பரிசுத்த வேதாகமம் ஆதியாகமம் அதிகாரம் 10 – Read Holy Bible Book Of Genesis Chapter 10 In Tamil With English Reference
1 - நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.
English:- This Is The Account Of Shem, Ham And Japheth, Noah's Sons, Who Themselves Had Sons After The Flood. The Japhethites
2 - யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
English:- The Sons Of Japheth: Gomer, Magog, Madai, Javan, Tubal, Meshech And Tiras.
3 - கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
English:- The Sons Of Gomer: Ashkenaz, Riphath And Togarmah.
4 - யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
English:- The Sons Of Javan: Elishah, Tarshish, The Kittim And The Rodanim.
5 - இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.
English:- (From These The Maritime Peoples Spread Out Into Their Territories By Their Clans Within Their Nations, Each With Its Own Language.) The Hamites
6 - காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
English:- The Sons Of Ham: Cush, Mizraim, Put And Canaan.
7 - கூஷுடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
English:- The Sons Of Cush: Seba, Havilah, Sabtah, Raamah And Sabteca. The Sons Of Raamah: Sheba And Dedan.
8 - கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
English:- Cush Was The Father Of Nimrod, Who Grew To Be A Mighty Warrior On The Earth.
9 - இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.
English:- He Was A Mighty Hunter Before The Lord ; That Is Why It Is Said, "Like Nimrod, A Mighty Hunter Before The Lord ."
10 - சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள்.
English:- The First Centers Of His Kingdom Were Babylon, Erech, Akkad And Calneh, In Shinar.
11 - அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
English:- From That Land He Went To Assyria, Where He Built Nineveh, Rehoboth Ir, Calah
12 - நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
English:- And Resen, Which Is Between Nineveh And Calah; That Is The Great City.
13 - மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
English:- Mizraim Was The Father Of The Ludites, Anamites, Lehabites, Naphtuhites,
14 - பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தொரீமையும் பெற்றான்.
English:- Pathrusites, Casluhites (From Whom The Philistines Came) And Caphtorites.
15 - கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,
English:- Canaan Was The Father Of Sidon His Firstborn, And Of The Hittites,
18 - அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
English:- Arvadites, Zemarites And Hamathites. Later The Canaanite Clans Scattered
19 - கானானியரின் எல்லை, சீதோன்முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது.
English:- And The Borders Of Canaan Reached From Sidon Toward Gerar As Far As Gaza, And Then Toward Sodom, Gomorrah, Admah And Zeboiim, As Far As Lasha.
20 - இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் காமுடைய சந்ததியார்.
English:- These Are The Sons Of Ham By Their Clans And Languages, In Their Territories And Nations. The Semites
21 - சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.
English:- Sons Were Also Born To Shem, Whose Older Brother Was Japheth; Shem Was The Ancestor Of All The Sons Of Eber.
22 - சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
English:- The Sons Of Shem: Elam, Asshur, Arphaxad, Lud And Aram.
23 - ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.
English:- The Sons Of Aram: Uz, Hul, Gether And Meshech.
24 - அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
English:- Arphaxad Was The Father Of Shelah, And Shelah The Father Of Eber.
25 - ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.
English:- Two Sons Were Born To Eber: One Was Named Peleg, Because In His Time The Earth Was Divided; His Brother Was Named Joktan.
26 - யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
English:- Joktan Was The Father Of Almodad, Sheleph, Hazarmaveth, Jerah,
29 - ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
English:- Ophir, Havilah And Jobab. All These Were Sons Of Joktan.
30 - இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது.
English:- The Region Where They Lived Stretched From Mesha Toward Sephar, In The Eastern Hill Country.
31 - இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய சந்ததியார்.
English:- These Are The Sons Of Shem By Their Clans And Languages, In Their Territories And Nations.
32 - தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.
English:- These Are The Clans Of Noah's Sons, According To Their Lines Of Descent, Within Their Nations. From These The Nations Spread Out Over The Earth After The Flood.