பரிசுத்த வேதாகமம் எசேக்கியேல் அதிகாரம் 30 – Read Holy Bible Book Of Ezekiel Chapter 30 In Tamil With English Reference
2 - மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
English:- "Son Of Man, Prophesy And Say: 'This Is What The Sovereign Lord Says: " 'Wail And Say, "Alas For That Day!"
3 - நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது மந்தாரமான நாள், அது புறஜாதிகளுக்கு வரும் காலம்.
English:- For The Day Is Near, The Day Of The Lord Is Near- A Day Of Clouds, A Time Of Doom For The Nations.
4 - பட்டயம் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலையுண்கிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகா வேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான ஜனத்தைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் நிர்மூலமாக்கப்படும்.
English:- A Sword Will Come Against Egypt, And Anguish Will Come Upon Cush. When The Slain Fall In Egypt, Her Wealth Will Be Carried Away And Her Foundations Torn Down.
5 - எத்தியோப்பியரும், பூத்தியரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.
English:- Cush And Put, Lydia And All Arabia, Libya And The People Of The Covenant Land Will Fall By The Sword Along With Egypt.
6 - எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோம் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதிலே மிகதோல்முதல் செவெனேவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
English:- " 'This Is What The Lord Says: " 'The Allies Of Egypt Will Fall And Her Proud Strength Will Fail. From Migdol To Aswan They Will Fall By The Sword Within Her, Declares The Sovereign Lord .
7 - பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும்.
English:- " 'They Will Be Desolate Among Desolate Lands, And Their Cities Will Lie Among Ruined Cities.
8 - நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
English:- Then They Will Know That I Am The Lord , When I Set Fire To Egypt And All Her Helpers Are Crushed.
9 - நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.
English:- " 'On That Day Messengers Will Go Out From Me In Ships To Frighten Cush Out Of Her Complacency. Anguish Will Take Hold Of Them On The Day Of Egypt's Doom, For It Is Sure To Come.
10 - கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.
English:- " 'This Is What The Sovereign Lord Says: " 'I Will Put An End To The Hordes Of Egypt By The Hand Of Nebuchadnezzar King Of Babylon.
11 - இவனும் இவனோடேகூட ஜாதிகளில் மகா பலசாலிகளான இவனுடைய ஜனங்களும் தேசத்தை அழிப்பதற்காக ஏவப்பட்டு வந்து, தங்கள் பட்டயங்களை எகிப்துக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.
English:- He And His Army-the Most Ruthless Of Nations- Will Be Brought In To Destroy The Land. They Will Draw Their Swords Against Egypt And Fill The Land With The Slain.
12 - அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நியதேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
English:- I Will Dry Up The Streams Of The Nile And Sell The Land To Evil Men; By The Hand Of Foreigners I Will Lay Waste The Land And Everything In It. I The Lord Have Spoken.
13 - கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியுமிரான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,
English:- " 'This Is What The Sovereign Lord Says: " 'I Will Destroy The Idols And Put An End To The Images In Memphis. No Longer Will There Be A Prince In Egypt, And I Will Spread Fear Throughout The Land.
14 - பத்ரோசைப் பாழாக்கி சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து,
English:- I Will Lay Waste Upper Egypt, Set Fire To Zoan And Inflict Punishment On Thebes.
15 - எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோபட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன்.
English:- I Will Pour Out My Wrath On Pelusium, The Stronghold Of Egypt, And Cut Off The Hordes Of Thebes.
16 - எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும்.
English:- I Will Set Fire To Egypt; Pelusium Will Writhe In Agony. Thebes Will Be Taken By Storm; Memphis Will Be In Constant Distress.
17 - ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
English:- The Young Men Of Heliopolis And Bubastis Will Fall By The Sword, And The Cities Themselves Will Go Into Captivity.
18 - எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள்.
English:- Dark Will Be The Day At Tahpanhes When I Break The Yoke Of Egypt; There Her Proud Strength Will Come To An End. She Will Be Covered With Clouds, And Her Villages Will Go Into Captivity.
19 - இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
English:- So I Will Inflict Punishment On Egypt, And They Will Know That I Am The Lord .' "
20 - பதினோராம் வருஷம் முதலாம்மாதம் ஏழாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
English:- In The Eleventh Year, In The First Month On The Seventh Day, The Word Of The Lord Came To Me:
21 - மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.
English:- "Son Of Man, I Have Broken The Arm Of Pharaoh King Of Egypt. It Has Not Been Bound Up For Healing Or Put In A Splint So As To Become Strong Enough To Hold A Sword.
22 - ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி,
English:- Therefore This Is What The Sovereign Lord Says: I Am Against Pharaoh King Of Egypt. I Will Break Both His Arms, The Good Arm As Well As The Broken One, And Make The Sword Fall From His Hand.
23 - எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்.
English:- I Will Disperse The Egyptians Among The Nations And Scatter Them Through The Countries.
24 - பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.
English:- I Will Strengthen The Arms Of The King Of Babylon And Put My Sword In His Hand, But I Will Break The Arms Of Pharaoh, And He Will Groan Before Him Like A Mortally Wounded Man.
25 - பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோம்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்துதேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
English:- I Will Strengthen The Arms Of The King Of Babylon, But The Arms Of Pharaoh Will Fall Limp. Then They Will Know That I Am The Lord , When I Put My Sword Into The Hand Of The King Of Babylon And He Brandishes It Against Egypt.
26 - நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
English:- I Will Disperse The Egyptians Among The Nations And Scatter Them Through The Countries. Then They Will Know That I Am The Lord ."