அப்போஸ்தலருடைய நடபடிகள் 6 – Acts 6


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் அப்போஸ்தலருடைய நடபடிகள் அதிகாரம் 6 – Read Holy Bible Book Of Acts Chapter 6 In Tamil With English Reference


1 - அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.

English:- In Those Days When The Number Of Disciples Was Increasing, The Grecian Jews Among Them Complained Against The Hebraic Jews Because Their Widows Were Being Overlooked In The Daily Distribution Of Food.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-1 - Acts 6-1அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.

2 - அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.

English:- So The Twelve Gathered All The Disciples Together And Said, "It Would Not Be Right For Us To Neglect The Ministry Of The Word Of God In Order To Wait On Tables.


3 - ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.

English:- Brothers, Choose Seven Men From Among You Who Are Known To Be Full Of The Spirit And Wisdom. We Will Turn This Responsibility Over To Them

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-3 - Acts 6-3ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.

4 - நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.

English:- And Will Give Our Attention To Prayer And The Ministry Of The Word."

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-4 - Acts 6-4நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.

5 - இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,

English:- This Proposal Pleased The Whole Group. They Chose Stephen, A Man Full Of Faith And Of The Holy Spirit; Also Philip, Procorus, Nicanor, Timon, Parmenas, And Nicolas From Antioch, A Convert To Judaism.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-5 - Acts 6-5இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,

6 - அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.

English:- They Presented These Men To The Apostles, Who Prayed And Laid Their Hands On Them.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-6 - Acts 6-6அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.

7 - தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

English:- So The Word Of God Spread. The Number Of Disciples In Jerusalem Increased Rapidly, And A Large Number Of Priests Became Obedient To The Faith.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-7 - Acts 6-7தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

8 - ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

English:- Now Stephen, A Man Full Of God's Grace And Power, Did Great Wonders And Miraculous Signs Among The People.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-8 - Acts 6-8ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

9 - அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.

English:- Opposition Arose, However, From Members Of The Synagogue Of The Freedmen (As It Was Called)--jews Of Cyrene And Alexandria As Well As The Provinces Of Cilicia And Asia. These Men Began To Argue With Stephen,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-9 - Acts 6-9அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.

10 - அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.

English:- But They Could Not Stand Up Against His Wisdom Or The Spirit By Whom He Spoke.


11 - அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;

English:- Then They Secretly Persuaded Some Men To Say, "We Have Heard Stephen Speak Words Of Blasphemy Against Moses And Against God."

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-11 - Acts 6-11அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;

12 - ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;

English:- So They Stirred Up The People And The Elders And The Teachers Of The Law. They Seized Stephen And Brought Him Before The Sanhedrin.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-12 - Acts 6-12ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;

13 - பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்;

English:- They Produced False Witnesses, Who Testified, "This Fellow Never Stops Speaking Against This Holy Place And Against The Law.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-13 - Acts 6-13பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்;

14 - எப்படியென்றால் நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக் கேட்டோம் என்றார்கள்.

English:- For We Have Heard Him Say That This Jesus Of Nazareth Will Destroy This Place And Change The Customs Moses Handed Down To Us."

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-14 - Acts 6-14எப்படியென்றால் நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக் கேட்டோம் என்றார்கள்.

15 - ஆலோசனை சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.

English:- All Who Were Sitting In The Sanhedrin Looked Intently At Stephen, And They Saw That His Face Was Like The Face Of An Angel.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-15 - Acts 6-15ஆலோசனை சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.


Previous Chapter Next Chapter