பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 107 – Read Holy Bible Book Of Psalms Chapter 107 In Tamil With English Reference
1 - கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
English:- Give Thanks To The Lord , For He Is Good; His Love Endures Forever.
2 - கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,
English:- Let The Redeemed Of The Lord Say This- Those He Redeemed From The Hand Of The Foe,
3 - கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள்.
English:- Those He Gathered From The Lands, From East And West, From North And South.
4 - அவர்கள் தாபரிக்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்திலே அவாந்தர வழியாய்,
English:- Some Wandered In Desert Wastelands, Finding No Way To A City Where They Could Settle.
5 - பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்.
English:- They Were Hungry And Thirsty, And Their Lives Ebbed Away.
6 - தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.
English:- Then They Cried Out To The Lord In Their Trouble, And He Delivered Them From Their Distress.
7 - தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
English:- He Led Them By A Straight Way To A City Where They Could Settle.
8 - தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
English:- Let Them Give Thanks To The Lord For His Unfailing Love And His Wonderful Deeds For Men,
9 - அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
English:- For He Satisfies The Thirsty And Fills The Hungry With Good Things.
10 - தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,
English:- Some Sat In Darkness And The Deepest Gloom, Prisoners Suffering In Iron Chains,
11 - அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.
English:- For They Had Rebelled Against The Words Of God And Despised The Counsel Of The Most High.
12 - அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்துபோனார்கள்.
English:- So He Subjected Them To Bitter Labor; They Stumbled, And There Was No One To Help.
13 - தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.
English:- Then They Cried To The Lord In Their Trouble, And He Saved Them From Their Distress.
14 - அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார்.
English:- He Brought Them Out Of Darkness And The Deepest Gloom And Broke Away Their Chains.
15 - கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,
English:- Let Them Give Thanks To The Lord For His Unfailing Love And His Wonderful Deeds For Men,
16 - அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
English:- For He Breaks Down Gates Of Bronze And Cuts Through Bars Of Iron.
17 - நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
English:- Some Became Fools Through Their Rebellious Ways And Suffered Affliction Because Of Their Iniquities.
18 - அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.
English:- They Loathed All Food And Drew Near The Gates Of Death.
19 - தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.
English:- Then They Cried To The Lord In Their Trouble, And He Saved Them From Their Distress.
20 - அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
English:- He Sent Forth His Word And Healed Them; He Rescued Them From The Grave.
21 - அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
English:- Let Them Give Thanks To The Lord For His Unfailing Love And His Wonderful Deeds For Men.
22 - ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.
English:- Let Them Sacrifice Thank Offerings And Tell Of His Works With Songs Of Joy.
23 - கப்பலேறி, கடல் யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
English:- Others Went Out On The Sea In Ships; They Were Merchants On The Mighty Waters.
24 - அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
English:- They Saw The Works Of The Lord , His Wonderful Deeds In The Deep.
25 - அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.
English:- For He Spoke And Stirred Up A Tempest That Lifted High The Waves.
26 - அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.
English:- They Mounted Up To The Heavens And Went Down To The Depths; In Their Peril Their Courage Melted Away.
27 - வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
English:- They Reeled And Staggered Like Drunken Men; They Were At Their Wits' End.
28 - அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
English:- Then They Cried Out To The Lord In Their Trouble, And He Brought Them Out Of Their Distress.
29 - கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
English:- He Stilled The Storm To A Whisper; The Waves Of The Sea Were Hushed.
30 - அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
English:- They Were Glad When It Grew Calm, And He Guided Them To Their Desired Haven.
31 - அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
English:- Let Them Give Thanks To The Lord For His Unfailing Love And His Wonderful Deeds For Men.
32 - ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
English:- Let Them Exalt Him In The Assembly Of The People And Praise Him In The Council Of The Elders.
33 - அவர் ஆறுகளை அவாந்தர வெளியாகவும், நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும்,
English:- He Turned Rivers Into A Desert, Flowing Springs Into Thirsty Ground,
34 - குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.
English:- And Fruitful Land Into A Salt Waste, Because Of The Wickedness Of Those Who Lived There.
35 - அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
English:- He Turned The Desert Into Pools Of Water And The Parched Ground Into Flowing Springs;
36 - பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
English:- There He Brought The Hungry To Live, And They Founded A City Where They Could Settle.
37 - வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
English:- They Sowed Fields And Planted Vineyards That Yielded A Fruitful Harvest;
38 - அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.
English:- He Blessed Them, And Their Numbers Greatly Increased, And He Did Not Let Their Herds Diminish.
39 - பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
English:- Then Their Numbers Decreased, And They Were Humbled By Oppression, Calamity And Sorrow;
40 - அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
English:- He Who Pours Contempt On Nobles Made Them Wander In A Trackless Waste.
41 - எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
English:- But He Lifted The Needy Out Of Their Affliction And Increased Their Families Like Flocks.
42 - உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
English:- The Upright See And Rejoice, But All The Wicked Shut Their Mouths.
43 - எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
English:- Whoever Is Wise, Let Him Heed These Things And Consider The Great Love Of The Lord .