அப்போஸ்தலருடைய நடபடிகள் 28 – Acts 28


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் அப்போஸ்தலருடைய நடபடிகள் அதிகாரம் 28 – Read Holy Bible Book Of Acts Chapter 28 In Tamil With English Reference


1 - நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம்.

English:- Once Safely On Shore, We Found Out That The Island Was Called Malta.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-1 - Acts 28-1நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம்.

2 - அந்நியராகிய அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.

English:- The Islanders Showed Us Unusual Kindness. They Built A Fire And Welcomed Us All Because It Was Raining And Cold.


3 - பவுல் சில விறகுகளை வாரி அந்தநெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.

English:- Paul Gathered A Pile Of Brushwood And, As He Put It On The Fire, A Viper, Driven Out By The Heat, Fastened Itself On His Hand.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-3 - Acts 28-3பவுல் சில விறகுகளை வாரி அந்தநெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.

4 - விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

English:- When The Islanders Saw The Snake Hanging From His Hand, They Said To Each Other, "This Man Must Be A Murderer; For Though He Escaped From The Sea, Justice Has Not Allowed Him To Live."

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-4 - Acts 28-4விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

5 - அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.

English:- But Paul Shook The Snake Off Into The Fire And Suffered No Ill Effects.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-5 - Acts 28-5அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.

6 - அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.

English:- The People Expected Him To Swell Up Or Suddenly Fall Dead, But After Waiting A Long Time And Seeing Nothing Unusual Happen To Him, They Changed Their Minds And Said He Was A God.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-6 - Acts 28-6அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.

7 - தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது, அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்றுநாள் பட்சமாய் விசாரித்தான்.

English:- There Was An Estate Nearby That Belonged To Publius, The Chief Official Of The Island. He Welcomed Us To His Home And For Three Days Entertained Us Hospitably.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-7 - Acts 28-7தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது, அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்றுநாள் பட்சமாய் விசாரித்தான்.

8 - புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான்.

English:- His Father Was Sick In Bed, Suffering From Fever And Dysentery. Paul Went In To See Him And, After Prayer, Placed His Hands On Him And Healed Him.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-8 - Acts 28-8புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான்.

9 - இது நடந்தபின்பு, தீவிலே இருந்தமற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள்.

English:- When This Had Happened, The Rest Of The Sick On The Island Came And Were Cured.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-9 - Acts 28-9இது நடந்தபின்பு, தீவிலே இருந்தமற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள்.

10 - அவர்கள் எங்களுக்கு அநேக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.

English:- They Honored Us In Many Ways And When We Were Ready To Sail, They Furnished Us With The Supplies We Needed.


11 - மூன்றுமாதம் சென்றபின்பு, அந்த தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலிலே நாங்கள் ஏறிப் புறப்பட்டு,

English:- After Three Months We Put Out To Sea In A Ship That Had Wintered In The Island. It Was An Alexandrian Ship With The Figurehead Of The Twin Gods Castor And Pollux.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-11 - Acts 28-11மூன்றுமாதம் சென்றபின்பு, அந்த தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலிலே நாங்கள் ஏறிப் புறப்பட்டு,

12 - சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.

English:- We Put In At Syracuse And Stayed There Three Days.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-12 - Acts 28-12சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.

13 - அவ்விடம் விட்டுச் சுற்றியோடி, ரேகியு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,

English:- From There We Set Sail And Arrived At Rhegium. The Next Day The South Wind Came Up, And On The Following Day We Reached Puteoli.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-13 - Acts 28-13அவ்விடம் விட்டுச் சுற்றியோடி, ரேகியு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,

14 - அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.

English:- There We Found Some Brothers Who Invited Us To Spend A Week With Them. And So We Came To Rome.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-14 - Acts 28-14அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.

15 - அவ்விடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபுரம்வரைக்கும், சிலர் மூன்று சத்திரம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தான்.

English:- The Brothers There Had Heard That We Were Coming, And They Traveled As Far As The Forum Of Appius And The Three Taverns To Meet Us. At The Sight Of These Men Paul Thanked God And Was Encouraged.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-15 - Acts 28-15அவ்விடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபுரம்வரைக்கும், சிலர் மூன்று சத்திரம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தான்.

16 - நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.

English:- When We Got To Rome, Paul Was Allowed To Live By Himself, With A Soldier To Guard Him.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-16 - Acts 28-16நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.

17 - மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.

English:- Three Days Later He Called Together The Leaders Of The Jews. When They Had Assembled, Paul Said To Them: "My Brothers, Although I Have Done Nothing Against Our People Or Against The Customs Of Our Ancestors, I Was Arrested In Jerusalem And Handed Over To The Romans.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-17 - Acts 28-17மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.

18 - அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.

English:- They Examined Me And Wanted To Release Me, Because I Was Not Guilty Of Any Crime Deserving Death.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-18 - Acts 28-18அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.

19 - யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.

English:- But When The Jews Objected, I Was Compelled To Appeal To Caesar--not That I Had Any Charge To Bring Against My Own People.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-19 - Acts 28-19யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.

20 - இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களுடனே பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.

English:- For This Reason I Have Asked To See You And Talk With You. It Is Because Of The Hope Of Israel That I Am Bound With This Chain."


21 - அதற்கு அவர்கள் உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.

English:- They Replied, "We Have Not Received Any Letters From Judea Concerning You, And None Of The Brothers Who Have Come From There Has Reported Or Said Anything Bad About You.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-21 - Acts 28-21அதற்கு அவர்கள் உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.

22 - எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.

English:- But We Want To Hear What Your Views Are, For We Know That People Everywhere Are Talking Against This Sect."

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-22 - Acts 28-22எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.

23 - அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான்.

English:- They Arranged To Meet Paul On A Certain Day, And Came In Even Larger Numbers To The Place Where He Was Staying. From Morning Till Evening He Explained And Declared To Them The Kingdom Of God And Tried To Convince Them About Jesus From The Law Of Moses And From The Prophets.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-23 - Acts 28-23அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான்.

24 - அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள்.

English:- Some Were Convinced By What He Said, But Others Would Not Believe.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-24 - Acts 28-24அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள்.

25 - இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது:

English:- They Disagreed Among Themselves And Began To Leave After Paul Had Made This Final Statement: "The Holy Spirit Spoke The Truth To Your Forefathers When He Said Through Isaiah The Prophet:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-25 - Acts 28-25இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது:

26 - நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள்

English:- " 'Go To This People And Say, "You Will Be Ever Hearing But Never Understanding; You Will Be Ever Seeing But Never Perceiving."

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-26 - Acts 28-26நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள்

27 - இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.

English:- For This People's Heart Has Become Calloused; They Hardly Hear With Their Ears, And They Have Closed Their Eyes. Otherwise They Might See With Their Eyes, Hear With Their Ears, Understand With Their Hearts And Turn, And I Would Heal Them.'

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-27 - Acts 28-27இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.

28 - ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.

English:- "Therefore I Want You To Know That God's Salvation Has Been Sent To The Gentiles, And They Will Listen!"

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-28 - Acts 28-28ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.

29 - இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்.

English:- After He Said This, The Jews Left, Arguing Vigorously Among Themselves.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-29 - Acts 28-29இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்.

30 - பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,

English:- For Two Whole Years Paul Stayed There In His Own Rented House And Welcomed All Who Came To See Him.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-30 - Acts 28-30பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,

31 - மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

English:- Boldly And Without Hindrance He Preached The Kingdom Of God And Taught About The Lord Jesus Christ.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28-31 - Acts 28-31மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.


Previous Chapter Next Chapter