பரிசுத்த வேதாகமம் ஆமோஸ் அதிகாரம் 5 – Read Holy Bible Book Of Amos Chapter 5 In Tamil With English Reference
1 - இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.
English:- Hear This Word, O House Of Israel, This Lament I Take Up Concerning You:
2 - இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை.
English:- "Fallen Is Virgin Israel, Never To Rise Again, Deserted In Her Own Land, With No One To Lift Her Up."
3 - நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.
English:- This Is What The Sovereign Lord Says: "The City That Marches Out A Thousand Strong For Israel Will Have Only A Hundred Left; The Town That Marches Out A Hundred Strong Will Have Only Ten Left."
4 - கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
English:- This Is What The Lord Says To The House Of Israel: "Seek Me And Live;
5 - பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால்: கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும்.
English:- Do Not Seek Bethel, Do Not Go To Gilgal, Do Not Journey To Beersheba. For Gilgal Will Surely Go Into Exile, And Bethel Will Be Reduced To Nothing. "
6 - கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அறிவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி அதைப் பட்சிக்கும்.
English:- Seek The Lord And Live, Or He Will Sweep Through The House Of Joseph Like A Fire; It Will Devour, And Bethel Will Have No One To Quench It.
7 - நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே, அவரைத் தேடுங்கள்.
English:- You Who Turn Justice Into Bitterness And Cast Righteousness To The Ground
8 - அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
English:- (He Who Made The Pleiades And Orion, Who Turns Blackness Into Dawn And Darkens Day Into Night, Who Calls For The Waters Of The Sea And Pours Them Out Over The Face Of The Land- The Lord Is His Name-
9 - அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர்.
English:- He Flashes Destruction On The Stronghold And Brings The Fortified City To Ruin),
10 - ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள்.
English:- You Hate The One Who Reproves In Court And Despise Him Who Tells The Truth.
11 - நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமை சுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள, ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.
English:- You Trample On The Poor And Force Him To Give You Grain. Therefore, Though You Have Built Stone Mansions, You Will Not Live In Them; Though You Have Planted Lush Vineyards, You Will Not Drink Their Wine.
12 - உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.
English:- For I Know How Many Are Your Offenses And How Great Your Sins. You Oppress The Righteous And Take Bribes And You Deprive The Poor Of Justice In The Courts.
13 - ஆகையால் புத்திமான் அந்தக் காலத்திலே மௌனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.
English:- Therefore The Prudent Man Keeps Quiet In Such Times, For The Times Are Evil.
14 - நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.
English:- Seek Good, Not Evil, That You May Live. Then The Lord God Almighty Will Be With You, Just As You Say He Is.
15 - நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.
English:- Hate Evil, Love Good; Maintain Justice In The Courts. Perhaps The Lord God Almighty Will Have Mercy On The Remnant Of Joseph.
16 - ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
English:- Therefore This Is What The Lord, The Lord God Almighty, Says: "There Will Be Wailing In All The Streets And Cries Of Anguish In Every Public Square. The Farmers Will Be Summoned To Weep And The Mourners To Wail.
17 - எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும், நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- There Will Be Wailing In All The Vineyards, For I Will Pass Through Your Midst," Says The Lord .
18 - கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.
English:- Woe To You Who Long For The Day Of The Lord ! Why Do You Long For The Day Of The Lord ? That Day Will Be Darkness, Not Light.
19 - சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.
English:- It Will Be As Though A Man Fled From A Lion Only To Meet A Bear, As Though He Entered His House And Rested His Hand On The Wall Only To Have A Snake Bite Him.
20 - கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ?
English:- Will Not The Day Of The Lord Be Darkness, Not Light- Pitch-dark, Without A Ray Of Brightness?
21 - உங்கள் பண்டிகைகளைப் பகைத்துவெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்புநாட்களில் எனக்குப் பிரியமில்லை.
English:- "I Hate, I Despise Your Religious Feasts; I Cannot Stand Your Assemblies.
22 - உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.
English:- Even Though You Bring Me Burnt Offerings And Grain Offerings, I Will Not Accept Them. Though You Bring Choice Fellowship Offerings, I Will Have No Regard For Them.
23 - உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.
English:- Away With The Noise Of Your Songs! I Will Not Listen To The Music Of Your Harps.
24 - நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது.
English:- But Let Justice Roll On Like A River, Righteousness Like A Never-failing Stream!
25 - இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?
English:- "Did You Bring Me Sacrifices And Offerings Forty Years In The Desert, O House Of Israel?
26 - நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளேகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திர ராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே.
English:- You Have Lifted Up The Shrine Of Your King, The Pedestal Of Your Idols, The Star Of Your God - Which You Made For Yourselves.
27 - ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
English:- Therefore I Will Send You Into Exile Beyond Damascus," Says The Lord , Whose Name Is God Almighty.