பரிசுத்த வேதாகமம் லேவியராகமம் அதிகாரம் 22 – Read Holy Bible Book Of Leviticus Chapter 22 In Tamil With English Reference
2 - இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக் குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.
English:- "Tell Aaron And His Sons To Treat With Respect The Sacred Offerings The Israelites Consecrate To Me, So They Will Not Profane My Holy Name. I Am The Lord .
3 - அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளில் உள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.
English:- "Say To Them: 'For The Generations To Come, If Any Of Your Descendants Is Ceremonially Unclean And Yet Comes Near The Sacred Offerings That The Israelites Consecrate To The Lord , That Person Must Be Cut Off From My Presence. I Am The Lord .
4 - ஆரோனின் சந்ததியாரில் எவன் குஷ்டரோகியோ, எவன் பிரமியமுள்ளவனோ, அவன் சுத்தமாகும்மட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், இந்திரியங்கழிந்தவனும்,
English:- " 'If A Descendant Of Aaron Has An Infectious Skin Disease Or A Bodily Discharge, He May Not Eat The Sacred Offerings Until He Is Cleansed. He Will Also Be Unclean If He Touches Something Defiled By A Corpse Or By Anyone Who Has An Emission Of Semen,
5 - தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும்பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,
English:- Or If He Touches Any Crawling Thing That Makes Him Unclean, Or Any Person Who Makes Him Unclean, Whatever The Uncleanness May Be.
6 - சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.
English:- The One Who Touches Any Such Thing Will Be Unclean Till Evening. He Must Not Eat Any Of The Sacred Offerings Unless He Has Bathed Himself With Water.
7 - சூரியன் அஸ்தமித்தபின்பு சுத்தமாயிருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்; அது அவனுடைய ஆகாரம்.
English:- When The Sun Goes Down, He Will Be Clean, And After That He May Eat The Sacred Offerings, For They Are His Food.
8 - தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.
English:- He Must Not Eat Anything Found Dead Or Torn By Wild Animals, And So Become Unclean Through It. I Am The Lord .
9 - ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
English:- " 'The Priests Are To Keep My Requirements So That They Do Not Become Guilty And Die For Treating Them With Contempt. I Am The Lord , Who Makes Them Holy.
10 - அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலைசெய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.
English:- " 'No One Outside A Priest's Family May Eat The Sacred Offering, Nor May The Guest Of A Priest Or His Hired Worker Eat It.
11 - ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் புசிக்கலாம்.
English:- But If A Priest Buys A Slave With Money, Or If A Slave Is Born In His Household, That Slave May Eat His Food.
12 - ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.
English:- If A Priest's Daughter Marries Anyone Other Than A Priest, She May Not Eat Any Of The Sacred Contributions.
13 - விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோலத் திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம், அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.
English:- But If A Priest's Daughter Becomes A Widow Or Is Divorced, Yet Has No Children, And She Returns To Live In Her Father's House As In Her Youth, She May Eat Of Her Father's Food. No Unauthorized Person, However, May Eat Any Of It.
14 - ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.
English:- " 'If Anyone Eats A Sacred Offering By Mistake, He Must Make Restitution To The Priest For The Offering And Add A Fifth Of The Value To It.
15 - அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,
English:- The Priests Must Not Desecrate The Sacred Offerings The Israelites Present To The Lord
16 - அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
English:- By Allowing Them To Eat The Sacred Offerings And So Bring Upon Them Guilt Requiring Payment. I Am The Lord , Who Makes Them Holy.' "
18 - நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,
English:- "Speak To Aaron And His Sons And To All The Israelites And Say To Them: 'If Any Of You-either An Israelite Or An Alien Living In Israel-presents A Gift For A Burnt Offering To The Lord , Either To Fulfill A Vow Or As A Freewill Offering,
19 - அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.
English:- You Must Present A Male Without Defect From The Cattle, Sheep Or Goats In Order That It May Be Accepted On Your Behalf.
20 - பழுதுள்ள ஒன்றையும் செலுத்த வேண்டாம்; அது உங்கள் நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை.
English:- Do Not Bring Anything With A Defect, Because It Will Not Be Accepted On Your Behalf.
21 - ஒருவன் விசேஷித்த பொருத்தனையாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கப்படும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.
English:- When Anyone Brings From The Herd Or Flock A Fellowship Offering To The Lord To Fulfill A Special Vow Or As A Freewill Offering, It Must Be Without Defect Or Blemish To Be Acceptable.
22 - குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.
English:- Do Not Offer To The Lord The Blind, The Injured Or The Maimed, Or Anything With Warts Or Festering Or Running Sores. Do Not Place Any Of These On The Altar As An Offering Made To The Lord By Fire.
23 - நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
English:- You May, However, Present As A Freewill Offering An Ox Or A Sheep That Is Deformed Or Stunted, But It Will Not Be Accepted In Fulfillment Of A Vow.
24 - விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக.
English:- You Must Not Offer To The Lord An Animal Whose Testicles Are Bruised, Crushed, Torn Or Cut. You Must Not Do This In Your Own Land,
25 - அந்நியன் புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.
English:- And You Must Not Accept Such Animals From The Hand Of A Foreigner And Offer Them As The Food Of Your God. They Will Not Be Accepted On Your Behalf, Because They Are Deformed And Have Defects.' "
27 - ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.
English:- "When A Calf, A Lamb Or A Goat Is Born, It Is To Remain With Its Mother For Seven Days. From The Eighth Day On, It Will Be Acceptable As An Offering Made To The Lord By Fire.
28 - பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரேநாளில் கொல்லவேண்டாம்.
English:- Do Not Slaughter A Cow Or A Sheep And Its Young On The Same Day.
29 - கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.
English:- "When You Sacrifice A Thank Offering To The Lord , Sacrifice It In Such A Way That It Will Be Accepted On Your Behalf.
30 - அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.
English:- It Must Be Eaten That Same Day; Leave None Of It Till Morning. I Am The Lord .
31 - நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.
English:- "Keep My Commands And Follow Them. I Am The Lord .
32 - என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
English:- Do Not Profane My Holy Name. I Must Be Acknowledged As Holy By The Israelites. I Am The Lord , Who Makes You Holy
33 - நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
English:- And Who Brought You Out Of Egypt To Be Your God. I Am The Lord ."