பரிசுத்த வேதாகமம் உபாகமம் அதிகாரம் 26 – Read Holy Bible Book Of Deuteronomy Chapter 26 In Tamil With English Reference
1 - உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம்பண்ணும்போது,
English:- When You Have Entered The Land The Lord Your God Is Giving You As An Inheritance And Have Taken Possession Of It And Settled In It,
2 - உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,
English:- Take Some Of The Firstfruits Of All That You Produce From The Soil Of The Land The Lord Your God Is Giving You And Put Them In A Basket. Then Go To The Place The Lord Your God Will Choose As A Dwelling For His Name
3 - அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.
English:- And Say To The Priest In Office At The Time, "I Declare Today To The Lord Your God That I Have Come To The Land The Lord Swore To Our Forefathers To Give Us."
4 - அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன்.
English:- The Priest Shall Take The Basket From Your Hands And Set It Down In Front Of The Altar Of The Lord Your God.
5 - அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால் என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரிய தேசத்தானாயிருந்தான். அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்.
English:- Then You Shall Declare Before The Lord Your God: "My Father Was A Wandering Aramean, And He Went Down Into Egypt With A Few People And Lived There And Became A Great Nation, Powerful And Numerous.
6 - எகிப்தியர் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கனமான வேலையைச் சுமத்தினபோது,
English:- But The Egyptians Mistreated Us And Made Us Suffer, Putting Us To Hard Labor.
7 - எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து,
English:- Then We Cried Out To The Lord , The God Of Our Fathers, And The Lord Heard Our Voice And Saw Our Misery, Toil And Oppression.
8 - எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி,
English:- So The Lord Brought Us Out Of Egypt With A Mighty Hand And An Outstretched Arm, With Great Terror And With Miraculous Signs And Wonders.
9 - எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.
English:- He Brought Us To This Place And Gave Us This Land, A Land Flowing With Milk And Honey;
10 - இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன்தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,
English:- And Now I Bring The Firstfruits Of The Soil That You, O Lord , Have Given Me." Place The Basket Before The Lord Your God And Bow Down Before Him.
11 - நீயும் லேவியனும், உன்னிடத்திலிருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.
English:- And You And The Levites And The Aliens Among You Shall Rejoice In All The Good Things The Lord Your God Has Given To You And Your Household.
12 - தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,
English:- When You Have Finished Setting Aside A Tenth Of All Your Produce In The Third Year, The Year Of The Tithe, You Shall Give It To The Levite, The Alien, The Fatherless And The Widow, So That They May Eat In Your Towns And Be Satisfied.
13 - நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.
English:- Then Say To The Lord Your God: "I Have Removed From My House The Sacred Portion And Have Given It To The Levite, The Alien, The Fatherless And The Widow, According To All You Commanded. I Have Not Turned Aside From Your Commands Nor Have I Forgotten Any Of Them.
14 - நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவுமில்லை; இழவு காரியத்துக்காக அதில் ஒன்று படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.
English:- I Have Not Eaten Any Of The Sacred Portion While I Was In Mourning, Nor Have I Removed Any Of It While I Was Unclean, Nor Have I Offered Any Of It To The Dead. I Have Obeyed The Lord My God; I Have Done Everything You Commanded Me.
15 - நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.
English:- Look Down From Heaven, Your Holy Dwelling Place, And Bless Your People Israel And The Land You Have Given Us As You Promised On Oath To Our Forefathers, A Land Flowing With Milk And Honey."
16 - இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும்பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழுஇருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய்.
English:- The Lord Your God Commands You This Day To Follow These Decrees And Laws; Carefully Observe Them With All Your Heart And With All Your Soul.
17 - கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பாரென்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.
English:- You Have Declared This Day That The Lord Is Your God And That You Will Walk In His Ways, That You Will Keep His Decrees, Commands And Laws, And That You Will Obey Him.
18 - கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்,
English:- And The Lord Has Declared This Day That You Are His People, His Treasured Possession As He Promised, And That You Are To Keep All His Commands.
19 - நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.
English:- He Has Declared That He Will Set You In Praise, Fame And Honor High Above All The Nations He Has Made And That You Will Be A People Holy To The Lord Your God, As He Promised.