshed Or Other Concerns Of The Law, Commands, Decrees Or Ordinances-you Are To Warn Them Not To Sin Against The Lord ; Otherwise His Wrath Will Come On You And Your Brothers. Do This, And You Will Not Sin.
11 - இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.
English:- "Amariah The Chief Priest Will Be Over You In Any Matter Concerning The Lord , And Zebadiah Son Of Ishmael, The Leader Of The Tribe Of Judah, Will Be Over You In Any Matter Concerning The King, And The Levites Will Serve As Officials Before You. Act With Courage, And May The Lord Be With Those Who Do Well."