பரிசுத்த வேதாகமம் 2 தீமோத்தேயு அதிகாரம் 1 – Read Holy Bible Book Of 2 Timothy Chapter 1 In Tamil With English Reference
1 - கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய சித்தத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
English:- Paul, An Apostle Of Christ Jesus By The Will Of God, According To The Promise Of Life That Is In Christ Jesus,
2 - பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
English:- To Timothy, My Dear Son: Grace, Mercy And Peace From God The Father And Christ Jesus Our Lord.
3 - நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து,
English:- I Thank God, Whom I Serve, As My Forefathers Did, With A Clear Conscience, As Night And Day I Constantly Remember You In My Prayers.
4 - உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.
English:- Recalling Your Tears, I Long To See You, So That I May Be Filled With Joy.
5 - அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
English:- I Have Been Reminded Of Your Sincere Faith, Which First Lived In Your Grandmother Lois And In Your Mother Eunice And, I Am Persuaded, Now Lives In You Also.
6 - இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
English:- For This Reason I Remind You To Fan Into Flame The Gift Of God, Which Is In You Through The Laying On Of My Hands.
7 - தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
English:- For God Did Not Give Us A Spirit Of Timidity, But A Spirit Of Power, Of Love And Of Self-discipline.
8 - ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி.
English:- So Do Not Be Ashamed To Testify About Our Lord, Or Ashamed Of Me His Prisoner. But Join With Me In Suffering For The Gospel, By The Power Of God,
9 - அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
English:- Who Has Saved Us And Called Us To A Holy Life--not Because Of Anything We Have Done But Because Of His Own Purpose And Grace. This Grace Was Given Us In Christ Jesus Before The Beginning Of Time,
10 - நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக்கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
English:- But It Has Now Been Revealed Through The Appearing Of Our Savior, Christ Jesus, Who Has Destroyed Death And Has Brought Life And Immortality To Light Through The Gospel.
11 - அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.
English:- And Of This Gospel I Was Appointed A Herald And An Apostle And A Teacher.
12 - அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
English:- That Is Why I Am Suffering As I Am. Yet I Am Not Ashamed, Because I Know Whom I Have Believed, And Am Convinced That He Is Able To Guard What I Have Entrusted To Him For That Day.
13 - நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
English:- What You Heard From Me, Keep As The Pattern Of Sound Teaching, With Faith And Love In Christ Jesus.
14 - உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
English:- Guard The Good Deposit That Was Entrusted To You--guard It With The Help Of The Holy Spirit Who Lives In Us.
15 - ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும் அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
English:- You Know That Everyone In The Province Of Asia Has Deserted Me, Including Phygelus And Hermogenes.
16 - ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
English:- May The Lord Show Mercy To The Household Of Onesiphorus, Because He Often Refreshed Me And Was Not Ashamed Of My Chains.
17 - அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத்தேடிக் கண்டுபிடித்தான்.
English:- On The Contrary, When He Was In Rome, He Searched Hard For Me Until He Found Me.
18 - அந்நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பற்பல உதவிகளையும் நீ நன்றாய் அறிந்திருக்கிறாயே.
English:- May The Lord Grant That He Will Find Mercy From The Lord On That Day! You Know Very Well In How Many Ways He Helped Me In Ephesus.