யாத்திராகமம் 36 – Exodus 36


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் யாத்திராகமம் அதிகாரம் 36 – Read Holy Bible Book Of Exodus Chapter 36 In Tamil With English Reference


1 - அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.

English:- So Bezalel, Oholiab And Every Skilled Person To Whom The Lord Has Given Skill And Ability To Know How To Carry Out All The Work Of Constructing The Sanctuary Are To Do The Work Just As The Lord Has Commanded."

யாத்திராகமம் 36-1 - Exodus 36-1அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.

2 - பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்.

English:- Then Moses Summoned Bezalel And Oholiab And Every Skilled Person To Whom The Lord Had Given Ability And Who Was Willing To Come And Do The Work.


3 - அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

English:- They Received From Moses All The Offerings The Israelites Had Brought To Carry Out The Work Of Constructing The Sanctuary. And The People Continued To Bring Freewill Offerings Morning After Morning.

யாத்திராகமம் 36-3 - Exodus 36-3அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

4 - அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து,

English:- So All The Skilled Craftsmen Who Were Doing All The Work On The Sanctuary Left Their Work

யாத்திராகமம் 36-4 - Exodus 36-4அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து,

5 - மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.

English:- And Said To Moses, "The People Are Bringing More Than Enough For Doing The Work The Lord Commanded To Be Done."

யாத்திராகமம் 36-5 - Exodus 36-5மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.

6 - அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.

English:- Then Moses Gave An Order And They Sent This Word Throughout The Camp: "No Man Or Woman Is To Make Anything Else As An Offering For The Sanctuary." And So The People Were Restrained From Bringing More,

யாத்திராகமம் 36-6 - Exodus 36-6அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.

7 - செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது.

English:- Because What They Already Had Was More Than Enough To Do All The Work.

யாத்திராகமம் 36-7 - Exodus 36-7செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது.

8 - வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.

English:- All The Skilled Men Among The Workmen Made The Tabernacle With Ten Curtains Of Finely Twisted Linen And Blue, Purple And Scarlet Yarn, With Cherubim Worked Into Them By A Skilled Craftsman.

யாத்திராகமம் 36-8 - Exodus 36-8வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.

9 - ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.

English:- All The Curtains Were The Same Size-twenty-eight Cubits Long And Four Cubits Wide.

யாத்திராகமம் 36-9 - Exodus 36-9ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.

10 - ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.

English:- They Joined Five Of The Curtains Together And Did The Same With The Other Five.


11 - இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.

English:- Then They Made Loops Of Blue Material Along The Edge Of The End Curtain In One Set, And The Same Was Done With The End Curtain In The Other Set.

யாத்திராகமம் 36-11 - Exodus 36-11இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.

12 - காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது.

English:- They Also Made Fifty Loops On One Curtain And Fifty Loops On The End Curtain Of The Other Set, With The Loops Opposite Each Other.

யாத்திராகமம் 36-12 - Exodus 36-12காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது.

13 - ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.

English:- Then They Made Fifty Gold Clasps And Used Them To Fasten The Two Sets Of Curtains Together So That The Tabernacle Was A Unit.

யாத்திராகமம் 36-13 - Exodus 36-13ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.

14 - வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.

English:- They Made Curtains Of Goat Hair For The Tent Over The Tabernacle-eleven Altogether.

யாத்திராகமம் 36-14 - Exodus 36-14வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.

15 - ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.

English:- All Eleven Curtains Were The Same Size-thirty Cubits Long And Four Cubits Wide.

யாத்திராகமம் 36-15 - Exodus 36-15ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.

16 - ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,

English:- They Joined Five Of The Curtains Into One Set And The Other Six Into Another Set.

யாத்திராகமம் 36-16 - Exodus 36-16ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,

17 - இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,

English:- Then They Made Fifty Loops Along The Edge Of The End Curtain In One Set And Also Along The Edge Of The End Curtain In The Other Set.

யாத்திராகமம் 36-17 - Exodus 36-17இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,

18 - கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.

English:- They Made Fifty Bronze Clasps To Fasten The Tent Together As A Unit.

யாத்திராகமம் 36-18 - Exodus 36-18கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.

19 - சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான்.

