பரிசுத்த வேதாகமம் யோசுவா அதிகாரம் 6 – Read Holy Bible Book Of Joshua Chapter 6 In Tamil With English Reference
1 - எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.
English:- Now Jericho Was Tightly Shut Up Because Of The Israelites. No One Went Out And No One Came In.
2 - கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.
English:- Then The Lord Said To Joshua, "See, I Have Delivered Jericho Into Your Hands, Along With Its King And Its Fighting Men.
3 - யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள்.
English:- March Around The City Once With All The Armed Men. Do This For Six Days.
4 - ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டுபோகவேண்டும்; ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும்.
English:- Have Seven Priests Carry Trumpets Of Rams' Horns In Front Of The Ark. On The Seventh Day, March Around The City Seven Times, With The Priests Blowing The Trumpets.
5 - அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்.
English:- When You Hear Them Sound A Long Blast On The Trumpets, Have All The People Give A Loud Shout; Then The Wall Of The City Will Collapse And The People Will Go Up, Every Man Straight In."
6 - அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;
English:- So Joshua Son Of Nun Called The Priests And Said To Them, "Take Up The Ark Of The Covenant Of The Lord And Have Seven Priests Carry Trumpets In Front Of It."
7 - ஜனங்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் கர்த்தரின் பெட்டிக்குமுன் நடக்கக்கடவர்கள் என்றான்.
English:- And He Ordered The People, "Advance! March Around The City, With The Armed Guard Going Ahead Of The Ark Of The Lord ."
8 - யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்குப் பின்சென்றது.
English:- When Joshua Had Spoken To The People, The Seven Priests Carrying The Seven Trumpets Before The Lord Went Forward, Blowing Their Trumpets, And The Ark Of The Lord 'S Covenant Followed Them.
9 - எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்குமுன் யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள்; பின்தண்டு எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்சென்றது.
English:- The Armed Guard Marched Ahead Of The Priests Who Blew The Trumpets, And The Rear Guard Followed The Ark. All This Time The Trumpets Were Sounding.
10 - யோசுவா ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்.
English:- But Joshua Had Commanded The People, "Do Not Give A War Cry, Do Not Raise Your Voices, Do Not Say A Word Until The Day I Tell You To Shout. Then Shout!"
11 - அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவரப்பண்ணினான்; அவர்கள் திரும்பப் பாளயத்தில் வந்து, பாளயத்தில் இராத் தங்கினார்கள்.
English:- So He Had The Ark Of The Lord Carried Around The City, Circling It Once. Then The People Returned To Camp And Spent The Night There.
12 - யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
English:- Joshua Got Up Early The Next Morning And The Priests Took Up The Ark Of The Lord .
13 - தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது.
English:- The Seven Priests Carrying The Seven Trumpets Went Forward, Marching Before The Ark Of The Lord And Blowing The Trumpets. The Armed Men Went Ahead Of Them And The Rear Guard Followed The Ark Of The Lord , While The Trumpets Kept Sounding.
14 - இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருதரம் சுற்றிவந்து, பாளயத்துக்குத் திரும்பினார்கள்; இந்தப்படி ஆறுநாளும் செய்தார்கள்.
English:- So On The Second Day They Marched Around The City Once And Returned To The Camp. They Did This For Six Days.
15 - ஏழாம்நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப்பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்.
English:- On The Seventh Day, They Got Up At Daybreak And Marched Around The City Seven Times In The Same Manner, Except That On That Day They Circled The City Seven Times.
16 - ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தை கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
English:- The Seventh Time Around, When The Priests Sounded The Trumpet Blast, Joshua Commanded The People, "Shout! For The Lord Has Given You The City!
17 - ஆனாலும் இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவருமாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள்.
English:- The City And All That Is In It Are To Be Devoted To The Lord . Only Rahab The Prostitute And All Who Are With Her In Her House Shall Be Spared, Because She Hid The Spies We Sent.
18 - சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்குமாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.
English:- But Keep Away From The Devoted Things, So That You Will Not Bring About Your Own Destruction By Taking Any Of Them. Otherwise You Will Make The Camp Of Israel Liable To Destruction And Bring Trouble On It.
19 - சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.
English:- All The Silver And Gold And The Articles Of Bronze And Iron Are Sacred To The Lord And Must Go Into His Treasury."
20 - எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப்பிடித்து,
English:- When The Trumpets Sounded, The People Shouted, And At The Sound Of The Trumpet, When The People Gave A Loud Shout, The Wall Collapsed; So Every Man Charged Straight In, And They Took The City.
21 - பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணினார்கள்.
English:- They Devoted The City To The Lord And Destroyed With The Sword Every Living Thing In It-men And Women, Young And Old, Cattle, Sheep And Donkeys.
22 - யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
English:- Joshua Said To The Two Men Who Had Spied Out The Land, "Go Into The Prostitute's House And Bring Her Out And All Who Belong To Her, In Accordance With Your Oath To Her."
23 - அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளேபோய், ராகாபையும் அவள் தகப்பனையும் அவள் தாயையும் சகோதரர்களையும் அவளுக்குள்ள யாவையும் அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டு வந்து, அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்குப் புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள்
English:- So The Young Men Who Had Done The Spying Went In And Brought Out Rahab, Her Father And Mother And Brothers And All Who Belonged To Her. They Brought Out Her Entire Family And Put Them In A Place Outside The Camp Of Israel.
24 - பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும் பொன்னையும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்தபாத்திரங்களையுமாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.
English:- Then They Burned The Whole City And Everything In It, But They Put The Silver And Gold And The Articles Of Bronze And Iron Into The Treasury Of The Lord 'S House.
25 - எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள்.
English:- But Joshua Spared Rahab The Prostitute, With Her Family And All Who Belonged To Her, Because She Hid The Men Joshua Had Sent As Spies To Jericho-and She Lives Among The Israelites To This Day.
26 - அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.
English:- At That Time Joshua Pronounced This Solemn Oath: "Cursed Before The Lord Is The Man Who Undertakes To Rebuild This City, Jericho: "At The Cost Of His Firstborn Son Will He Lay Its Foundations; At The Cost Of His Youngest Will He Set Up Its Gates."
27 - இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.
English:- So The Lord Was With Joshua, And His Fame Spread Throughout The Land.