பரிசுத்த வேதாகமம் 1 சாமுவேல் அதிகாரம் 22 – Read Holy Bible Book Of 1 Samuel Chapter 22 In Tamil With English Reference
1 - தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.
English:- David Left Gath And Escaped To The Cave Of Adullam. When His Brothers And His Father's Household Heard About It, They Went Down To Him There.
2 - ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.
English:- All Those Who Were In Distress Or In Debt Or Discontented Gathered Around Him, And He Became Their Leader. About Four Hundred Men Were With Him.
3 - தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி,
English:- From There David Went To Mizpah In Moab And Said To The King Of Moab, "Would You Let My Father And Mother Come And Stay With You Until I Learn What God Will Do For Me?"
4 - அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.
English:- So He Left Them With The King Of Moab, And They Stayed With Him As Long As David Was In The Stronghold.
5 - பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.
English:- But The Prophet Gad Said To David, "Do Not Stay In The Stronghold. Go Into The Land Of Judah." So David Left And Went To The Forest Of Hereth.
6 - தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது,
English:- Now Saul Heard That David And His Men Had Been Discovered. And Saul, Spear In Hand, Was Seated Under The Tamarisk Tree On The Hill At Gibeah, With All His Officials Standing Around Him.
7 - சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?
English:- Saul Said To Them, "Listen, Men Of Benjamin! Will The Son Of Jesse Give All Of You Fields And Vineyards? Will He Make All Of You Commanders Of Thousands And Commanders Of Hundreds?
8 - நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.
English:- Is That Why You Have All Conspired Against Me? No One Tells Me When My Son Makes A Covenant With The Son Of Jesse. None Of You Is Concerned About Me Or Tells Me That My Son Has Incited My Servant To Lie In Wait For Me, As He Does Today."
9 - அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.
English:- But Doeg The Edomite, Who Was Standing With Saul's Officials, Said, "I Saw The Son Of Jesse Come To Ahimelech Son Of Ahitub At Nob.
10 - இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.
English:- Ahimelech Inquired Of The Lord For Him; He Also Gave Him Provisions And The Sword Of Goliath The Philistine."
11 - அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.
English:- Then The King Sent For The Priest Ahimelech Son Of Ahitub And His Father's Whole Family, Who Were The Priests At Nob, And They All Came To The King.
12 - அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான்.
English:- Saul Said, "Listen Now, Son Of Ahitub." "Yes, My Lord," He Answered.
13 - அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.
English:- Saul Said To Him, "Why Have You Conspired Against Me, You And The Son Of Jesse, Giving Him Bread And A Sword And Inquiring Of God For Him, So That He Has Rebelled Against Me And Lies In Wait For Me, As He Does Today?"
14 - அகிமெலேக் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்துவருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?
English:- Ahimelech Answered The King, "Who Of All Your Servants Is As Loyal As David, The King's Son-in-law, Captain Of Your Bodyguard And Highly Respected In Your Household?
15 - இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.
English:- Was That Day The First Time I Inquired Of God For Him? Of Course Not! Let Not The King Accuse Your Servant Or Any Of His Father's Family, For Your Servant Knows Nothing At All About This Whole Affair."
16 - ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன் தகப்பன் வீட்டார் அனைவரும் சாகவே சாகவேண்டும் என்றான்.
English:- But The King Said, "You Will Surely Die, Ahimelech, You And Your Father's Whole Family."
17 - பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரரோ, கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை.
English:- Then The King Ordered The Guards At His Side: "Turn And Kill The Priests Of The Lord , Because They Too Have Sided With David. They Knew He Was Fleeing, Yet They Did Not Tell Me." But The King's Officials Were Not Willing To Raise A Hand To Strike The Priests Of The Lord .
18 - அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்.
English:- The King Then Ordered Doeg, "You Turn And Strike Down The Priests." So Doeg The Edomite Turned And Struck Them Down. That Day He Killed Eighty-five Men Who Wore The Linen Ephod.
19 - ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.
English:- He Also Put To The Sword Nob, The Town Of The Priests, With Its Men And Women, Its Children And Infants, And Its Cattle, Donkeys And Sheep.
20 - அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்,
English:- But Abiathar, A Son Of Ahimelech Son Of Ahitub, Escaped And Fled To Join David.
21 - சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.
English:- He Told David That Saul Had Killed The Priests Of The Lord .
22 - அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே.
English:- Then David Said To Abiathar: "That Day, When Doeg The Edomite Was There, I Knew He Would Be Sure To Tell Saul. I Am Responsible For The Death Of Your Father's Whole Family.
23 - நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனையும் வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.
English:- Stay With Me; Don't Be Afraid; The Man Who Is Seeking Your Life Is Seeking Mine Also. You Will Be Safe With Me."