பரிசுத்த வேதாகமம் ரோமர் அதிகாரம் 6 – Read Holy Bible Book Of Romans Chapter 6 In Tamil With English Reference
1 - ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.
English:- What Shall We Say, Then? Shall We Go On Sinning So That Grace May Increase?
2 - பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
English:- By No Means! We Died To Sin; How Can We Live In It Any Longer?
3 - கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
English:- Or Don't You Know That All Of Us Who Were Baptized Into Christ Jesus Were Baptized Into His Death?
4 - மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
English:- We Were Therefore Buried With Him Through Baptism Into Death In Order That, Just As Christ Was Raised From The Dead Through The Glory Of The Father, We Too May Live A New Life.
5 - ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
English:- If We Have Been United With Him Like This In His Death, We Will Certainly Also Be United With Him In His Resurrection.
6 - நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
English:- For We Know That Our Old Self Was Crucified With Him So That The Body Of Sin Might Be Done Away With, That We Should No Longer Be Slaves To Sin--
7 - மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
English:- Because Anyone Who Has Died Has Been Freed From Sin.
8 - ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
English:- Now If We Died With Christ, We Believe That We Will Also Live With Him.
9 - மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
English:- For We Know That Since Christ Was Raised From The Dead, He Cannot Die Again; Death No Longer Has Mastery Over Him.
10 - அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
English:- The Death He Died, He Died To Sin Once For All; But The Life He Lives, He Lives To God.
11 - அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
English:- In The Same Way, Count Yourselves Dead To Sin But Alive To God In Christ Jesus.
12 - ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
English:- Therefore Do Not Let Sin Reign In Your Mortal Body So That You Obey Its Evil Desires.
13 - நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
English:- Do Not Offer The Parts Of Your Body To Sin, As Instruments Of Wickedness, But Rather Offer Yourselves To God, As Those Who Have Been Brought From Death To Life; And Offer The Parts Of Your Body To Him As Instruments Of Righteousness.
14 - நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
English:- For Sin Shall Not Be Your Master, Because You Are Not Under Law, But Under Grace.
15 - இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே.
English:- What Then? Shall We Sin Because We Are Not Under Law But Under Grace? By No Means!
16 - மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
English:- Don't You Know That When You Offer Yourselves To Someone To Obey Him As Slaves, You Are Slaves To The One Whom You Obey--whether You Are Slaves To Sin, Which Leads To Death, Or To Obedience, Which Leads To Righteousness?
17 - முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
English:- But Thanks Be To God That, Though You Used To Be Slaves To Sin, You Wholeheartedly Obeyed The Form Of Teaching To Which You Were Entrusted.
18 - பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
English:- You Have Been Set Free From Sin And Have Become Slaves To Righteousness.
19 - உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
English:- I Put This In Human Terms Because You Are Weak In Your Natural Selves. Just As You Used To Offer The Parts Of Your Body In Slavery To Impurity And To Ever-increasing Wickedness, So Now Offer Them In Slavery To Righteousness Leading To Holiness.
20 - பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.
English:- When You Were Slaves To Sin, You Were Free From The Control Of Righteousness.
21 - இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
English:- What Benefit Did You Reap At That Time From The Things You Are Now Ashamed Of? Those Things Result In Death!
22 - இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
English:- But Now That You Have Been Set Free From Sin And Have Become Slaves To God, The Benefit You Reap Leads To Holiness, And The Result Is Eternal Life.
23 - பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
English:- For The Wages Of Sin Is Death, But The Gift Of God Is Eternal Life In Christ Jesus Our Lord.