பரிசுத்த வேதாகமம் யோசுவா அதிகாரம் 16 – Read Holy Bible Book Of Joshua Chapter 16 In Tamil With English Reference
1 - யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான தண்ணீருக்குப் போய், எரிகோ துவக்கிப் பெத்தேலின் மலைகள் மட்டுமுள்ள வனாந்தர வழியாகவும் சென்று,
English:- The Allotment For Joseph Began At The Jordan Of Jericho, East Of The Waters Of Jericho, And Went Up From There Through The Desert Into The Hill Country Of Bethel.
2 - பெத்தேலிலிருந்து லூசுக்குப்போய், அர்கீயினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து,
English:- It Went On From Bethel (That Is, Luz), Crossed Over To The Territory Of The Arkites In Ataroth,
3 - மேற்கே யப்லெத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும்போய் முடியும்.
English:- Descended Westward To The Territory Of The Japhletites As Far As The Region Of Lower Beth Horon And On To Gezer, Ending At The Sea.
4 - இதை யோசேப்பின் புத்திரராகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள்.
English:- So Manasseh And Ephraim, The Descendants Of Joseph, Received Their Inheritance.
5 - எப்பிராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.
English:- This Was The Territory Of Ephraim, Clan By Clan: The Boundary Of Their Inheritance Went From Ataroth Addar In The East To Upper Beth Horon
6 - மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத் சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து,
English:- And Continued To The Sea. From Micmethath On The North It Curved Eastward To Taanath Shiloh, Passing By It To Janoah On The East.
7 - யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.
English:- Then It Went Down From Janoah To Ataroth And Naarah, Touched Jericho And Came Out At The Jordan.
8 - தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானாநதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்,
English:- From Tappuah The Border Went West To The Kanah Ravine And Ended At The Sea. This Was The Inheritance Of The Tribe Of The Ephraimites, Clan By Clan.
9 - பின்னும் எப்பிராயீம் புத்திரருக்குப் பிரத்தியேகமாய்க் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமெல்லாம் மனாசே புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.
English:- It Also Included All The Towns And Their Villages That Were Set Aside For The Ephraimites Within The Inheritance Of The Manassites.
10 - அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள்.
English:- They Did Not Dislodge The Canaanites Living In Gezer; To This Day The Canaanites Live Among The People Of Ephraim But Are Required To Do Forced Labor.