பரிசுத்த வேதாகமம் 2 கொரிந்தியர் அதிகாரம் 12 – Read Holy Bible Book Of 2 Corinthians Chapter 12 In Tamil With English Reference
1 - மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
English:- I Must Go On Boasting. Although There Is Nothing To Be Gained, I Will Go On To Visions And Revelations From The Lord.
2 - கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
English:- I Know A Man In Christ Who Fourteen Years Ago Was Caught Up To The Third Heaven. Whether It Was In The Body Or Out Of The Body I Do Not Know--god Knows.
3 - அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
English:- And I Know That This Man--whether In The Body Or Apart From The Body I Do Not Know, But God Knows--
4 - அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
English:- Was Caught Up To Paradise. He Heard Inexpressible Things, Things That Man Is Not Permitted To Tell.
5 - இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
English:- I Will Boast About A Man Like That, But I Will Not Boast About Myself, Except About My Weaknesses.
6 - சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன்.
English:- Even If I Should Choose To Boast, I Would Not Be A Fool, Because I Would Be Speaking The Truth. But I Refrain, So No One Will Think More Of Me Than Is Warranted By What I Do Or Say.
7 - அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது
English:- To Keep Me From Becoming Conceited Because Of These Surpassingly Great Revelations, There Was Given Me A Thorn In My Flesh, A Messenger Of Satan, To Torment Me.
8 - அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
English:- Three Times I Pleaded With The Lord To Take It Away From Me.
9 - அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
English:- But He Said To Me, "My Grace Is Sufficient For You, For My Power Is Made Perfect In Weakness." Therefore I Will Boast All The More Gladly About My Weaknesses, So That Christ's Power May Rest On Me.
10 - அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
English:- That Is Why, For Christ's Sake, I Delight In Weaknesses, In Insults, In Hardships, In Persecutions, In Difficulties. For When I Am Weak, Then I Am Strong.
11 - மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
English:- I Have Made A Fool Of Myself, But You Drove Me To It. I Ought To Have Been Commended By You, For I Am Not In The Least Inferior To The "Super-apostles," Even Though I Am Nothing.
12 - அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.
English:- The Things That Mark An Apostle--signs, Wonders And Miracles--were Done Among You With Great Perseverance.
13 - எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாயிருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாதிருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்தை எனக்கு மன்னியுங்கள்.
English:- How Were You Inferior To The Other Churches, Except That I Was Never A Burden To You? Forgive Me This Wrong!
14 - இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்: பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
English:- Now I Am Ready To Visit You For The Third Time, And I Will Not Be A Burden To You, Because What I Want Is Not Your Possessions But You. After All, Children Should Not Have To Save Up For Their Parents, But Parents For Their Children.
15 - ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்
English:- So I Will Very Gladly Spend For You Everything I Have And Expend Myself As Well. If I Love You More, Will You Love Me Less?
16 - அப்படியாகட்டும்; நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.
English:- Be That As It May, I Have Not Been A Burden To You. Yet, Crafty Fellow That I Am, I Caught You By Trickery!
17 - நான் உங்களிடத்திற்கு அனுப்பினவர்களில் எவன்மூலமாயாவது உங்களிடத்தில் பொழிவைத் தேடினதுண்டா?
English:- Did I Exploit You Through Any Of The Men I Sent You?
18 - தீத்து உங்களிடத்தில் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனுடனேகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா?
English:- I Urged Titus To Go To You And I Sent Our Brother With Him. Titus Did Not Exploit You, Did He? Did We Not Act In The Same Spirit And Follow The Same Course?
19 - நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்குமுன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம்.
English:- Have You Been Thinking All Along That We Have Been Defending Ourselves To You? We Have Been Speaking In The Sight Of God As Those In Christ; And Everything We Do, Dear Friends, Is For Your Strengthening.
20 - ஆகிலும் நான் வந்து உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள் வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்;
English:- For I Am Afraid That When I Come I May Not Find You As I Want You To Be, And You May Not Find Me As You Want Me To Be. I Fear That There May Be Quarreling, Jealousy, Outbursts Of Anger, Factions, Slander, Gossip, Arrogance And Disorder.
21 - மறுபடியும் நான் வருகிறபோது என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோவென்றும் பயந்திருக்கிறேன்.
English:- I Am Afraid That When I Come Again My God Will Humble Me Before You, And I Will Be Grieved Over Many Who Have Sinned Earlier And Have Not Repented Of The Impurity, Sexual Sin And Debauchery In Which They Have Indulged.