பரிசுத்த வேதாகமம் எசேக்கியேல் அதிகாரம் 7 – Read Holy Bible Book Of Ezekiel Chapter 7 In Tamil With English Reference
2 - மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.
English:- "Son Of Man, This Is What The Sovereign Lord Says To The Land Of Israel: The End! The End Has Come Upon The Four Corners Of The Land.
3 - இப்போதே உன்மேல் முடிவுவருகிறது; நான் என் கோபத்தை உன்மேல் வருவித்து, உன் வழிகளுக்குத்தக்கதாக உன்னை நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன்.
English:- The End Is Now Upon You And I Will Unleash My Anger Against You. I Will Judge You According To Your Conduct And Repay You For All Your Detestable Practices.
4 - என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
English:- I Will Not Look On You With Pity Or Spare You; I Will Surely Repay You For Your Conduct And The Detestable Practices Among You. Then You Will Know That I Am The Lord .
5 - கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது.
English:- "This Is What The Sovereign Lord Says: Disaster! An Unheard-of Disaster Is Coming.
6 - முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாயிருக்கிறது; இதோ, வருகிறது.
English:- The End Has Come! The End Has Come! It Has Roused Itself Against You. It Has Come!
7 - தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது, காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.
English:- Doom Has Come Upon You-you Who Dwell In The Land. The Time Has Come, The Day Is Near; There Is Panic, Not Joy, Upon The Mountains.
8 - இப்பொழுது விரைவில் என் உக்கிரத்தை உன்மேல் ஊற்றி, என் கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன் வழிகளுக்குத்தக்கதாக நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன்.
English:- I Am About To Pour Out My Wrath On You And Spend My Anger Against You; I Will Judge You According To Your Conduct And Repay You For All Your Detestable Practices.
9 - என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
English:- I Will Not Look On You With Pity Or Spare You; I Will Repay You In Accordance With Your Conduct And The Detestable Practices Among You. Then You Will Know That It Is I The Lord Who Strikes The Blow.
10 - இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது, மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.
English:- "The Day Is Here! It Has Come! Doom Has Burst Forth, The Rod Has Budded, Arrogance Has Blossomed!
11 - அக்கிரமத்துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.
English:- Violence Has Grown Into A Rod To Punish Wickedness; None Of The People Will Be Left, None Of That Crowd-no Wealth, Nothing Of Value.
12 - அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பல்மேலும் உக்கிரம் இறங்கும்.
English:- The Time Has Come, The Day Has Arrived. Let Not The Buyer Rejoice Nor The Seller Grieve, For Wrath Is Upon The Whole Crowd.
13 - அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத்திடப்படுத்தமாட்டான்.
English:- The Seller Will Not Recover The Land He Has Sold As Long As Both Of Them Live, For The Vision Concerning The Whole Crowd Will Not Be Reversed. Because Of Their Sins, Not One Of Them Will Preserve His Life.
14 - அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்பண்ணியும், யுத்தத்துக்குப் போகிறவனில்லை; என் உக்கிரம் அதின் திரளான கும்பின்மேலும் இறங்குகிறது.
English:- Though They Blow The Trumpet And Get Everything Ready, No One Will Go Into Battle, For My Wrath Is Upon The Whole Crowd.
15 - வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல் வெளியில் இருக்கிறவன் பட்டயத்தால் சாவான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் பட்சிக்கும்.
English:- "Outside Is The Sword, Inside Are Plague And Famine; Those In The Country Will Die By The Sword, And Those In The City Will Be Devoured By Famine And Plague.
16 - அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன் தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.
English:- All Who Survive And Escape Will Be In The Mountains, Moaning Like Doves Of The Valleys, Each Because Of His Sins.
17 - எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.
English:- Every Hand Will Go Limp, And Every Knee Will Become As Weak As Water.
18 - இரட்டை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும்.
English:- They Will Put On Sackcloth And Be Clothed With Terror. Their Faces Will Be Covered With Shame And Their Heads Will Be Shaved.
19 - தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.
English:- They Will Throw Their Silver Into The Streets, And Their Gold Will Be An Unclean Thing. Their Silver And Gold Will Not Be Able To Save Them In The Day Of The Lord 'S Wrath. They Will Not Satisfy Their Hunger Or Fill Their Stomachs With It, For It Has Made Them Stumble Into Sin.
20 - அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கென்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீயென்றிகழப்படத்தக்கதுமான காரியங்களின் விக்கிரகங்களை உண்டுபண்ணினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி,
English:- They Were Proud Of Their Beautiful Jewelry And Used It To Make Their Detestable Idols And Vile Images. Therefore I Will Turn These Into An Unclean Thing For Them.
21 - அதை அந்நியர் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துஷ்டர்களுக்குச் சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
English:- I Will Hand It All Over As Plunder To Foreigners And As Loot To The Wicked Of The Earth, And They Will Defile It.
22 - என் முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என் அந்தரங்க ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; பறிகாரர் அதற்குள் பிரவேசித்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
English:- I Will Turn My Face Away From Them, And They Will Desecrate My Treasured Place; Robbers Will Enter It And Desecrate It.
23 - ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.
English:- "Prepare Chains, Because The Land Is Full Of Bloodshed And The City Is Full Of Violence.
24 - ஆகையால் புறஜாதிகளின் துஷ்டர்களை வரப்பண்ணுவேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியப்பண்ணுவேன், அவர்கள் பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும்.
English:- I Will Bring The Most Wicked Of The Nations To Take Possession Of Their Houses; I Will Put An End To The Pride Of The Mighty, And Their Sanctuaries Will Be Desecrated.
25 - சங்காரம் வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடையாது.
English:- When Terror Comes, They Will Seek Peace, But There Will Be None.
26 - விக்கினத்தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய்தியின்மேல் துர்ச்செய்தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியினிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும்.
English:- Calamity Upon Calamity Will Come, And Rumor Upon Rumor. They Will Try To Get A Vision From The Prophet; The Teaching Of The Law By The Priest Will Be Lost, As Will The Counsel Of The Elders.
27 - ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைத் திகில் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்கள் நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
English:- The King Will Mourn, The Prince Will Be Clothed With Despair, And The Hands Of The People Of The Land Will Tremble. I Will Deal With Them According To Their Conduct, And By Their Own Standards I Will Judge Them. Then They Will Know That I Am The Lord ."