பரிசுத்த வேதாகமம் எசேக்கியேல் அதிகாரம் 1 – Read Holy Bible Book Of Ezekiel Chapter 1 In Tamil With English Reference
1 - முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.
English:- In The Thirtieth Year, In The Fourth Month On The Fifth Day, While I Was Among The Exiles By The Kebar River, The Heavens Were Opened And I Saw Visions Of God.
2 - அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது.
English:- On The Fifth Of The Month-it Was The Fifth Year Of The Exile Of King Jehoiachin-
3 - அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
English:- The Word Of The Lord Came To Ezekiel The Priest, The Son Of Buzi, By The Kebar River In The Land Of The Babylonians. There The Hand Of The Lord Was Upon Him.
4 - இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.
English:- I Looked, And I Saw A Windstorm Coming Out Of The North-an Immense Cloud With Flashing Lightning And Surrounded By Brilliant Light. The Center Of The Fire Looked Like Glowing Metal,
5 - அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது.
English:- And In The Fire Was What Looked Like Four Living Creatures. In Appearance Their Form Was That Of A Man,
6 - அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன.
English:- But Each Of Them Had Four Faces And Four Wings.
7 - அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.
English:- Their Legs Were Straight; Their Feet Were Like Those Of A Calf And Gleamed Like Burnished Bronze.
8 - அவைகளுடைய செட்டைகளின் கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.
English:- Under Their Wings On Their Four Sides They Had The Hands Of A Man. All Four Of Them Had Faces And Wings,
9 - அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.
English:- And Their Wings Touched One Another. Each One Went Straight Ahead; They Did Not Turn As They Moved.
10 - அவைகளுடைய முகங்களின் சாயலாவது; வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.
English:- Their Faces Looked Like This: Each Of The Four Had The Face Of A Man, And On The Right Side Each Had The Face Of A Lion, And On The Left The Face Of An Ox; Each Also Had The Face Of An Eagle.
11 - அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றொடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
English:- Such Were Their Faces. Their Wings Were Spread Out Upward; Each Had Two Wings, One Touching The Wing Of Another Creature On Either Side, And Two Wings Covering Its Body.
12 - அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
English:- Each One Went Straight Ahead. Wherever The Spirit Would Go, They Would Go, Without Turning As They Went.
13 - ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.
English:- The Appearance Of The Living Creatures Was Like Burning Coals Of Fire Or Like Torches. Fire Moved Back And Forth Among The Creatures; It Was Bright, And Lightning Flashed Out Of It.
14 - அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.
English:- The Creatures Sped Back And Forth Like Flashes Of Lightning.
15 - நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
English:- As I Looked At The Living Creatures, I Saw A Wheel On The Ground Beside Each Creature With Its Four Faces.
16 - சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது.
English:- This Was The Appearance And Structure Of The Wheels: They Sparkled Like Chrysolite, And All Four Looked Alike. Each Appeared To Be Made Like A Wheel Intersecting A Wheel.
17 - அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.
English:- As They Moved, They Would Go In Any One Of The Four Directions The Creatures Faced; The Wheels Did Not Turn About As The Creatures Went.
18 - அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.
English:- Their Rims Were High And Awesome, And All Four Rims Were Full Of Eyes All Around.
19 - அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.
English:- When The Living Creatures Moved, The Wheels Beside Them Moved; And When The Living Creatures Rose From The Ground, The Wheels Also Rose.
20 - ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
English:- Wherever The Spirit Would Go, They Would Go, And The Wheels Would Rise Along With Them, Because The Spirit Of The Living Creatures Was In The Wheels.
21 - அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும் போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
English:- When The Creatures Moved, They Also Moved; When The Creatures Stood Still, They Also Stood Still; And When The Creatures Rose From The Ground, The Wheels Rose Along With Them, Because The Spirit Of The Living Creatures Was In The Wheels.
22 - ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
English:- Spread Out Above The Heads Of The Living Creatures Was What Looked Like An Expanse, Sparkling Like Ice, And Awesome.
23 - மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர் நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.
English:- Under The Expanse Their Wings Were Stretched Out One Toward The Other, And Each Had Two Wings Covering Its Body.
24 - அவைகள் செல்லும்போது அவைகளுடைய இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், சர்வவல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.
English:- When The Creatures Moved, I Heard The Sound Of Their Wings, Like The Roar Of Rushing Waters, Like The Voice Of The Almighty, Like The Tumult Of An Army. When They Stood Still, They Lowered Their Wings.
25 - அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
English:- Then There Came A Voice From Above The Expanse Over Their Heads As They Stood With Lowered Wings.
26 - அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.
English:- Above The Expanse Over Their Heads Was What Looked Like A Throne Of Sapphire, And High Above On The Throne Was A Figure Like That Of A Man.
27 - அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.
English:- I Saw That From What Appeared To Be His Waist Up He Looked Like Glowing Metal, As If Full Of Fire, And That From There Down He Looked Like Fire; And Brilliant Light Surrounded Him.
28 - மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.
English:- Like The Appearance Of A Rainbow In The Clouds On A Rainy Day, So Was The Radiance Around Him. This Was The Appearance Of The Likeness Of The Glory Of The Lord . When I Saw It, I Fell Facedown, And I Heard The Voice Of One Speaking.