பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 18 – Read Holy Bible Book Of Isaiah Chapter 18 In Tamil With English Reference
1 - எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் செட்டைகளுடையதும்,
English:- Woe To The Land Of Whirring Wings Along The Rivers Of Cush,
2 - கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ! வேகமான தூதர்களே, நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்குப் போங்கள்.
English:- Which Sends Envoys By Sea In Papyrus Boats Over The Water. Go, Swift Messengers, To A People Tall And Smooth-skinned, To A People Feared Far And Wide, An Aggressive Nation Of Strange Speech, Whose Land Is Divided By Rivers.
3 - பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக் குடிகளுமாகிய நீங்களெல்லாரும் மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள்.
English:- All You People Of The World, You Who Live On The Earth, When A Banner Is Raised On The Mountains, You Will See It, And When A Trumpet Sounds, You Will Hear It.
4 - நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
English:- This Is What The Lord Says To Me: "I Will Remain Quiet And Will Look On From My Dwelling Place, Like Shimmering Heat In The Sunshine, Like A Cloud Of Dew In The Heat Of Harvest."
5 - திராட்சச்செடிகள் அறுப்புக்குமுன்னே பூப்பூத்து முற்றிக் காய்க்கிறக் காய்கள் பிஞ்சாயிருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே கப்புக்கவர்களை அறுத்துக் கொடிகளை யரிந்து அகற்றிப்போடுவார்.
English:- For, Before The Harvest, When The Blossom Is Gone And The Flower Becomes A Ripening Grape, He Will Cut Off The Shoots With Pruning Knives, And Cut Down And Take Away The Spreading Branches.
6 - அவைகள் ஏகமாய் மலைகளின் பட்சிகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பட்சிகள் அதின்மேல் கோடைகாலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மாரிகாலத்திலும் தங்கும்.
English:- They Will All Be Left To The Mountain Birds Of Prey And To The Wild Animals; The Birds Will Feed On Them All Summer, The Wild Animals All Winter.
7 - அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும் சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.
English:- At That Time Gifts Will Be Brought To The Lord Almighty From A People Tall And Smooth-skinned, From A People Feared Far And Wide, An Aggressive Nation Of Strange Speech, Whose Land Is Divided By Rivers- The Gifts Will Be Brought To Mount Zion, The Place Of The Name Of The Lord Almighty.