யோபு 29 – Job 29


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் யோபு அதிகாரம் 29 – Read Holy Bible Book Of Job Chapter 29 In Tamil With English Reference


1 - பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:

English:- Job Continued His Discourse:

யோபு 29-1 - Job 29-1பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:

2 - சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.

English:- "How I Long For The Months Gone By, For The Days When God Watched Over Me,


3 - அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.

English:- When His Lamp Shone Upon My Head And By His Light I Walked Through Darkness!

யோபு 29-3 - Job 29-3அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.

4 - தேவனுடைய இரகசியச் செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.

English:- Oh, For The Days When I Was In My Prime, When God's Intimate Friendship Blessed My House,

யோபு 29-4 - Job 29-4தேவனுடைய இரகசியச் செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.

5 - அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.

English:- When The Almighty Was Still With Me And My Children Were Around Me,

யோபு 29-5 - Job 29-5அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.

6 - என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.

English:- When My Path Was Drenched With Cream And The Rock Poured Out For Me Streams Of Olive Oil.

யோபு 29-6 - Job 29-6என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.

7 - நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது,

English:- "When I Went To The Gate Of The City And Took My Seat In The Public Square,

யோபு 29-7 - Job 29-7நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது,

8 - வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்.

English:- The Young Men Saw Me And Stepped Aside And The Old Men Rose To Their Feet;

யோபு 29-8 - Job 29-8வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்.

9 - பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.

English:- The Chief Men Refrained From Speaking And Covered Their Mouths With Their Hands;

யோபு 29-9 - Job 29-9பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.

10 - பெரியோரின் சத்தம் அடங்கி அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.

English:- The Voices Of The Nobles Were Hushed, And Their Tongues Stuck To The Roof Of Their Mouths.


11 - என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.

English:- Whoever Heard Me Spoke Well Of Me, And Those Who Saw Me Commended Me,

யோபு 29-11 - Job 29-11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.

12 - முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.

English:- Because I Rescued The Poor Who Cried For Help, And The Fatherless Who Had None To Assist Him.

யோபு 29-12 - Job 29-12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.

13 - கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.

English:- The Man Who Was Dying Blessed Me; I Made The Widow's Heart Sing.

யோபு 29-13 - Job 29-13கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.

14 - நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.

English:- I Put On Righteousness As My Clothing; Justice Was My Robe And My Turban.

யோபு 29-14 - Job 29-14நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.

15 - நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.

English:- I Was Eyes To The Blind And Feet To The Lame.

யோபு 29-15 - Job 29-15நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.

16 - நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.

English:- I Was A Father To The Needy; I Took Up The Case Of The Stranger.

யோபு 29-16 - Job 29-16நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.

17 - நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.

English:- I Broke The Fangs Of The Wicked And Snatched The Victims From Their Teeth.

யோபு 29-17 - Job 29-17நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.

18 - என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.

English:- "I Thought, 'I Will Die In My Own House, My Days As Numerous As The Grains Of Sand.

யோபு 29-18 - Job 29-18என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.

19 - என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுதும் தங்கியிருந்தது.

English:- My Roots Will Reach To The Water, And The Dew Will Lie All Night On My Branches.

யோபு 29-19 - Job 29-19என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுதும் தங்கியிருந்தது.

20 - என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.

English:- My Glory Will Remain Fresh In Me, The Bow Ever New In My Hand.'


21 - எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.

English:- "Men Listened To Me Expectantly, Waiting In Silence For My Counsel.

யோபு 29-21 - Job 29-21எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.

22 - என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.

English:- After I Had Spoken, They Spoke No More; My Words Fell Gently On Their Ears.

யோபு 29-22 - Job 29-22என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.

23 - மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின்மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.

English:- They Waited For Me As For Showers And Drank In My Words As The Spring Rain.

யோபு 29-23 - Job 29-23மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின்மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.

24 - நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை.

English:- When I Smiled At Them, They Scarcely Believed It; The Light Of My Face Was Precious To Them.

யோபு 29-24 - Job 29-24நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை.

25 - அவர்கள் வழியே போக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.

English:- I Chose The Way For Them And Sat As Their Chief; I Dwelt As A King Among His Troops; I Was Like One Who Comforts Mourners.

யோபு 29-25 - Job 29-25அவர்கள் வழியே போக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.


Previous Chapter Next Chapter