பரிசுத்த வேதாகமம் 2 நாளாகமம் அதிகாரம் 27 – Read Holy Bible Book Of 2 Chronicles Chapter 27 In Tamil With English Reference
1 - யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் எருசாள்.
English:- Jotham Was Twenty-five Years Old When He Became King, And He Reigned In Jerusalem Sixteen Years. His Mother's Name Was Jerusha Daughter Of Zadok.
2 - அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
English:- He Did What Was Right In The Eyes Of The Lord , Just As His Father Uzziah Had Done, But Unlike Him He Did Not Enter The Temple Of The Lord . The People, However, Continued Their Corrupt Practices.
3 - அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.
English:- Jotham Rebuilt The Upper Gate Of The Temple Of The Lord And Did Extensive Work On The Wall At The Hill Of Ophel.
4 - யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
English:- He Built Towns In The Judean Hills And Forts And Towers In The Wooded Areas.
5 - அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறுதாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்.
English:- Jotham Made War On The King Of The Ammonites And Conquered Them. That Year The Ammonites Paid Him A Hundred Talents Of Silver, Ten Thousand Cors Of Wheat And Ten Thousand Cors Of Barley. The Ammonites Brought Him The Same Amount Also In The Second And Third Years.
6 - யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.
English:- Jotham Grew Powerful Because He Walked Steadfastly Before The Lord His God.
7 - யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய சகல யுத்தங்களும், அவனுடைய நடைகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
English:- The Other Events In Jotham's Reign, Including All His Wars And The Other Things He Did, Are Written In The Book Of The Kings Of Israel And Judah.
8 - அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
English:- He Was Twenty-five Years Old When He Became King, And He Reigned In Jerusalem Sixteen Years.
9 - யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய, ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
English:- Jotham Rested With His Fathers And Was Buried In The City Of David. And Ahaz His Son Succeeded Him As King.