English:- Then They Made For The Tent A Covering Of Ram Skins Dyed Red, And Over That A Covering Of Hides Of Sea Cows.

யாத்திராகமம் 36-19 - Exodus 36-19சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான்.

20 - வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.

English:- They Made Upright Frames Of Acacia Wood For The Tabernacle.


21 - ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாயிருந்தது.

English:- Each Frame Was Ten Cubits Long And A Cubit And A Half Wide,

யாத்திராகமம் 36-21 - Exodus 36-21ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாயிருந்தது.

22 - ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.

English:- With Two Projections Set Parallel To Each Other. They Made All The Frames Of The Tabernacle In This Way.

யாத்திராகமம் 36-22 - Exodus 36-22ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.

23 - வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,

English:- They Made Twenty Frames For The South Side Of The Tabernacle

யாத்திராகமம் 36-23 - Exodus 36-23வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,

24 - அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து;

English:- And Made Forty Silver Bases To Go Under Them-two Bases For Each Frame, One Under Each Projection.

யாத்திராகமம் 36-24 - Exodus 36-24அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து;

25 - வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.

English:- For The Other Side, The North Side Of The Tabernacle, They Made Twenty Frames

யாத்திராகமம் 36-25 - Exodus 36-25வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.

26 - ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.

English:- And Forty Silver Bases-two Under Each Frame.

யாத்திராகமம் 36-26 - Exodus 36-26ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.

27 - வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,

English:- They Made Six Frames For The Far End, That Is, The West End Of The Tabernacle,

யாத்திராகமம் 36-27 - Exodus 36-27வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,

28 - வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.

English:- And Two Frames Were Made For The Corners Of The Tabernacle At The Far End.

யாத்திராகமம் 36-28 - Exodus 36-28வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.

29 - அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான்.

English:- At These Two Corners The Frames Were Double From The Bottom All The Way To The Top And Fitted Into A Single Ring; Both Were Made Alike.

யாத்திராகமம் 36-29 - Exodus 36-29அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான்.

30 - அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.

English:- So There Were Eight Frames And Sixteen Silver Bases-two Under Each Frame.

யாத்திராகமம் 36-30 - Exodus 36-30அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.

31 - சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,

English:- They Also Made Crossbars Of Acacia Wood: Five For The Frames On One Side Of The Tabernacle,

யாத்திராகமம் 36-31 - Exodus 36-31சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,

32 - வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேல்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.

English:- Five For Those On The Other Side, And Five For The Frames On The West, At The Far End Of The Tabernacle.

யாத்திராகமம் 36-32 - Exodus 36-32வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேல்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.

33 - நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான்.

English:- They Made The Center Crossbar So That It Extended From End To End At The Middle Of The Frames.

யாத்திராகமம் 36-33 - Exodus 36-33நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான்.

34 - பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.

English:- They Overlaid The Frames With Gold And Made Gold Rings To Hold The Crossbars. They Also Overlaid The Crossbars With Gold.

யாத்திராகமம் 36-34 - Exodus 36-34பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.

35 - இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,

English:- They Made The Curtain Of Blue, Purple And Scarlet Yarn And Finely Twisted Linen, With Cherubim Worked Into It By A Skilled Craftsman.

யாத்திராகமம் 36-35 - Exodus 36-35இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,

36 - அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச்செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.

English:- They Made Four Posts Of Acacia Wood For It And Overlaid Them With Gold. They Made Gold Hooks For Them And Cast Their Four Silver Bases.

யாத்திராகமம் 36-36 - Exodus 36-36அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச்செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.

37 - கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும்,

English:- For The Entrance To The Tent They Made A Curtain Of Blue, Purple And Scarlet Yarn And Finely Twisted Linen-the Work Of An Embroiderer;

யாத்திராகமம் 36-37 - Exodus 36-37கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும்,

38 - அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்: அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.

English:- And They Made Five Posts With Hooks For Them. They Overlaid The Tops Of The Posts And Their Bands With Gold And Made Their Five Bases Of Bronze.

யாத்திராகமம் 36-38 - Exodus 36-38அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்: அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.


Previous Chapter Next Chapter