பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 32 – Read Holy Bible Book Of Isaiah Chapter 32 In Tamil With English Reference
1 - இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்..
English:- See, A King Will Reign In Righteousness And Rulers Will Rule With Justice.
2 - அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.
English:- Each Man Will Be Like A Shelter From The Wind And A Refuge From The Storm, Like Streams Of Water In The Desert And The Shadow Of A Great Rock In A Thirsty Land.
3 - அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
English:- Then The Eyes Of Those Who See Will No Longer Be Closed, And The Ears Of Those Who Hear Will Listen.
4 - பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.
English:- The Mind Of The Rash Will Know And Understand, And The Stammering Tongue Will Be Fluent And Clear.
5 - மூடன் இனித் தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை.
English:- No Longer Will The Fool Be Called Noble Nor The Scoundrel Be Highly Respected.
6 - ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.
English:- For The Fool Speaks Folly, His Mind Is Busy With Evil: He Practices Ungodliness And Spreads Error Concerning The Lord ; The Hungry He Leaves Empty And From The Thirsty He Withholds Water.
7 - லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப்பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.
English:- The Scoundrel's Methods Are Wicked, He Makes Up Evil Schemes To Destroy The Poor With Lies, Even When The Plea Of The Needy Is Just.
8 - தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
English:- But The Noble Man Makes Noble Plans, And By Noble Deeds He Stands.
9 - சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.
English:- You Women Who Are So Complacent, Rise Up And Listen To Me; You Daughters Who Feel Secure, Hear What I Have To Say!
10 - நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.
English:- In Little More Than A Year You Who Feel Secure Will Tremble; The Grape Harvest Will Fail, And The Harvest Of Fruit Will Not Come.
11 - சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள், உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.
English:- Tremble, You Complacent Women; Shudder, You Daughters Who Feel Secure! Strip Off Your Clothes, Put Sackcloth Around Your Waists.
12 - செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.
English:- Beat Your Breasts For The Pleasant Fields, For The Fruitful Vines
13 - என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
English:- And For The Land Of My People, A Land Overgrown With Thorns And Briers- Yes, Mourn For All Houses Of Merriment And For This City Of Revelry.
14 - அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.
English:- The Fortress Will Be Abandoned, The Noisy City Deserted; Citadel And Watchtower Will Become A Wasteland Forever, The Delight Of Donkeys, A Pasture For Flocks,
15 - உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.
English:- Till The Spirit Is Poured Upon Us From On High, And The Desert Becomes A Fertile Field, And The Fertile Field Seems Like A Forest.
16 - வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்.
English:- Justice Will Dwell In The Desert And Righteousness Live In The Fertile Field.
17 - நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
English:- The Fruit Of Righteousness Will Be Peace; The Effect Of Righteousness Will Be Quietness And Confidence Forever.
18 - என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
English:- My People Will Live In Peaceful Dwelling Places, In Secure Homes, In Undisturbed Places Of Rest.
19 - ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோம்.
English:- Though Hail Flattens The Forest And The City Is Leveled Completely,
20 - மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
English:- How Blessed You Will Be, Sowing Your Seed By Every Stream, And Letting Your Cattle And Donkeys Range Free.