பரிசுத்த வேதாகமம் ஆதியாகமம் அதிகாரம் 25 – Read Holy Bible Book Of Genesis Chapter 25 In Tamil With English Reference
1 - ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
English:- Abraham Took Another Wife, Whose Name Was Keturah.
2 - அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.
English:- She Bore Him Zimran, Jokshan, Medan, Midian, Ishbak And Shuah.
3 - யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்.
English:- Jokshan Was The Father Of Sheba And Dedan; The Descendants Of Dedan Were The Asshurites, The Letushites And The Leummites.
4 - மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.
English:- The Sons Of Midian Were Ephah, Epher, Hanoch, Abida And Eldaah. All These Were Descendants Of Keturah.
5 - ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.
English:- Abraham Left Everything He Owned To Isaac.
6 - ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
English:- But While He Was Still Living, He Gave Gifts To The Sons Of His Concubines And Sent Them Away From His Son Isaac To The Land Of The East.
7 - ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.
English:- Altogether, Abraham Lived A Hundred And Seventy-five Years.
8 - பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
English:- Then Abraham Breathed His Last And Died At A Good Old Age, An Old Man And Full Of Years; And He Was Gathered To His People.
9 - அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
English:- His Sons Isaac And Ishmael Buried Him In The Cave Of Machpelah Near Mamre, In The Field Of Ephron Son Of Zohar The Hittite,
10 - அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.
English:- The Field Abraham Had Bought From The Hittites. There Abraham Was Buried With His Wife Sarah.
11 - ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.
English:- After Abraham's Death, God Blessed His Son Isaac, Who Then Lived Near Beer Lahai Roi.
12 - சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு:
English:- This Is The Account Of Abraham's Son Ishmael, Whom Sarah's Maidservant, Hagar The Egyptian, Bore To Abraham.
13 - பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
English:- These Are The Names Of The Sons Of Ishmael, Listed In The Order Of Their Birth: Nebaioth The Firstborn Of Ishmael, Kedar, Adbeel, Mibsam,
15 - ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.
English:- Hadad, Tema, Jetur, Naphish And Kedemah.
16 - தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.
English:- These Were The Sons Of Ishmael, And These Are The Names Of The Twelve Tribal Rulers According To Their Settlements And Camps.
17 - இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
English:- Altogether, Ishmael Lived A Hundred And Thirty-seven Years. He Breathed His Last And Died, And He Was Gathered To His People.
18 - அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.
English:- His Descendants Settled In The Area From Havilah To Shur, Near The Border Of Egypt, As You Go Toward Asshur. And They Lived In Hostility Toward All Their Brothers.
19 - ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.
English:- This Is The Account Of Abraham's Son Isaac. Abraham Became The Father Of Isaac,
20 - ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.
English:- And Isaac Was Forty Years Old When He Married Rebekah Daughter Of Bethuel The Aramean From Paddan Aram And Sister Of Laban The Aramean.
21 - மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
English:- Isaac Prayed To The Lord On Behalf Of His Wife, Because She Was Barren. The Lord Answered His Prayer, And His Wife Rebekah Became Pregnant.
22 - அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.
English:- The Babies Jostled Each Other Within Her, And She Said, "Why Is This Happening To Me?" So She Went To Inquire Of The Lord .
23 - அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.
English:- The Lord Said To Her, "Two Nations Are In Your Womb, And Two Peoples From Within You Will Be Separated; One People Will Be Stronger Than The Other, And The Older Will Serve The Younger."
24 - பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது.
English:- When The Time Came For Her To Give Birth, There Were Twin Boys In Her Womb.
25 - மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்.
English:- The First To Come Out Was Red, And His Whole Body Was Like A Hairy Garment; So They Named Him Esau.
26 - பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.
English:- After This, His Brother Came Out, With His Hand Grasping Esau's Heel; So He Was Named Jacob. Isaac Was Sixty Years Old When Rebekah Gave Birth To Them.
27 - இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.
English:- The Boys Grew Up, And Esau Became A Skillful Hunter, A Man Of The Open Country, While Jacob Was A Quiet Man, Staying Among The Tents.
28 - ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.
English:- Isaac, Who Had A Taste For Wild Game, Loved Esau, But Rebekah Loved Jacob.
29 - ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.
English:- Once When Jacob Was Cooking Some Stew, Esau Came In From The Open Country, Famished.
30 - அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.
English:- He Said To Jacob, "Quick, Let Me Have Some Of That Red Stew! I'm Famished!" (That Is Why He Was Also Called Edom. )
31 - அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.
English:- Jacob Replied, "First Sell Me Your Birthright."
32 - அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்டபுத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.
English:- "Look, I Am About To Die," Esau Said. "What Good Is The Birthright To Me?"
33 - அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.
English:- But Jacob Said, "Swear To Me First." So He Swore An Oath To Him, Selling His Birthright To Jacob.
34 - அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்.
English:- Then Jacob Gave Esau Some Bread And Some Lentil Stew. He Ate And Drank, And Then Got Up And Left. So Esau Despised His Birthright.