பரிசுத்த வேதாகமம் ஆமோஸ் அதிகாரம் 7 – Read Holy Bible Book Of Amos Chapter 7 In Tamil With English Reference
1 - கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.
English:- This Is What The Sovereign Lord Showed Me: He Was Preparing Swarms Of Locusts After The King's Share Had Been Harvested And Just As The Second Crop Was Coming Up.
2 - அவைகள் தேசத்தின் புல்லைத்தின்று தீர்ந்தபோது, நான்: கர்த்தராகிய ஆண்டவரே மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
English:- When They Had Stripped The Land Clean, I Cried Out, "Sovereign Lord , Forgive! How Can Jacob Survive? He Is So Small!"
3 - கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
English:- So The Lord Relented. "This Will Not Happen," The Lord Said.
4 - கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது.
English:- This Is What The Sovereign Lord Showed Me: The Sovereign Lord Was Calling For Judgment By Fire; It Dried Up The Great Deep And Devoured The Land.
5 - அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
English:- Then I Cried Out, "Sovereign Lord , I Beg You, Stop! How Can Jacob Survive? He Is So Small!"
6 - கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
English:- So The Lord Relented. "This Will Not Happen Either," The Sovereign Lord Said.
7 - பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.
English:- This Is What He Showed Me: The Lord Was Standing By A Wall That Had Been Built True To Plumb, With A Plumb Line In His Hand.
8 - கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என்ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
English:- And The Lord Asked Me, "What Do You See, Amos?" "A Plumb Line," I Replied. Then The Lord Said, "Look, I Am Setting A Plumb Line Among My People Israel; I Will Spare Them No Longer.
9 - ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்கள் அவாந்தரமுமாக்கப்படும்; நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பிவருவேன் என்றார்.
English:- "The High Places Of Isaac Will Be Destroyed And The Sanctuaries Of Israel Will Be Ruined; With My Sword I Will Rise Against The House Of Jeroboam."
10 - அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.
English:- Then Amaziah The Priest Of Bethel Sent A Message To Jeroboam King Of Israel: "Amos Is Raising A Conspiracy Against You In The Very Heart Of Israel. The Land Cannot Bear All His Words.
11 - எரோபெயாம் பட்டயத்தினால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன்தேசத்திலிருந்து சிறைபிடித்துக்கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான்.
English:- For This Is What Amos Is Saying: " 'Jeroboam Will Die By The Sword, And Israel Will Surely Go Into Exile, Away From Their Native Land.' "
12 - அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.
English:- Then Amaziah Said To Amos, "Get Out, You Seer! Go Back To The Land Of Judah. Earn Your Bread There And Do Your Prophesying There.
13 - பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.
English:- Don't Prophesy Anymore At Bethel, Because This Is The King's Sanctuary And The Temple Of The Kingdom."
14 - ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.
English:- Amos Answered Amaziah, "I Was Neither A Prophet Nor A Prophet's Son, But I Was A Shepherd, And I Also Took Care Of Sycamore-fig Trees.
15 - ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.
English:- But The Lord Took Me From Tending The Flock And Said To Me, 'Go, Prophesy To My People Israel.'
16 - இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
English:- Now Then, Hear The Word Of The Lord . You Say, " 'Do Not Prophesy Against Israel, And Stop Preaching Against The House Of Isaac.'
17 - இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயாவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
English:- "Therefore This Is What The Lord Says: " 'Your Wife Will Become A Prostitute In The City, And Your Sons And Daughters Will Fall By The Sword. Your Land Will Be Measured And Divided Up, And You Yourself Will Die In A Pagan Country. And Israel Will Certainly Go Into Exile, Away From Their Native Land.' "