2 கொரிந்தியர் 6 – 2 Corinthians 6


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 2 கொரிந்தியர் அதிகாரம் 6 – Read Holy Bible Book Of 2 Corinthians Chapter 6 In Tamil With English Reference


1 - தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

English:- As God's Fellow Workers We Urge You Not To Receive God's Grace In Vain.

2 கொரிந்தியர் 6-1 - 2 Corinthians 6-1தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

2 - அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.

English:- For He Says, "In The Time Of My Favor I Heard You, And In The Day Of Salvation I Helped You." I Tell You, Now Is The Time Of God's Favor, Now Is The Day Of Salvation.


3 - இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.

English:- We Put No Stumbling Block In Anyone's Path, So That Our Ministry Will Not Be Discredited.

2 கொரிந்தியர் 6-3 - 2 Corinthians 6-3இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.

4 - மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,

English:- Rather, As Servants Of God We Commend Ourselves In Every Way: In Great Endurance; In Troubles, Hardships And Distresses;

2 கொரிந்தியர் 6-4 - 2 Corinthians 6-4மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,

5 - அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும். பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,

English:- In Beatings, Imprisonments And Riots; In Hard Work, Sleepless Nights And Hunger;

2 கொரிந்தியர் 6-5 - 2 Corinthians 6-5அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும். பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,

6 - கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,

English:- In Purity, Understanding, Patience And Kindness; In The Holy Spirit And In Sincere Love;

2 கொரிந்தியர் 6-6 - 2 Corinthians 6-6கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,

7 - சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,

English:- In Truthful Speech And In The Power Of God; With Weapons Of Righteousness In The Right Hand And In The Left;

2 கொரிந்தியர் 6-7 - 2 Corinthians 6-7சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,

8 - கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும்,

English:- Through Glory And Dishonor, Bad Report And Good Report; Genuine, Yet Regarded As Impostors;

2 கொரிந்தியர் 6-8 - 2 Corinthians 6-8கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும்,

9 - அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,

English:- Known, Yet Regarded As Unknown; Dying, And Yet We Live On; Beaten, And Yet Not Killed;

2 கொரிந்தியர் 6-9 - 2 Corinthians 6-9அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,

10 - துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.

English:- Sorrowful, Yet Always Rejoicing; Poor, Yet Making Many Rich; Having Nothing, And Yet Possessing Everything.


11 - கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது.

English:- We Have Spoken Freely To You, Corinthians, And Opened Wide Our Hearts To You.

2 கொரிந்தியர் 6-11 - 2 Corinthians 6-11கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது.

12 - எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.

English:- We Are Not Withholding Our Affection From You, But You Are Withholding Yours From Us.

2 கொரிந்தியர் 6-12 - 2 Corinthians 6-12எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.

13 - ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச்சொல்லுகிறேன்.

English:- As A Fair Exchange--i Speak As To My Children--open Wide Your Hearts Also.

2 கொரிந்தியர் 6-13 - 2 Corinthians 6-13ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச்சொல்லுகிறேன்.

14 - அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

English:- Do Not Be Yoked Together With Unbelievers. For What Do Righteousness And Wickedness Have In Common? Or What Fellowship Can Light Have With Darkness?

2 கொரிந்தியர் 6-14 - 2 Corinthians 6-14அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

15 - கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?

English:- What Harmony Is There Between Christ And Belial ? What Does A Believer Have In Common With An Unbeliever?

2 கொரிந்தியர் 6-15 - 2 Corinthians 6-15கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?

16 - தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.

English:- What Agreement Is There Between The Temple Of God And Idols? For We Are The Temple Of The Living God. As God Has Said: "I Will Live With Them And Walk Among Them, And I Will Be Their God, And They Will Be My People."

2 கொரிந்தியர் 6-16 - 2 Corinthians 6-16தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.

17 - ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

English:- "Therefore Come Out From Them And Be Separate, Says The Lord. Touch No Unclean Thing, And I Will Receive You."

2 கொரிந்தியர் 6-17 - 2 Corinthians 6-17ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

18 - அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

English:- "I Will Be A Father To You, And You Will Be My Sons And Daughters, Says The Lord Almighty."

2 கொரிந்தியர் 6-18 - 2 Corinthians 6-18அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.


Previous Chapter Next Chapter