பரிசுத்த வேதாகமம் 2 தீமோத்தேயு அதிகாரம் 2 – Read Holy Bible Book Of 2 Timothy Chapter 2 In Tamil With English Reference
1 - ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
English:- You Then, My Son, Be Strong In The Grace That Is In Christ Jesus.
2 - அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.
English:- And The Things You Have Heard Me Say In The Presence Of Many Witnesses Entrust To Reliable Men Who Will Also Be Qualified To Teach Others.
3 - நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.
English:- Endure Hardship With Us Like A Good Soldier Of Christ Jesus.
4 - தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
English:- No One Serving As A Soldier Gets Involved In Civilian Affairs--he Wants To Please His Commanding Officer.
5 - மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.
English:- Similarly, If Anyone Competes As An Athlete, He Does Not Receive The Victor's Crown Unless He Competes According To The Rules.
6 - பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.
English:- The Hardworking Farmer Should Be The First To Receive A Share Of The Crops.
7 - நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
English:- Reflect On What I Am Saying, For The Lord Will Give You Insight Into All This.
8 - தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.
English:- Remember Jesus Christ, Raised From The Dead, Descended From David. This Is My Gospel,
9 - இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.
English:- For Which I Am Suffering Even To The Point Of Being Chained Like A Criminal. But God's Word Is Not Chained.
10 - ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.
English:- Therefore I Endure Everything For The Sake Of The Elect, That They Too May Obtain The Salvation That Is In Christ Jesus, With Eternal Glory.
11 - இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;
English:- Here Is A Trustworthy Saying: If We Died With Him, We Will Also Live With Him;
12 - அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;
English:- If We Endure, We Will Also Reign With Him. If We Disown Him, He Will Also Disown Us;
13 - நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
English:- If We Are Faithless, He Will Remain Faithful, For He Cannot Disown Himself.
14 - இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.
English:- Keep Reminding Them Of These Things. Warn Them Before God Against Quarreling About Words; It Is Of No Value, And Only Ruins Those Who Listen.
15 - நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
English:- Do Your Best To Present Yourself To God As One Approved, A Workman Who Does Not Need To Be Ashamed And Who Correctly Handles The Word Of Truth.
16 - சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;
English:- Avoid Godless Chatter, Because Those Who Indulge In It Will Become More And More Ungodly.
17 - அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
English:- Their Teaching Will Spread Like Gangrene. Among Them Are Hymenaeus And Philetus,
18 - அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
English:- Who Have Wandered Away From The Truth. They Say That The Resurrection Has Already Taken Place, And They Destroy The Faith Of Some.
19 - ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.
English:- Nevertheless, God's Solid Foundation Stands Firm, Sealed With This Inscription: "The Lord Knows Those Who Are His," And, "Everyone Who Confesses The Name Of The Lord Must Turn Away From Wickedness."
20 - ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
English:- In A Large House There Are Articles Not Only Of Gold And Silver, But Also Of Wood And Clay; Some Are For Noble Purposes And Some For Ignoble.
21 - ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.
English:- If A Man Cleanses Himself From The Latter, He Will Be An Instrument For Noble Purposes, Made Holy, Useful To The Master And Prepared To Do Any Good Work.
22 - அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
English:- Flee The Evil Desires Of Youth, And Pursue Righteousness, Faith, Love And Peace, Along With Those Who Call On The Lord Out Of A Pure Heart.
23 - புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.
English:- Don't Have Anything To Do With Foolish And Stupid Arguments, Because You Know They Produce Quarrels.
24 - கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
English:- And The Lord's Servant Must Not Quarrel; Instead, He Must Be Kind To Everyone, Able To Teach, Not Resentful.
25 - எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,
English:- Those Who Oppose Him He Must Gently Instruct, In The Hope That God Will Grant Them Repentance Leading Them To A Knowledge Of The Truth,
26 - பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
English:- And That They Will Come To Their Senses And Escape From The Trap Of The Devil, Who Has Taken Them Captive To Do His Will.