லேவியராகமம் 20 – Leviticus 20


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் லேவியராகமம் அதிகாரம் 20 – Read Holy Bible Book Of Leviticus Chapter 20 In Tamil With English Reference


1 - கர்த்தர் மோசேயை நோக்கி:

English:- The Lord Said To Moses,

லேவியராகமம் 20-1 - Leviticus 20-1கர்த்தர் மோசேயை நோக்கி:

2 - பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலை செய்யப்படவேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.

English:- "Say To The Israelites: 'Any Israelite Or Any Alien Living In Israel Who Gives Any Of His Children To Molech Must Be Put To Death. The People Of The Community Are To Stone Him.


3 - அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படிக்கு, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்று அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகப்பண்ணுவேன்.

English:- I Will Set My Face Against That Man And I Will Cut Him Off From His People; For By Giving His Children To Molech, He Has Defiled My Sanctuary And Profaned My Holy Name.

லேவியராகமம் 20-3 - Leviticus 20-3அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படிக்கு, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்று அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகப்பண்ணுவேன்.

4 - அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் ஜனங்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்சாடையாயிருந்தால்,

English:- If The People Of The Community Close Their Eyes When That Man Gives One Of His Children To Molech And They Fail To Put Him To Death,

லேவியராகமம் 20-4 - Leviticus 20-4அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் ஜனங்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்சாடையாயிருந்தால்,

5 - நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்துக்கும் விரோதமாக எதிர்த்து நின்று , அவனையும், அவன் பிறகே மோளேகை விபசாரமார்க்கமாய்ப் பின்பற்றின யாவரையும், தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.

English:- I Will Set My Face Against That Man And His Family And Will Cut Off From Their People Both Him And All Who Follow Him In Prostituting Themselves To Molech.

லேவியராகமம் 20-5 - Leviticus 20-5நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்துக்கும் விரோதமாக எதிர்த்து நின்று , அவனையும், அவன் பிறகே மோளேகை விபசாரமார்க்கமாய்ப் பின்பற்றின யாவரையும், தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.

6 - அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.

English:- " 'I Will Set My Face Against The Person Who Turns To Mediums And Spiritists To Prostitute Himself By Following Them, And I Will Cut Him Off From His People.

லேவியராகமம் 20-6 - Leviticus 20-6அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.

7 - ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

English:- " 'Consecrate Yourselves And Be Holy, Because I Am The Lord Your God.

லேவியராகமம் 20-7 - Leviticus 20-7ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

8 - என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

English:- Keep My Decrees And Follow Them. I Am The Lord , Who Makes You Holy.

லேவியராகமம் 20-8 - Leviticus 20-8என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

9 - தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.

English:- " 'If Anyone Curses His Father Or Mother, He Must Be Put To Death. He Has Cursed His Father Or His Mother, And His Blood Will Be On His Own Head.

லேவியராகமம் 20-9 - Leviticus 20-9தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.

10 - ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

English:- " 'If A Man Commits Adultery With Another Man's Wife-with The Wife Of His Neighbor-both The Adulterer And The Adulteress Must Be Put To Death.


11 - தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

English:- " 'If A Man Sleeps With His Father's Wife, He Has Dishonored His Father. Both The Man And The Woman Must Be Put To Death; Their Blood Will Be On Their Own Heads.

லேவியராகமம் 20-11 - Leviticus 20-11தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

12 - ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

English:- " 'If A Man Sleeps With His Daughter-in-law, Both Of Them Must Be Put To Death. What They Have Done Is A Perversion; Their Blood Will Be On Their Own Heads.

லேவியராகமம் 20-12 - Leviticus 20-12ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

13 - ஒருவன் பெண்ணோடே சம்யோகம்பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பானகாரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

English:- " 'If A Man Lies With A Man As One Lies With A Woman, Both Of Them Have Done What Is Detestable. They Must Be Put To Death; Their Blood Will Be On Their Own Heads.

லேவியராகமம் 20-13 - Leviticus 20-13ஒருவன் பெண்ணோடே சம்யோகம்பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பானகாரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

14 - ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்விதமுறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.

