பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 42 – Read Holy Bible Book Of Psalms Chapter 42 In Tamil With English Reference
1 - மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
English:- As The Deer Pants For Streams Of Water, So My Soul Pants For You, O God.
2 - என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?
English:- My Soul Thirsts For God, For The Living God. When Can I Go And Meet With God?
3 - உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.
English:- My Tears Have Been My Food Day And Night, While Men Say To Me All Day Long, "Where Is Your God?"
4 - முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.
English:- These Things I Remember As I Pour Out My Soul: How I Used To Go With The Multitude, Leading The Procession To The House Of God, With Shouts Of Joy And Thanksgiving Among The Festive Throng.
5 - என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
English:- Why Are You Downcast, O My Soul? Why So Disturbed Within Me? Put Your Hope In God, For I Will Yet Praise Him, My Savior And
6 - என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.
English:- My God. My Soul Is Downcast Within Me; Therefore I Will Remember You From The Land Of The Jordan, The Heights Of Hermon-from Mount Mizar.
7 - உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.
English:- Deep Calls To Deep In The Roar Of Your Waterfalls; All Your Waves And Breakers Have Swept Over Me.
8 - ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்.
English:- By Day The Lord Directs His Love, At Night His Song Is With Me- A Prayer To The God Of My Life.
9 - நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.
English:- I Say To God My Rock, "Why Have You Forgotten Me? Why Must I Go About Mourning, Oppressed By The Enemy?"
10 - உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.
English:- My Bones Suffer Mortal Agony As My Foes Taunt Me, Saying To Me All Day Long, "Where Is Your God?"
11 - என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
English:- Why Are You Downcast, O My Soul? Why So Disturbed Within Me? Put Your Hope In God, For I Will Yet Praise Him, My Savior And My God.