2 தீமோத்தேயு 4 – 2 Timothy 4


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 2 தீமோத்தேயு அதிகாரம் 4 – Read Holy Bible Book Of 2 Timothy Chapter 4 In Tamil With English Reference


1 - நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:

English:- In The Presence Of God And Of Christ Jesus, Who Will Judge The Living And The Dead, And In View Of His Appearing And His Kingdom, I Give You This Charge:

2 தீமோத்தேயு 4-1 - 2 Timothy 4-1நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:

2 - சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

English:- Preach The Word; Be Prepared In Season And Out Of Season; Correct, Rebuke And Encourage--with Great Patience And Careful Instruction.


3 - ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,

English:- For The Time Will Come When Men Will Not Put Up With Sound Doctrine. Instead, To Suit Their Own Desires, They Will Gather Around Them A Great Number Of Teachers To Say What Their Itching Ears Want To Hear.

2 தீமோத்தேயு 4-3 - 2 Timothy 4-3ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,

4 - சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

English:- They Will Turn Their Ears Away From The Truth And Turn Aside To Myths.

2 தீமோத்தேயு 4-4 - 2 Timothy 4-4சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

5 - நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

English:- But You, Keep Your Head In All Situations, Endure Hardship, Do The Work Of An Evangelist, Discharge All The Duties Of Your Ministry.

2 தீமோத்தேயு 4-5 - 2 Timothy 4-5நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

6 - ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது.

English:- For I Am Already Being Poured Out Like A Drink Offering, And The Time Has Come For My Departure.

2 தீமோத்தேயு 4-6 - 2 Timothy 4-6ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது.

7 - நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

English:- I Have Fought The Good Fight, I Have Finished The Race, I Have Kept The Faith.

2 தீமோத்தேயு 4-7 - 2 Timothy 4-7நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

8 - இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

English:- Now There Is In Store For Me The Crown Of Righteousness, Which The Lord, The Righteous Judge, Will Award To Me On That Day--and Not Only To Me, But Also To All Who Have Longed For His Appearing.

2 தீமோத்தேயு 4-8 - 2 Timothy 4-8இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

9 - நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.

English:- Do Your Best To Come To Me Quickly,

2 தீமோத்தேயு 4-9 - 2 Timothy 4-9நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.

10 - ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.

English:- For Demas, Because He Loved This World, Has Deserted Me And Has Gone To Thessalonica. Crescens Has Gone To Galatia, And Titus To Dalmatia.


11 - லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

English:- Only Luke Is With Me. Get Mark And Bring Him With You, Because He Is Helpful To Me In My Ministry.

2 தீமோத்தேயு 4-11 - 2 Timothy 4-11லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

12 - தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.

English:- I Sent Tychicus To Ephesus.

2 தீமோத்தேயு 4-12 - 2 Timothy 4-12தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.

13 - துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

English:- When You Come, Bring The Cloak That I Left With Carpus At Troas, And My Scrolls, Especially The Parchments.

2 தீமோத்தேயு 4-13 - 2 Timothy 4-13துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

14 - கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.

English:- Alexander The Metalworker Did Me A Great Deal Of Harm. The Lord Will Repay Him For What He Has Done.

2 தீமோத்தேயு 4-14 - 2 Timothy 4-14கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.

15 - நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.

English:- You Too Should Be On Your Guard Against Him, Because He Strongly Opposed Our Message.

2 தீமோத்தேயு 4-15 - 2 Timothy 4-15நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.

16 - நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.

English:- At My First Defense, No One Came To My Support, But Everyone Deserted Me. May It Not Be Held Against Them.

2 தீமோத்தேயு 4-16 - 2 Timothy 4-16நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.

17 - கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

English:- But The Lord Stood At My Side And Gave Me Strength, So That Through Me The Message Might Be Fully Proclaimed And All The Gentiles Might Hear It. And I Was Delivered From The Lion's Mouth.

2 தீமோத்தேயு 4-17 - 2 Timothy 4-17கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

18 - கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

English:- The Lord Will Rescue Me From Every Evil Attack And Will Bring Me Safely To His Heavenly Kingdom. To Him Be Glory For Ever And Ever. Amen.

2 தீமோத்தேயு 4-18 - 2 Timothy 4-18கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

19 - பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.

English:- Greet Priscilla And Aquila And The Household Of Onesiphorus.

2 தீமோத்தேயு 4-19 - 2 Timothy 4-19பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.

20 - எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.

English:- Erastus Stayed In Corinth, And I Left Trophimus Sick In Miletus.


21 - மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

English:- Do Your Best To Get Here Before Winter. Eubulus Greets You, And So Do Pudens, Linus, Claudia And All The Brothers.

2 தீமோத்தேயு 4-21 - 2 Timothy 4-21மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

22 - கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

English:- The Lord Be With Your Spirit. Grace Be With You.

2 தீமோத்தேயு 4-22 - 2 Timothy 4-22கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.


Previous Chapter Next Chapter