English:- " 'If A Man Marries Both A Woman And Her Mother, It Is Wicked. Both He And They Must Be Burned In The Fire, So That No Wickedness Will Be Among You.

லேவியராகமம் 20-14 - Leviticus 20-14ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்விதமுறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.

15 - ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.

English:- " 'If A Man Has Sexual Relations With An Animal, He Must Be Put To Death, And You Must Kill The Animal.

லேவியராகமம் 20-15 - Leviticus 20-15ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.

16 - ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இரு ஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.

English:- " 'If A Woman Approaches An Animal To Have Sexual Relations With It, Kill Both The Woman And The Animal. They Must Be Put To Death; Their Blood Will Be On Their Own Heads.

லேவியராகமம் 20-16 - Leviticus 20-16ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இரு ஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.

17 - ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால் அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

English:- " 'If A Man Marries His Sister, The Daughter Of Either His Father Or His Mother, And They Have Sexual Relations, It Is A Disgrace. They Must Be Cut Off Before The Eyes Of Their People. He Has Dishonored His Sister And Will Be Held Responsible.

லேவியராகமம் 20-17 - Leviticus 20-17ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால் அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

18 - ஒருவன் சூதக ஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

English:- " 'If A Man Lies With A Woman During Her Monthly Period And Has Sexual Relations With Her, He Has Exposed The Source Of Her Flow, And She Has Also Uncovered It. Both Of Them Must Be Cut Off From Their People.

லேவியராகமம் 20-18 - Leviticus 20-18ஒருவன் சூதக ஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

19 - உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காயாக, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

English:- " 'Do Not Have Sexual Relations With The Sister Of Either Your Mother Or Your Father, For That Would Dishonor A Close Relative; Both Of You Would Be Held Responsible.

லேவியராகமம் 20-19 - Leviticus 20-19உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காயாக, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

20 - ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், சந்தானமில்லாமல் சாவார்கள்.

English:- " 'If A Man Sleeps With His Aunt, He Has Dishonored His Uncle. They Will Be Held Responsible; They Will Die Childless.


21 - ஒருவன் தன் சகோதரன் மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.

English:- " 'If A Man Marries His Brother's Wife, It Is An Act Of Impurity; He Has Dishonored His Brother. They Will Be Childless.

லேவியராகமம் 20-21 - Leviticus 20-21ஒருவன் தன் சகோதரன் மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.

22 - ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிக்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள்.

English:- " 'Keep All My Decrees And Laws And Follow Them, So That The Land Where I Am Bringing You To Live May Not Vomit You Out.

லேவியராகமம் 20-22 - Leviticus 20-22ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிக்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள்.

23 - நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்.

English:- You Must Not Live According To The Customs Of The Nations I Am Going To Drive Out Before You. Because They Did All These Things, I Abhorred Them.

லேவியராகமம் 20-23 - Leviticus 20-23நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்.

24 - நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

English:- But I Said To You, "You Will Possess Their Land; I Will Give It To You As An Inheritance, A Land Flowing With Milk And Honey." I Am The Lord Your God, Who Has Set You Apart From The Nations.

லேவியராகமம் 20-24 - Leviticus 20-24நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

25 - ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம் பண்ணி, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச் சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காதிருப்பீர்களாக.

English:- " 'You Must Therefore Make A Distinction Between Clean And Unclean Animals And Between Unclean And Clean Birds. Do Not Defile Yourselves By Any Animal Or Bird Or Anything That Moves Along The Ground-those Which I Have Set Apart As Unclean For You.

லேவியராகமம் 20-25 - Leviticus 20-25ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம் பண்ணி, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச் சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காதிருப்பீர்களாக.

26 - கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்.

English:- You Are To Be Holy To Me Because I, The Lord , Am Holy, And I Have Set You Apart From The Nations To Be My Own.

லேவியராகமம் 20-26 - Leviticus 20-26கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்.

27 - அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

English:- " 'A Man Or Woman Who Is A Medium Or Spiritist Among You Must Be Put To Death. You Are To Stone Them; Their Blood Will Be On Their Own Heads.' "

லேவியராகமம் 20-27 - Leviticus 20-27அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.


Previous Chapter Next Chapter