ஆதியாகமம் 4 – Genesis 4


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் ஆதியாகமம் அதிகாரம் 4 – Read Holy Bible Book Of Genesis Chapter 4 In Tamil With English Reference


1 - ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

English:- Adam Lay With His Wife Eve, And She Became Pregnant And Gave Birth To Cain. She Said, "With The Help Of The Lord I Have Brought Forth A Man."

ஆதியாகமம் 4-1 - Genesis 4-1ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

2 - பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

English:- Later She Gave Birth To His Brother Abel. Now Abel Kept Flocks, And Cain Worked The Soil.


3 - சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.

English:- In The Course Of Time Cain Brought Some Of The Fruits Of The Soil As An Offering To The Lord .

ஆதியாகமம் 4-3 - Genesis 4-3சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.

4 - ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.

English:- But Abel Brought Fat Portions From Some Of The Firstborn Of His Flock. The Lord Looked With Favor On Abel And His Offering,

ஆதியாகமம் 4-4 - Genesis 4-4ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.

5 - காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.

English:- But On Cain And His Offering He Did Not Look With Favor. So Cain Was Very Angry, And His Face Was Downcast.

ஆதியாகமம் 4-5 - Genesis 4-5காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.

6 - அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

English:- Then The Lord Said To Cain, "Why Are You Angry? Why Is Your Face Downcast?

ஆதியாகமம் 4-6 - Genesis 4-6அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

7 - நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.

English:- If You Do What Is Right, Will You Not Be Accepted? But If You Do Not Do What Is Right, Sin Is Crouching At Your Door; It Desires To Have You, But You Must Master It."

ஆதியாகமம் 4-7 - Genesis 4-7நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.

8 - காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.

English:- Now Cain Said To His Brother Abel, "Let's Go Out To The Field." And While They Were In The Field, Cain Attacked His Brother Abel And Killed Him.

ஆதியாகமம் 4-8 - Genesis 4-8காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.

9 - கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.

English:- Then The Lord Said To Cain, "Where Is Your Brother Abel?" "I Don't Know," He Replied. "Am I My Brother's Keeper?"

ஆதியாகமம் 4-9 - Genesis 4-9கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.

10 - அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.

English:- The Lord Said, "What Have You Done? Listen! Your Brother's Blood Cries Out To Me From The Ground.


11 - இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.

English:- Now You Are Under A Curse And Driven From The Ground, Which Opened Its Mouth To Receive Your Brother's Blood From Your Hand.

ஆதியாகமம் 4-11 - Genesis 4-11இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.

12 - நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

English:- When You Work The Ground, It Will No Longer Yield Its Crops For You. You Will Be A Restless Wanderer On The Earth."

ஆதியாகமம் 4-12 - Genesis 4-12நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

13 - அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.

English:- Cain Said To The Lord , "My Punishment Is More Than I Can Bear.

ஆதியாகமம் 4-13 - Genesis 4-13அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.

14 - இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.

English:- Today You Are Driving Me From The Land, And I Will Be Hidden From Your Presence; I Will Be A Restless Wanderer On The Earth, And Whoever Finds Me Will Kill Me."

ஆதியாகமம் 4-14 - Genesis 4-14இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.

15 - அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

English:- But The Lord Said To Him, "Not So ; If Anyone Kills Cain, He Will Suffer Vengeance Seven Times Over." Then The Lord Put A Mark On Cain So That No One Who Found Him Would Kill Him.

ஆதியாகமம் 4-15 - Genesis 4-15அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

16 - அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.

English:- So Cain Went Out From The Lord 'S Presence And Lived In The Land Of Nod, East Of Eden.

ஆதியாகமம் 4-16 - Genesis 4-16அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.

17 - காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.

English:- Cain Lay With His Wife, And She Became Pregnant And Gave Birth To Enoch. Cain Was Then Building A City, And He Named It After His Son Enoch.

ஆதியாகமம் 4-17 - Genesis 4-17காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.

18 - ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.

English:- To Enoch Was Born Irad, And Irad Was The Father Of Mehujael, And Mehujael Was The Father Of Methushael, And Methushael Was The Father Of Lamech.

ஆதியாகமம் 4-18 - Genesis 4-18ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.

19 - லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.

English:- Lamech Married Two Women, One Named Adah And The Other Zillah.

ஆதியாகமம் 4-19 - Genesis 4-19லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.

20 - ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.

English:- Adah Gave Birth To Jabal; He Was The Father Of Those Who Live In Tents And Raise Livestock.


21 - அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.

English:- His Brother's Name Was Jubal; He Was The Father Of All Who Play The Harp And Flute.

ஆதியாகமம் 4-21 - Genesis 4-21அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.

22 - சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.

English:- Zillah Also Had A Son, Tubal-cain, Who Forged All Kinds Of Tools Out Of Bronze And Iron. Tubal-cain's Sister Was Naamah.

ஆதியாகமம் 4-22 - Genesis 4-22சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.

23 - லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்;

English:- Lamech Said To His Wives, "Adah And Zillah, Listen To Me; Wives Of Lamech, Hear My Words. I Have Killed A Man For Wounding Me, A Young Man For Injuring Me.

ஆதியாகமம் 4-23 - Genesis 4-23லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்;

24 - காயீனுக்காக ஏழுபழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.

English:- If Cain Is Avenged Seven Times, Then Lamech Seventy-seven Times."

ஆதியாகமம் 4-24 - Genesis 4-24காயீனுக்காக ஏழுபழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.

25 - பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பேரிட்டாள்.

English:- Adam Lay With His Wife Again, And She Gave Birth To A Son And Named Him Seth, Saying, "God Has Granted Me Another Child In Place Of Abel, Since Cain Killed Him."

ஆதியாகமம் 4-25 - Genesis 4-25பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பேரிட்டாள்.

26 - சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.

English:- Seth Also Had A Son, And He Named Him Enosh. At That Time Men Began To Call On The Name Of The Lord

ஆதியாகமம் 4-26 - Genesis 4-26சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.


Previous Chapter Next Chapter