பரிசுத்த வேதாகமம் உபாகமம் அதிகாரம் 14 – Read Holy Bible Book Of Deuteronomy Chapter 14 In Tamil With English Reference
1 - நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக் கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.
English:- You Are The Children Of The Lord Your God. Do Not Cut Yourselves Or Shave The Front Of Your Heads For The Dead,
2 - நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.
English:- For You Are A People Holy To The Lord Your God. Out Of All The Peoples On The Face Of The Earth, The Lord Has Chosen You To Be His Treasured Possession.
4 - நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,
English:- These Are The Animals You May Eat: The Ox, The Sheep, The Goat,
5 - மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே.
English:- The Deer, The Gazelle, The Roe Deer, The Wild Goat, The Ibex, The Antelope And The Mountain Sheep.
6 - மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்;
English:- You May Eat Any Animal That Has A Split Hoof Divided In Two And That Chews The Cud.
7 - அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
English:- However, Of Those That Chew The Cud Or That Have A Split Hoof Completely Divided You May Not Eat The Camel, The Rabbit Or The Coney. Although They Chew The Cud, They Do Not Have A Split Hoof; They Are Ceremonially Unclean For You.
8 - பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.
English:- The Pig Is Also Unclean; Although It Has A Split Hoof, It Does Not Chew The Cud. You Are Not To Eat Their Meat Or Touch Their Carcasses.
9 - ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
English:- Of All The Creatures Living In The Water, You May Eat Any That Has Fins And Scales.
10 - சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
English:- But Anything That Does Not Have Fins And Scales You May Not Eat; For You It Is Unclean.
12 - நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
English:- But These You May Not Eat: The Eagle, The Vulture, The Black Vulture,
13 - பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும்,
English:- The Red Kite, The Black Kite, Any Kind Of Falcon,
15 - தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,
English:- The Horned Owl, The Screech Owl, The Gull, Any Kind Of Hawk,
18 - கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலுமே.
English:- The Stork, Any Kind Of Heron, The Hoopoe And The Bat.
19 - பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தாமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள்.
English:- All Flying Insects That Swarm Are Unclean To You; Do Not Eat Them.
20 - சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.
English:- But Any Winged Creature That Is Clean You May Eat.
21 - தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
English:- Do Not Eat Anything You Find Already Dead. You May Give It To An Alien Living In Any Of Your Towns, And He May Eat It, Or You May Sell It To A Foreigner. But You Are A People Holy To The Lord Your God. Do Not Cook A Young Goat In Its Mother's Milk.
22 - நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
English:- Be Sure To Set Aside A Tenth Of All That Your Fields Produce Each Year.
23 - உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.
English:- Eat The Tithe Of Your Grain, New Wine And Oil, And The Firstborn Of Your Herds And Flocks In The Presence Of The Lord Your God At The Place He Will Choose As A Dwelling For His Name, So That You May Learn To Revere The Lord Your God Always.
24 - உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,
English:- But If That Place Is Too Distant And You Have Been Blessed By The Lord Your God And Cannot Carry Your Tithe (Because The Place Where The Lord Will Choose To Put His Name Is So Far Away),
25 - அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய்,
English:- Then Exchange Your Tithe For Silver, And Take The Silver With You And Go To The Place The Lord Your God Will Choose.
26 - அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.
English:- Use The Silver To Buy Whatever You Like: Cattle, Sheep, Wine Or Other Fermented Drink, Or Anything You Wish. Then You And Your Household Shall Eat There In The Presence Of The Lord Your God And Rejoice.
27 - லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.
English:- And Do Not Neglect The Levites Living In Your Towns, For They Have No Allotment Or Inheritance Of Their Own.
28 - மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.
English:- At The End Of Every Three Years, Bring All The Tithes Of That Year's Produce And Store It In Your Towns,
29 - லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
English:- So That The Levites (Who Have No Allotment Or Inheritance Of Their Own) And The Aliens, The Fatherless And The Widows Who Live In Your Towns May Come And Eat And Be Satisfied, And So That The Lord Your God May Bless You In All The Work Of Your Hands.