பரிசுத்த வேதாகமம் 2 நாளாகமம் அதிகாரம் 21 – Read Holy Bible Book Of 2 Chronicles Chapter 21 In Tamil With English Reference
1 - யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான்.
English:- Then Jehoshaphat Rested With His Fathers And Was Buried With Them In The City Of David. And Jehoram His Son Succeeded Him As King.
2 - அவனுக்கு யோசபாத்தின் குமாரராகிய அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா என்னும் சகோதரர் இருந்தார்கள்; இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத்தின் குமாரர்.
English:- Jehoram's Brothers, The Sons Of Jehoshaphat, Were Azariah, Jehiel, Zechariah, Azariahu, Michael And Shephatiah. All These Were Sons Of Jehoshaphat King Of Israel.
3 - அவர்களுடைய தகப்பன் வெள்ளியும், பொன்னும் உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியால், அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்.
English:- Their Father Had Given Them Many Gifts Of Silver And Gold And Articles Of Value, As Well As Fortified Cities In Judah, But He Had Given The Kingdom To Jehoram Because He Was His Firstborn Son.
4 - யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.
English:- When Jehoram Established Himself Firmly Over His Father's Kingdom, He Put All His Brothers To The Sword Along With Some Of The Princes Of Israel.
5 - யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
English:- Jehoram Was Thirty-two Years Old When He Became King, And He Reigned In Jerusalem Eight Years.
6 - அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
English:- He Walked In The Ways Of The Kings Of Israel, As The House Of Ahab Had Done, For He Married A Daughter Of Ahab. He Did Evil In The Eyes Of The Lord .
7 - கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார்.
English:- Nevertheless, Because Of The Covenant The Lord Had Made With David, The Lord Was Not Willing To Destroy The House Of David. He Had Promised To Maintain A Lamp For Him And His Descendants Forever.
8 - அவன் நாட்களில் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
English:- In The Time Of Jehoram, Edom Rebelled Against Judah And Set Up Its Own King.
9 - அதினால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தான்.
English:- So Jehoram Went There With His Officers And All His Chariots. The Edomites Surrounded Him And His Chariot Commanders, But He Rose Up And Broke Through By Night.
10 - ஆகிலும் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணிப் பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், அக்காலத்திலே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.
English:- To This Day Edom Has Been In Rebellion Against Judah. Libnah Revolted At The Same Time, Because Jehoram Had Forsaken The Lord , The God Of His Fathers.
11 - அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான்.
English:- He Had Also Built High Places On The Hills Of Judah And Had Caused The People Of Jerusalem To Prostitute Themselves And Had Led Judah Astray.
12 - அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல்,
English:- Jehoram Received A Letter From Elijah The Prophet, Which Said: "This Is What The Lord , The God Of Your Father David, Says: 'You Have Not Walked In The Ways Of Your Father Jehoshaphat Or Of Asa King Of Judah.
13 - இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம்போகப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரரையும் கொன்றுபோட்டபடியினால்,
English:- But You Have Walked In The Ways Of The Kings Of Israel, And You Have Led Judah And The People Of Jerusalem To Prostitute Themselves, Just As The House Of Ahab Did. You Have Also Murdered Your Own Brothers, Members Of Your Father's House, Men Who Were Better Than You.
14 - இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்.
English:- So Now The Lord Is About To Strike Your People, Your Sons, Your Wives And Everything That Is Yours, With A Heavy Blow.
15 - நீயோ உனக்கு உண்டாகும் குடல்நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.
English:- You Yourself Will Be Very Ill With A Lingering Disease Of The Bowels, Until The Disease Causes Your Bowels To Come Out.' "
16 - அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.
English:- The Lord Aroused Against Jehoram The Hostility Of The Philistines And Of The Arabs Who Lived Near The Cushites.
17 - அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை.
English:- They Attacked Judah, Invaded It And Carried Off All The Goods Found In The King's Palace, Together With His Sons And Wives. Not A Son Was Left To Him Except Ahaziah, The Youngest.
18 - இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.
English:- After All This, The Lord Afflicted Jehoram With An Incurable Disease Of The Bowels.
19 - அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிறகாலத்தில் அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.
English:- In The Course Of Time, At The End Of The Second Year, His Bowels Came Out Because Of The Disease, And He Died In Great Pain. His People Made No Fire In His Honor, As They Had For His Fathers.
20 - அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
English:- Jehoram Was Thirty-two Years Old When He Became King, And He Reigned In Jerusalem Eight Years. He Passed Away, To No One's Regret, And Was Buried In The City Of David, But Not In The Tombs Of The Kings.