பரிசுத்த வேதாகமம் ஆதியாகமம் அதிகாரம் 48 – Read Holy Bible Book Of Genesis Chapter 48 In Tamil With English Reference
1 - அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான்.
English:- Some Time Later Joseph Was Told, "Your Father Is Ill." So He Took His Two Sons Manasseh And Ephraim Along With Him.
2 - இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.
English:- When Jacob Was Told, "Your Son Joseph Has Come To You," Israel Rallied His Strength And Sat Up On The Bed.
3 - யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து:
English:- Jacob Said To Joseph, "God Almighty Appeared To Me At Luz In The Land Of Canaan, And There He Blessed Me
4 - நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார்.
English:- And Said To Me, 'I Am Going To Make You Fruitful And Will Increase Your Numbers. I Will Make You A Community Of Peoples, And I Will Give This Land As An Everlasting Possession To Your Descendants After You.'
5 - நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.
English:- "Now Then, Your Two Sons Born To You In Egypt Before I Came To You Here Will Be Reckoned As Mine; Ephraim And Manasseh Will Be Mine, Just As Reuben And Simeon Are Mine.
6 - இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள்.
English:- Any Children Born To You After Them Will Be Yours; In The Territory They Inherit They Will Be Reckoned Under The Names Of Their Brothers.
7 - நான் பதானைவிட்டு வருகையில், கானான் தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான்.
English:- As I Was Returning From Paddan, To My Sorrow Rachel Died In The Land Of Canaan While We Were Still On The Way, A Little Distance From Ephrath. So I Buried Her There Beside The Road To Ephrath" (That Is, Bethlehem).
8 - இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான்.
English:- When Israel Saw The Sons Of Joseph, He Asked, "Who Are These?"
9 - யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான்.
English:- "They Are The Sons God Has Given Me Here," Joseph Said To His Father. Then Israel Said, "Bring Them To Me So I May Bless Them."
10 - முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக் கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான்.
English:- Now Israel's Eyes Were Failing Because Of Old Age, And He Could Hardly See. So Joseph Brought His Sons Close To Him, And His Father Kissed Them And Embraced Them.
11 - இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள் செய்தார் என்றான்.
English:- Israel Said To Joseph, "I Never Expected To See Your Face Again, And Now God Has Allowed Me To See Your Children Too."
12 - அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடப்பண்ணி, அவனுடைய முகத்துக்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான்.
English:- Then Joseph Removed Them From Israel's Knees And Bowed Down With His Face To The Ground.
13 - பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலதுகைக்கு நேராகவும் விட்டான்.
English:- And Joseph Took Both Of Them, Ephraim On His Right Toward Israel's Left Hand And Manasseh On His Left Toward Israel's Right Hand, And Brought Them Close To Him.
14 - அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடதுகையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.
English:- But Israel Reached Out His Right Hand And Put It On Ephraim's Head, Though He Was The Younger, And Crossing His Arms, He Put His Left Hand On Manasseh's Head, Even Though Manasseh Was The Firstborn.
15 - அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,
English:- Then He Blessed Joseph And Said, "May The God Before Whom My Fathers Abraham And Isaac Walked, The God Who Has Been My Shepherd All My Life To This Day,
16 - எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.
English:- The Angel Who Has Delivered Me From All Harm -May He Bless These Boys. May They Be Called By My Name And The Names Of My Fathers Abraham And Isaac, And May They Increase Greatly Upon The Earth."
17 - தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாதபடியால், எப்பிராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுத்து:
English:- When Joseph Saw His Father Placing His Right Hand On Ephraim's Head He Was Displeased; So He Took Hold Of His Father's Hand To Move It From Ephraim's Head To Manasseh's Head.
18 - என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.
English:- Joseph Said To Him, "No, My Father, This One Is The Firstborn; Put Your Right Hand On His Head."
19 - அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.
English:- But His Father Refused And Said, "I Know, My Son, I Know. He Too Will Become A People, And He Too Will Become Great. Nevertheless, His Younger Brother Will Be Greater Than He, And His Descendants Will Become A Group Of Nations."
20 - இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.
English:- He Blessed Them That Day And Said, "In Your Name Will Israel Pronounce This Blessing: 'May God Make You Like Ephraim And Manasseh.' " So He Put Ephraim Ahead Of Manasseh.
21 - பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் என்றும்,
English:- Then Israel Said To Joseph, "I Am About To Die, But God Will Be With You And Take You Back To The Land Of Your Fathers.
22 - உன் சகோதரருக்குக் கொடுத்ததைப்பார்க்கிலும், நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன் என்றும் சொன்னான்.
English:- And To You, As One Who Is Over Your Brothers, I Give The Ridge Of Land I Took From The Amorites With My Sword And My Bow."