பரிசுத்த வேதாகமம் எபேசியர் அதிகாரம் 5 – Read Holy Bible Book Of Ephesians Chapter 5 In Tamil With English Reference
1 - ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
English:- Be Imitators Of God, Therefore, As Dearly Loved Children
2 - கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
English:- And Live A Life Of Love, Just As Christ Loved Us And Gave Himself Up For Us As A Fragrant Offering And Sacrifice To God.
3 - மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையுமாகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.
English:- But Among You There Must Not Be Even A Hint Of Sexual Immorality, Or Of Any Kind Of Impurity, Or Of Greed, Because These Are Improper For God's Holy People.
4 - அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
English:- Nor Should There Be Obscenity, Foolish Talk Or Coarse Joking, Which Are Out Of Place, But Rather Thanksgiving.
5 - விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
English:- For Of This You Can Be Sure: No Immoral, Impure Or Greedy Person--such A Man Is An Idolater--has Any Inheritance In The Kingdom Of Christ And Of God.
6 - இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
English:- Let No One Deceive You With Empty Words, For Because Of Such Things God's Wrath Comes On Those Who Are Disobedient.
8 - முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
English:- For You Were Once Darkness, But Now You Are Light In The Lord. Live As Children Of Light
9 - ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
English:- (For The Fruit Of The Light Consists In All Goodness, Righteousness And Truth)
10 - கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
English:- And Find Out What Pleases The Lord.
11 - கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
English:- Have Nothing To Do With The Fruitless Deeds Of Darkness, But Rather Expose Them.
12 - அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.
English:- For It Is Shameful Even To Mention What The Disobedient Do In Secret.
13 - அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.
English:- But Everything Exposed By The Light Becomes Visible,
14 - ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.
English:- For It Is Light That Makes Everything Visible. This Is Why It Is Said: "Wake Up, O Sleeper, Rise From The Dead, And Christ Will Shine On You."
15 - ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,
English:- Be Very Careful, Then, How You Live--not As Unwise But As Wise,
16 - நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
English:- Making The Most Of Every Opportunity, Because The Days Are Evil.
17 - ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
English:- Therefore Do Not Be Foolish, But Understand What The Lord's Will Is.
18 - துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;
English:- Do Not Get Drunk On Wine, Which Leads To Debauchery. Instead, Be Filled With The Spirit.
19 - சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
English:- Speak To One Another With Psalms, Hymns And Spiritual Songs. Sing And Make Music In Your Heart To The Lord,
20 - நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
English:- Always Giving Thanks To God The Father For Everything, In The Name Of Our Lord Jesus Christ.
21 - தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
English:- Submit To One Another Out Of Reverence For Christ.
22 - மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
English:- Wives, Submit To Your Husbands As To The Lord.
23 - கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
English:- For The Husband Is The Head Of The Wife As Christ Is The Head Of The Church, His Body, Of Which He Is The Savior.
24 - ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
English:- Now As The Church Submits To Christ, So Also Wives Should Submit To Their Husbands In Everything.
25 - புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
English:- Husbands, Love Your Wives, Just As Christ Loved The Church And Gave Himself Up For Her
26 - தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
English:- To Make Her Holy, Cleansing Her By The Washing With Water Through The Word,
27 - கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
English:- And To Present Her To Himself As A Radiant Church, Without Stain Or Wrinkle Or Any Other Blemish, But Holy And Blameless.
28 - அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
English:- In This Same Way, Husbands Ought To Love Their Wives As Their Own Bodies. He Who Loves His Wife Loves Himself.
29 - தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
English:- After All, No One Ever Hated His Own Body, But He Feeds And Cares For It, Just As Christ Does The Church--
30 - நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
English:- For We Are Members Of His Body.
31 - இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
English:- "For This Reason A Man Will Leave His Father And Mother And Be United To His Wife, And The Two Will Become One Flesh."
32 - இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
English:- This Is A Profound Mystery--but I Am Talking About Christ And The Church.
33 - எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.
English:- However, Each One Of You Also Must Love His Wife As He Loves Himself, And The Wife Must Respect Her Husband.