பரிசுத்த வேதாகமம் எபிரெயர் அதிகாரம் 6 – Read Holy Bible Book Of Hebrews Chapter 6 In Tamil With English Reference
1 - ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,
English:- Therefore Let Us Leave The Elementary Teachings About Christ And Go On To Maturity, Not Laying Again The Foundation Of Repentance From Acts That Lead To Death, And Of Faith In God,
2 - ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.
English:- Instruction About Baptisms, The Laying On Of Hands, The Resurrection Of The Dead, And Eternal Judgment.
4 - ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
English:- It Is Impossible For Those Who Have Once Been Enlightened, Who Have Tasted The Heavenly Gift, Who Have Shared In The Holy Spirit,
5 - தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
English:- Who Have Tasted The Goodness Of The Word Of God And The Powers Of The Coming Age,
6 - மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
English:- If They Fall Away, To Be Brought Back To Repentance, Because To Their Loss They Are Crucifying The Son Of God All Over Again And Subjecting Him To Public Disgrace.
7 - எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
English:- Land That Drinks In The Rain Often Falling On It And That Produces A Crop Useful To Those For Whom It Is Farmed Receives The Blessing Of God.
8 - முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
English:- But Land That Produces Thorns And Thistles Is Worthless And Is In Danger Of Being Cursed. In The End It Will Be Burned.
9 - பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும் நன்மையானவைகளும், இரட்சிப்புக்குரியவைகளுமான, காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம்.
English:- Even Though We Speak Like This, Dear Friends, We Are Confident Of Better Things In Your Case--things That Accompany Salvation.
10 - ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.
English:- God Is Not Unjust; He Will Not Forget Your Work And The Love You Have Shown Him As You Have Helped His People And Continue To Help Them.
11 - நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருந்து,
English:- We Want Each Of You To Show This Same Diligence To The Very End, In Order To Make Your Hope Sure.
12 - உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
English:- We Do Not Want You To Become Lazy, But To Imitate Those Who Through Faith And Patience Inherit What Has Been Promised.
13 - ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:
English:- When God Made His Promise To Abraham, Since There Was No One Greater For Him To Swear By, He Swore By Himself,
14 - நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
English:- Saying, "I Will Surely Bless You And Give You Many Descendants."
15 - அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.
English:- And So After Waiting Patiently, Abraham Received What Was Promised.
16 - மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.
English:- Men Swear By Someone Greater Than Themselves, And The Oath Confirms What Is Said And Puts An End To All Argument.
17 - அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.
English:- Because God Wanted To Make The Unchanging Nature Of His Purpose Very Clear To The Heirs Of What Was Promised, He Confirmed It With An Oath.
18 - நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
English:- God Did This So That, By Two Unchangeable Things In Which It Is Impossible For God To Lie, We Who Have Fled To Take Hold Of The Hope Offered To Us May Be Greatly Encouraged.
19 - அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.
English:- We Have This Hope As An Anchor For The Soul, Firm And Secure. It Enters The Inner Sanctuary Behind The Curtain,
20 - நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
English:- Where Jesus, Who Went Before Us, Has Entered On Our Behalf. He Has Become A High Priest Forever, In The Order Of Melchizedek.